என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் தர்ஷன் - நடிகை சனம் ஷெட்டி பிரிந்ததற்கு தான் காரணம் இல்லை என பிக்பாஸ் பிரபலம் ஷெரின் தெரிவித்துள்ளார்.
    நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார்.

    தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் அவரை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷன், தனது காதலியான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். 

    இந்நிலையில் ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்கத்திற்கு பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இடையிலான காதல் முறிவை மறைமுகமாக குறிப்பிட்டே அவர் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஒரு மாதமாய் நிறைய பேசப்பட்டுவிட்டது, நிறைய செய்யப்பட்டுவிட்டது. 

    ஷெரின்

    யாராவது என்னைத் தாக்க வேண்டும் என்றால் தாராளமாக செய்யுங்கள், அதற்கு நான் கையெழுத்து போட்டு தருகிறேன். நீங்கள் என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் இருந்து என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். போலி அக்கவுண்டுகளில் மறைந்து கொண்டு அவர்களை வசைபாடுவதையும் ட்ரோல் செய்வதையும் ஏற்க முடியாது.

    குறுகிய மனப்பான்மை யாரோ செய்த தவறுக்காக என்னை பழி சொல்வது, எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாது. உங்களின் குறுகிய மனப்பான்மையும் குறுகிய பார்வையும் தான் வெளிப்படுகிறது. மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் எதுவும் பேசாமல் இருக்கிறேன். 

    மக்கள் கோபமாக இருக்கிறார்கள். என்னுடைய கமென்ட் செஷனில் கொட்டித்தீர்ப்பது அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் என்றால் அவர்கள் செய்யட்டும். அது என்னையும் என்னுடைய கேர் வேல்யூஸையும் மாற்றாது. நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி, உங்களை போன்றவர்கள் என்னிடம் சண்டை போடுவதற்கும் எனக்காக சண்டை போடுவதற்கும். 

    இந்த விவகாரம் தொடர்பாக இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ தகவல் இதுதொடர்பான கேள்விகளுக்கும் ரியாக்‌ஷன்களுக்கும் இனிமேல் இதுபோன்று நான் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    எம்.எஸ். சக்திவேல் இயக்கத்தில் பிரபஞ்சன், ஆரா நடிப்பில் உருவாகி வரும் “ஒன் வே” படத்தின் முன்னோட்டம்.
    ராஜாத்தி பாண்டியன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “ஒன் வே”.  இப்படத்தை இயக்குநர் எம்.எஸ். சக்திவேல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன்ணனி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆரா அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். “கோலமாவு கோகிலா” பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார்.

    ஆரா

    மேலும் ஜோக்கர் பாவா செல்லதுரை, கன்னத்தில் முத்தமிட்டால் ஹஷி குமார், கடாரம் கொண்டான் ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், துப்பறிவாளன் பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங்காலி சினிமாவில் புகழ்பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். அஷ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார்.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்கள் வருகையை தவிர்த்தோம். இந்த விழாவுக்கு என் ரசிகர்கள் வரமுடியாம பட்ற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அரை மனசோட தான் இதுக்கு ஒத்துகிட்டேன். 

    தமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத இடத்துல இருப்பவர் விஜய் சேதுபதி. இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டீங்கனு அவர் கிட்ட ஒரு நாள் கேட்டேன். சிரிச்சுட்டே எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லிட்டு போயிட்டாரு. ரொம்ப நன்றி நண்பா. விஜய் சேதுபதி பெயர்ல மட்டும் எனக்கு இடம் கொடுக்கல மனசுலையும் இடம் குடுத்துருக்காரு.

    விஜய்

    லோகேஷ் கனகராஜ், மாநகரம் மூலமா திரும்பி பாக்க வச்சாரு. கைதிய திரும்பி திரும்பி பாக்க வச்சாரு. மாஸ்டர் என்ன பண்ண போறார்னு நானும் காத்திட்டிருக்கேன். நண்பர் அஜித் ஸ்டைல்ல வரலாம்னு தான் இன்னைக்கு கோட் சூட்ல வந்துருக்கேன்னு விஜய் கூறினார். 

    இதையடுத்து ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், வாழ்க்கை நதி மாதிரி நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க, கல் எறிவாங்க. ஆனா நம்ம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும் என தெரிவித்தார். 

    இப்போ இருக்கிற தளபதி, 20 வருஷத்துக்கு முன் இருந்த இளைய தளபதி கிட்ட எதாவது கேட்கனும்னா என்ன கேப்பீங்கனு தொகுப்பாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய்,  ரெய்டுலாம் இல்லாம நிம்மதியா... அப்போ வாழ்ந்த வாழ்க்கை கேட்பேன் என கூறினார். உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும்னு சொல்லி தனது பேச்சை முடித்துக்கொண்டார் விஜய்.
    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்துல நான் தான் ஹீரோ என கூறினார்.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: மாஸ்டர் படத்தோட போஸ்டர் வெளியிடுவதற்கு முன் படக்குழுவினருக்கு, விஜய் சார் போன் பண்ணி என்னோட பெயரையும் சேர்க்க சொன்னாராம். அத கேட்ட உடனே எனக்கு ஷாக் ஆயிடுச்சு. 

    விஜய்

    எல்லா நடிகர்களுக்கு அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கனும்னு நினைக்கிறவர் விஜய்.  நீங்க ஏன் அதிகமாக பேசுறதில்லனு விஜய் சார்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் நான் பேசுறதவிட அதிகமா கவனிப்பேன்னு சொன்னார். இந்த படத்துல ஒவ்வொரு காட்சிக்கும் அவர் மெனக்கிட்டிருகார். இந்த படத்துல நான் தான் ஹீரோ. அது எப்படினா, விஜய்க்கு நான் வில்லன்னா, எனக்கு விஜய் வில்லன். அப்போ நான் தான ஹீரோ. 

    இவ்வாறு அவர் பேசினார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சாந்தனு, 10 வருஷமா நடிச்சாலும் மாஸ்டர் தான் என்னோட முதல் படம்னு சொல்லுவேன் என கூறியுள்ளார்.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    சாந்தனு, விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சாந்தனு பேசியதாவது: கிட்ட தட்ட பத்து வருஷமா நடிக்கிறேன். ஆனா இது தான் என்னோட முதல் படம்னு சொல்லுவேன். மாஸ்டர் படம் தான் என்னை மக்கள் கிட்ட கொண்டு போயி சேர்க்கும்னு நம்புறேன்”. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  
    மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஜய் கருப்பு நிற கோர்ட் சூட்டில் மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, டிரைவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
    2005ல் தெலுங்கில் பூரி ஜெகநாத் டைரக்சனில் நாகார்ஜுனா ஜோடியாக சூப்பர் என்கிற படத்தில் அறிமுகமான அனுஷ்கா, தற்போது தனது திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 15ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அனுஷ்காவுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

    இந்தநிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி என்பவர் அனுஷ்காவின் தாராள மனம், பிறருக்கு உதவி செய்யும் குணம் குறித்து ஆச்சர்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஜார்ஜியா நாட்டிற்கு ஒருமுறை தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் சென்றிருந்தபோது, ஷாஷா என்கிற ரஷ்ய டிரைவரை சந்திக்க நேர்ந்துள்ளது. 

    அனுஷ்கா

    அப்போது அவர் தெலுங்கு தயாரிப்பாளர் என்பதை அறிந்து கொண்ட ஷாஷா, நடிகை அனுஷ்கா பற்றி சிலாகித்து கூறி இருக்கிறார். இரண்டாம் உலகம் படப்பிடிப்பிற்காக அனுஷ்கா ஜார்ஜியா வந்தபோது ஷாஷா தான் அவருக்கு கார் டிரைவராகவும் பாதுகாவலராகவும் இருந்துள்ளார். ஒருநாள் பைனான்சியர்கள் பணம் கட்டவில்லை என அவரது காரை பறிமுதல் செய்து சென்றுவிட்டார்கள். 

    அன்றைய தினம் படப்பிடிப்பிற்கு ஷாஷாவால் போக முடியவில்லை. மறுநாள் விபரம் அறிந்த அனுஷ்கா, அங்கிருந்து படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன் அந்த டிரைவருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துவிட்டுத்தான் இந்தியா கிளம்பியுள்ளார்.
    விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அந்த கண்ண பாத்தாக்கா எனும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்திற்காக யுவன் பாடியுள்ளதால், அப்பாடலுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதேபோல் பொலக்கட்டும் பற பற எனும் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் பாடியுள்ளார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழா தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பீதியால் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, சென்னை, பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பீதியால் அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தனது திருமண நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளதாக மலையாள நடிகை தெரிவித்துள்ளார்.
    வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். பல மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

    உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன் கொச்சியில் ஒரு நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் கொச்சியில் நடைபெற இருந்தது.

    இந்நிலையில் தனது திருமண நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளதாக உத்தரா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தள்ளி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ‘எங்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நீங்கள் ஏற்கனவே டிக்கெட் புக் செய்து வைத்திருப்பீங்கள். இருந்தாலும் இதை சொல்வதற்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட நாளில் எங்களின் தாலிகட்டு நிகழ்ச்சி கோவிலில் வைத்து நடைபெறும். அதுகுறித்த அறிவிப்பை தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது திருமண நாளை தெரிவிக்கவில்லை.
    ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரகுரு’ படத்தின் விமர்சனம்.
    கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார்.

    அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு போகாமல் டிடெக்டிங் ஏஜென்சியில் பணி புரியும் மகிமா நம்பியாரிடம் செல்கிறது. அவரும் தீவிர விசாரணையில் இறங்குகிறார். வங்கியில் திருடிய பணத்திற்காக விக்ரம் பிரபுவை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறது.

    அசுரகுரு விமர்சனம்

    ஒரு கட்டத்தில் மகிமா, ஹவாலா பணத்தை கொள்ளையடித்தது விக்ரம் பிரபு என்று தெரிந்துக் கொள்கிறார். இறுதியில் விக்ரம் பிரபுவை போலீசில் மகிமா சிக்க வைத்தாரா? கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு, தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மெனகெட்டிருக்கிறார். நாயகியாக வரும் மகிமா, துணிச்சலான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். நண்பராக வரும் ஜெகன், இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வரும் யோகி பாபு, இருவரும் கொடுத்த வேலை செய்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜ் நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    அசுரகுரு விமர்சனம்

    நாயகன்கள் கொள்ளையடித்து பணம் சேர்க்கும் படங்களின் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது. கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். ஜெகன், யோகிபாபு ஆகியோரை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம்.

    கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்களையும், பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘அசுரகுரு’ அசத்தல் குறைவு.
    ×