என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகை ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக் டெய்லரை திருமணம் செய்து அங்கேயே வசிக்கிறார்.
தற்போது இந்தியா திரும்பி உள்ள அவர் கூறும்போது, “நான் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் விமானத்தில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது இந்தியா திரும்பியபோது, விமானத்தில் கூட்டமே இல்லாமல் காலியாக இருந்தது.

என்னை பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன். தேவையற்ற பயணங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
‘எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான்’. இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம் என்று ரஜினிகாந்த் கூறினார்.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பியர் கிரில்சுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகி இருக்கும் காட்சியில் பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கிறார். அதில், ரஜினிகாந்த் அவரது வாழ்க்கை குறித்து கூறியிருப்பதாவது:-
‘எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான்’. இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம். டிஸ்கவரி சேனலுக்காக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதவிர சினிமா சண்டை காட்சிகள், சொந்த வாழ்க்கை, நீர்வளத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பியர் கிரில்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளித்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகி இருக்கும் காட்சியில் பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கிறார். அதில், ரஜினிகாந்த் அவரது வாழ்க்கை குறித்து கூறியிருப்பதாவது:-
‘எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான்’. இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம். டிஸ்கவரி சேனலுக்காக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதவிர சினிமா சண்டை காட்சிகள், சொந்த வாழ்க்கை, நீர்வளத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பியர் கிரில்ஸ் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில் அளித்து உள்ளார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், நான்கு வருடங்களுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின், படிப்பில் கவனம் செலுத்தியல லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டிருந்தார். இந்நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.

விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். இந்த புதிய படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். மற்றோரு ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அவர்கள் விமர்சித்தது எனக்கு சங்கடமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
திருமணமாகி விட்டால், அவர்கள் அணியும் ஆடைகள் முழுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன என நடிகை சமந்தா கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் வித்தியாசமான உடைகளைத் தான் நான் அணிந்து செல்கிறேன்.
அதை வைத்து, சமூக வலைதளம் மூலம் என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதுதான் எனக்கு நிறைய அச்சத்தை ஏற்படுத்தியது. எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. திருமணத்துக்குப் பின், ஒரு நிகழ்ச்சிக்கு நான் மார்டனாக உடை அணிந்து சென்றேன்.
அப்போது, என்னுடைய உடை குறித்து சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அது எனக்கு மிகப் பெரிய சங்கடத்தை அளித்தது. ஆனாலும், அடுத்த முறையும் அதே மாதிரியே நான் உடையணிந்து சென்றேன். ஆனால், இரண்டாவது முறை அப்படி சென்றபோது, முதல் முறை இருந்த அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் எதுவும் இல்லை. ஆக, உடை விஷயத்தில் கூட, எல்லோரையும் நாம் பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது.

எல்லா விஷயத்துக்கும் முதல் அடிதான் முக்கியம். அதற்காக, நான் துணிச்சலான செயலை செய்து விட்டதாகச் சொல்லவில்லை. உடை அணியும் விஷயம், ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்கிற போது, அடுத்தவர் ஏன் அதில் மூக்கை நுழைக்கின்றனர் என புரியவில்லை. இருந்தாலும், அது குறித்தெல்லாம் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை என்பதுதான் என்னுடைய அனுபவம். திருமணம் ஆகிவிட்டால், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்றார்.
நடிகை லாவண்யா திரிபாதி கருக்கலைப்பு செய்ததாக கூறிய நடிகர் ஸ்ரீராமோஜூ சுனிஷித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோதஜூ சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை தான் 2015-ல் திருமணம் செய்ததாகவும், தன்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லாவண்யா மலிவான விளம்பரத்திற்காக தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் தகவல்களை கூறிய சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை ஸ்ரீராமோஜூ மீது வழக்குப் பதிந்தது. இந்தநிலையில் தலைமறைவாகிவிட்ட அவரை காவல்துறை தேடி வருகிறது.
பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், 7 ஆண்டுகளாகி விட்டன. எதற்காக நமது நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு இவ்வளவு தாமதம் என்பதைப் பார்க்க வேண்டும்.

கண்டிப்பாக வரும் காலத்தில் இது மாதிரியான குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறக்கூடாது. நமது அரசாங்கம் இது தொடர்பாகச் சட்டத்தைக் கடுமையாக்குவார்கள் என நம்புகிறேன். பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும்’’ என்றார்.
தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி, தற்போது புதிய படத்தில் ஆராய்ச்சி மாணவியாக நடித்துள்ளார்.
தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக பார்வதி நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்கள் பிரச்சனை, அரசியல் விவகாரம் என ஏதோ சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை மையப்படுத்தியே இதன் கதையும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தேசியவிருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பார்வதிக்கு ஜோடியாக ரோஷன் மேத்யூ நடித்துள்ளார்.
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் நடிகை மீனா உறுதியாக இருக்கிறாராம்.
நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொண்ட கதாநாயகிகளை பெரும்பாலும்,`அம்மா' வேடத்துக்கு தள்ளிவிடுவார்கள்.

ஆனால் மீனாவோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்'' என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவர், சிவா-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் `அண்ணாத்த' படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க மீனா முடிவு செய்து இருக்கிறாராம்.
எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் முன்னோட்டம்.
தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வேட்டை நாய். நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடித்துள்ளார். மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் பேசும்போது "படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை என கூறியுள்ளார்
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து நடிகை அலியா பட் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதேபோல் பாலிவுட் நடிகை அலியா பட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில், அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்தடுத்து தள்ளிப்போவதாலும், கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்பதாலும் இப்படத்திலிருந்து அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார்.
அதர்வா நடிப்பில் கடந்த வருடம் ‘100’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து, குருதி ஆட்டம், தள்ளி போகாதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரம்மன், மாயவன் படத்தில் நடித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கும் இப்படத்தில், அதர்வா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் நந்தா வில்லனாக நடிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் எனவும் இயக்குனர் ரவீந்திர மாதவா தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருந்த கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேன்ஸ் திரைப்பட விழாவை தள்ளிவைக்க முடிவு எடுத்துள்ளோம்.

இதற்கான சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். அதே நேரத்தில் பிரான்ஸ் அதிபரின் முழு அடைப்பு உத்தரவை அனைவரும் மதித்து இதுபோன்ற இக்கட்டான சூழலில் ஒட்டு மொத்த உலகத்தோடும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 12-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறவிருந்த கேன்ஸ் திரைப்பட விழா ஜூன் மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






