என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா நடிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

    காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் டீகே. ஒளிப்பதிவு பணிகளை விக்கி கவனிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை பிரவீன்.எச்.எல். மேற்கொண்டுள்ளார். 
    கொரோனா ஊரடங்கு காரணமாக ராஜமவுலியின் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது.

    ஆர்ஆர்ஆர் படக்குழு

    தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 2021-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார். மாவட்ட எல்லையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர். இருப்பினும் கொரோனா அதிகம்  பாதித்துள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து அவர் வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
    மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, அந்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா ரவி. இவர் ஹீரோயினாக நடித்துள்ள காவல்துறை உங்கள் நண்பன் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங் கலைஞரான ரவீனா நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு ரவீனா தான் டப்பிங் பேசியுள்ளார்.

    ரவீனா ரவி

    மாஸ்டர் படத்தில் டப்பிங் பேசியபோது அதில் விஜய்யின் கதாபாத்திரத்தை கண்டு ஷாக் ஆனதாக கூறியுள்ளார். வழக்கமான விஜய் படம் போல் மாஸாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சில காட்சிகளை பார்த்தபோது, விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கிட்டார்னு தெரியலையே என தோன்றியதாக ரவீனா தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சமயத்தில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    கஸ்தூரி

    அந்தவகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு செய்வது தவறு. நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
    பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி பாண்டியன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். 
    மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    வெங்கட் பிரபு

    அந்தவகையில் இயக்குனர் வெங்கட் பிரபு வட மாநிலங்களில் மதுபான கடைகள் முன்னால் ஏராளமானோர் திரண்டு மதுபானங்கள் வாங்கி குவித்த வீடியோவை பார்த்துவிட்டு வெளியிட்ட பதிவில் “இந்த வீடியோக்களை பார்க்கும்போது, எல்லா மதுபான கடைகளும் கொரோனாவை பரிமாறப்போகிறது என்று உணர்கிறேன். நிறைய பேர் வாங்கி இருப்பு வைத்து விட்டதாக சொல்வார்கள். ஏழைகள் என்ன செய்வார்கள். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆகிவிட்டது. பாதுகாப்பு முக்கியம்” என்று கூறியுள்ளார்.
    தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து கவிஞர் வைரமுத்து மதுக்கவிதை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    அந்தவகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், மதுவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். “மது என்பது அரசுக்கு வரவு; அருந்துவோருக்கு செலவு. மனைவிக்கு சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை. ஆனால் என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?” என்று கூறியுள்ளார்.

    பெண்கள் மது அருந்துவதை கேலி செய்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட இயக்குனருக்கு பிரபல பாடகி பதிலடி கொடுத்துள்ளார்.
    இந்தி, தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா. சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை டைரக்டு செய்தவர். இந்த படம் தமிழில் வந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் இயக்கி வெளியிட்டார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிடுவது வழக்கம். தற்போது பெண்கள் மது வாங்குவதை கேலி செய்து, எதிர்ப்பில் சிக்கி உள்ளார்.

    கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் கர்நாடகாவில் மதுக்கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது. இளம்பெண்களும் மது வாங்க திரண்டனர். அவர்களுக்கு தனி கியூவை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மது வாங்க கியூவில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

    இந்த புகைப்படத்தை ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “மதுபான கடைகள் முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்” என்று கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசினர்.

    இந்த நிலையில் ராம் கோபால் வர்மா கருத்துக்கு பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது. குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’ என்று கூறியுள்ளார்.
    மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி. விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.

    இந்த நிலையில் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன. 

    பிரகதி

    பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை”.

    இவ்வாறு பிரகதி கூறினார்.
    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சத்தை கடந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
    அனுஷ்கா
    ''நிபந்தனையற்ற உங்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி. நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
    இளம் இசையமைப்பாளரான லிடியனுக்கு இசைஞானி இளையராஜா வீடியோ கால் மூலம் வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
    உலகளவில் மிகவும் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம். 14 வயதான லிடியன் அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் பரிசை வென்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பினார்.
     இளையராஜாவுடன் வீடியோ காலில் பேசிய போட்டோவை வெளியிட்ட லிடியன்.
    இந்நிலையில் லிடியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இசைஞானி இளையராஜாவுடன் வீடியோ காலில் பேசிய போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள், எங்களது ரீசன்ட் வீடியோக்களை பார்த்து வீடியோ கால் மூலம் பாராட்டினார். இதற்கு நானும் என் குடும்பமும் பாக்யம் செய்திருக்கிறோம்'' என அவர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். 
    ×