என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோமாளி படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.
    ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இத்திரைப்படத்தில்  சம்யுக்தா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போஸ்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
    வித்தியாசமான போஸ்களுடன் சம்யுக்தா ஹெக்டே
    இந்நிலையில் சம்யுக்தா தற்போது நடத்தியுள்ள போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இந்த புதிய போட்டோஷூட்டை வீடியோ கால் மூலம் நடத்தியிருக்கிறார்.

    ஊரடங்கு நேரத்தில் இப்படி வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் சம்யுக்தா. 
    அது நான் இல்லை... அது பற்றி எதுவும் தெரியாது என்று காமெடி நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளதாக வேகமாக செய்திகள் பரவி வருகிறது.

    ட்விட்


    மேலும் அந்த ட்விட்டர் கணக்கில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. "நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்."

    "கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோசம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இது குறித்து நடிகர் செந்திலிடம் விசாரித்த போது, அது நான் இல்லை. டுவிட்டர் என்றால் என்ன... அது பற்றி எதுவும் தெரியாது. அது போலியானது என்று கூறியுள்ளார்.
    அஜித்தை பற்றி மிக மோசமான மீம் ஒன்றுக்கு விஜய் பட இயக்குனர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

    இந்நிலையில் நேற்று கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மது வாங்க மக்கள் அதிக அளவில் வரிசைகட்டி நின்றனர். பெண்களும் கூட வரிசையில் நின்றி மது பாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

    இயக்குனர் ஜான் மகேந்திரன் கண்டனம் தெரிவித்த மீம்


    இந்நிலையில் நடிகர் அஜித் பல வருடங்கள் முன்பு தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த போது எடுத்த புகைப்படத்தை சிலர் ட்விட்டரில் பதிவிட்டு "பெங்களூரில் மது வாங்க நின்ற கூட்டத்தின் ஒரு பகுதி" என சிலர் ட்விட் செய்துள்ளனர். இது தொடர்பாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அஜித்தின் புகைப்படத்தை இப்படி தவறாக பயன்படுத்தியிருப்பதற்கு பிரபல இயக்குனர் ஜான் மகேந்திரன் கண்டனம் தெரிவித்து "Very cheap posting..." என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த டுவிட் நீக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் ஜான் மகேந்திரன் விஜயை வைத்து சச்சின் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சமீபத்தில் டான் டோனி என்பவரை விவாகரத்து செய்து கொண்ட நடிகை மேக்னா வின்செண்ட், பிரபல நடிகரை 2வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்தவர் மேக்னா வின்செண்ட். இந்த படத்தில் ஆனந்தி, சந்திரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பின் மீண்டும் சீரியல்களில் மேக்னா நடிக்கத் தொடங்கியதால்தான் இந்த கருத்து வேறுபாடு என்று கூறப்படுகிறது.  சமீபத்தில் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

     நடிகர் விக்கி மற்றும் மேக்னா


    இந்த நிலையில் டான் டோனி ஏற்கனவே மறுமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேக்னாவும் மறுமணத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்த நடிகர் விக்கி மற்றும் மேக்னா இடையே காதல் மலர்ந்ததாகவும், இந்த காதல் விரைவில் திருமணத்தில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜயுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பலருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணமில்லாமல் பசியோடு பலரும் போராடி வருகிறார்கள்.

    பசி என்றொரு நோய் இருக்கு... விஜய் சேதுபதி


    இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ஆர் ஜே பாடகியான மிகவும் பெயர் பெற்ற சுசித்ரா தன்னுடைய முதல் கிரஷ் யாரென்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ரேடியோவில் ஆர்.ஜேவாக பெயர் பெற்றவர் சுசித்ரா. இவர் டிவி நிகழ்ச்சி  தொகுத்து வழங்கினார். பின்னர், திரைப்பட பாடகியாகவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

    2017-ல் நடிகர்கள், நடிகைகள் படங்கள் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியானதால் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானார்.

    தளபதி விஜய்


    இந்நிலையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில், 'இப்போது எனது யூடியூப் சேனல் மூலம், நான் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன். சுச்சி லீக்ஸ் பிரச்சனையின் பிரஷர் தாங்க முடியாமல், நான் ஒரு வருடம் லண்டனில் குக்கிங் படித்தேன். அதன் காரணமாகவே இப்போது குக்கிங் வீடியோக்களை பகிர்ந்து வருகிறேன்.

    அவரது முதல் கிரஷ் பற்றி கேட்டதற்கு, தளபதி விஜய்தான் தன் முதல் கிரஷ் என  பதில் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.
    தமிழ் திரையுலகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடலை பாரதிராஜாவும், பாக்யராஜும் வெளியிட இருக்கிறார்கள்.
    தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல இசையமைப்பாளர் கோட்டி அவர்களின் இசையில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றோர் பங்கு பெற்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் மிகவும் பிரபலமானது.

    அந்த பாடலுக்கான தமிழ் வரிகளை தமிழ் இயக்குனர் ஆஸிப் குரைஷி எழுத, கோட்டி இசையமைத்து பாட, நடிகர்கள் நட்டி, ஸ்ரீமன், உதயா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த் மற்றும் இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு போன்ற தமிழ் திரையுலகினர் பங்கு பெறும் கொரோனா விழிப்புணர்வு பாடலை தமிழ் திரையுலகின் சார்பாக தமிழ் திரையுலகின் பிதாமகர்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் இன்று மாலை 5 மணிக்கு டிவிட்டர் மற்றும் முகநூலில் வெளியிடுகிறார்கள்.
    மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, அப்படத்தின் வசூல் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    விஜய் - அட்லீ கூட்டணியில் கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதற்கு காரணம் மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தான் என செய்திகள் பரவின.

    முரளி, விஜய்

    இதற்கு அந்த தயாரிப்பு நிறுவனமும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ்  முரளி, சமீபத்திய பேட்டியில் மெர்சல் படம் குறித்து பேசியுள்ளார். அவர், 'மெர்சல் வெற்றிப்படம் தான். தோல்வி படம் என கூறுவது உண்மையல்ல. விஜய்யுடன் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு, மீண்டும் இணைவது குறித்து பேசுவோம்' என தெரிவித்துள்ளார்.
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி உள்ள பார்ட்டி படத்தின் முன்னோட்டம்.
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    பார்ட்டி படக்குழு

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு எழிலரசு குணசேகரன் வசனம் எழுதியுள்ளார். கங்கை அமரன், கருணாகரன்.பி, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
    கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்துள்ளார்.
    விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். சமீபத்தில் இவரின் 25-வது படமான கேப்மாரி ரிலீசானது. இவர் கைவசம் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி போன்ற படங்கள் உள்ளன.

    வாணி போஜன்

    இந்நிலையில், இவர் அடுத்ததாக வெப் தொடர் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இவர் அறிமுகமாகும் வெப் தொடரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர் சாருகேஷ் இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரில் ஜெய்க்கு ஜோடியாக 'ஓ மை கடவுளே' படத்தில் நடித்து பிரபலமான வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
    தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி, தாமாக முன்வந்து ரூ.1 கோடி சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். அதன்பிறகு இயல்பு நிலை திரும்பி சினிமா உலகம் புத்துயிர் பெற எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோல் பாதியில் நிற்கும் படங்களால் மேலும் ரூ.200 கோடி முடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்துவரும் படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

    விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை

    விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்ற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்திலும், ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் ‘காக்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

    தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த 3 படத்திற்காக அவர் சுமார் 1 கோடி ரூபாய் சம்பளத்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள் டி சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  
    சிம்புவை வைத்து தான் இயக்கம் படம் பாதியில் நின்றதால், கேஜிஎப் நடிகருக்காக பிரபல இயக்குனர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி உள்ளார்.
    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

    இந்நிலையில், இயக்குனர் நார்தன், இந்த இடைவேளையில் வேறு ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டாராம். இப்படத்தில் கேஜிஎப் நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்தபின் யஷ், நார்தன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×