என் மலர்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி, தாமாக முன்வந்து ரூ.1 கோடி சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். அதன்பிறகு இயல்பு நிலை திரும்பி சினிமா உலகம் புத்துயிர் பெற எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோல் பாதியில் நிற்கும் படங்களால் மேலும் ரூ.200 கோடி முடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்துவரும் படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்ற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்திலும், ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் ‘காக்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த 3 படத்திற்காக அவர் சுமார் 1 கோடி ரூபாய் சம்பளத்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள் டி சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிம்புவை வைத்து தான் இயக்கம் படம் பாதியில் நின்றதால், கேஜிஎப் நடிகருக்காக பிரபல இயக்குனர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி உள்ளார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.
இந்நிலையில், இயக்குனர் நார்தன், இந்த இடைவேளையில் வேறு ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டாராம். இப்படத்தில் கேஜிஎப் நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்தபின் யஷ், நார்தன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான நந்தா, சொந்த ஊர் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கி உதவியுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்காக நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் நந்தா, கோவை அருகே உள்ள தனது சொந்த ஊரான சென்றம்பாளையம் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். நந்தாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு அந்த கிராமத்து மக்கள் நன்றி கூறியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே தியாகசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அஜித் ரசிகர்களான ராஜேஸ், ஆகாஷ், விஜயகுமார், மணி ஆகிய 4 பேர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தியாகசமுத்திரம் வயல் திடலில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று கேக் வெட்டியதோடு மட்டுமல்லாமல், பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் இதனை முகநூலில் வெளியிட்டுள்ளனர்.
தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி அஜித்குமார் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அஜித் கூறியிருந்தபோதும், அதைமீறி அவரது ரசிகர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபானம் வாங்க இளம் பெண்கள் வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரபல இயக்குனர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17-ன் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர்.
இதனிடையே பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான கடையின் முன்பு இளம் பெண்கள் மதுபானம் வாங்க வரிசையில் நின்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men 🙄 pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் விமர்சித்துள்ளார். பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ’இங்கே பாருங்கள் மதுபான கடையின் முன் யார் நிற்கிறார்கள் என்று? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்’ என பதிவிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை, கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர்.
நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.
நடிகர் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் தன்னை பற்றி நடிகர் ஒருவர் அவதூறாக பேசியதாக நடிகை ரஞ்சனி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல முன்னாள் கதாநாயகி ரஞ்சனி. இவர் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், முத்துக்கள் மூன்று, உரிமை கீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
திருமணத்துக்கு பிறகு கேரளாவில் வசிக்கும் ரஞ்சனி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். இந்த உறுப்பினர்களுக்கென்று பிரத்யேகமான ‘வாட்ஸ்-அப்’ குரூப் உள்ளது. நடிகர்கள் நாசர், கார்த்தி, விஷால், மனோபாலா, ரஞ்சனி, குட்டி பத்மினி உள்பட பலர் இந்த குரூப்பில் உள்ளனர். இதில் நடிகர் சங்கம் தொடர்பான தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா தொடர்பான விஷயங்களை பதிவிட்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த நாடக நடிகரான வாசுதேவனுக்கும் ரஞ்சனிக்கும் இடையே இந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் மோதல் நடந்துள்ளது. வாசுதேவன் தன்னை பற்றி அவதூறான வார்த்தையை பயன்படுத்தியதாக ரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார். அவரை கண்டித்தார். மேலும் சில நடிகர்கள் ரஞ்சனிக்கு ஆதரவாக பேசினர்.
இதற்கு விளக்கம் அளித்த வாசுதேவன், “நீங்கள் சினிமா நடிகை, நான் நாடக நடிகர். இருவர் தொழிலும் வேறு என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று கூறினார். இதனை ரஞ்சனி ஏற்கவில்லை. அவர் மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். வாசுதேவனும், ரஞ்சனி தன்னை அவதூறாக பேசியதாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அசோக் செல்வன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. இப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் உருவாகிறது. இதை அனி சசி இயக்குகிறார். நித்யா மேனன், ரீத்து வர்மா ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதையடுத்து அசோக் செல்வன் நடிக்கும் படத்தை புதிய பெண் இயக்குனர் ஸ்வாதினி இயக்குகிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அசோக் செல்வன் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தேசிய ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).
இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30). இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.
இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப் பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.
பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் முதல்முறையாக இணைய இருக்கிறார்.
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
விஜயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்தப் படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது இசையமைப்பாளர் தமன் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'.
இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிரஞ்சீவி 'ஆச்சார்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் 'வேதாளம்' படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள்.
இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிரஞ்சீவி 'ஆச்சார்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் 'வேதாளம்' படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள்.
200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் நடனம் ஆடலாம் என்று பிரபல நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான் நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.






