என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் நடனம் ஆடலாம் என்று பிரபல நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.
    சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

    நடிகை ஸ்ரேயா


    கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான் நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.

     இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜயின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
    சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை எடுத்து முடித்துள்ளார் சுதா கொங்கரா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது. சூரரைப் போற்று படத்தை அடுத்து சுதா, விஜய்யை வைத்து படம் இயக்க போகிறார் என்று கூறப்பட்டது.

    விஷ்ணு விஷால் ட்விட்டர்


    இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 22ம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாக சுதா டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனால் சமூக வலைத்தளத்தில் விஜய்யின் அடுத்த படத்தை சுதா இயக்குவதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குனர் சுதா எந்த சமூக வலைத்தளத்தில் இல்லை. அவரது பெயரில் போலி கணக்குகள் இருக்கிறது. அதை நம்பாதீர்கள் என்று சுதா கூறியதாக விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார்.
    அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் என்று விஜய், அஜித் பற்றி பிரபல நடிகை கருத்து தெரிவித்து உள்ளார்.
    மும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    நடிகை பூனம் பஜ்வா


    தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில், டுவிட்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர், அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஆனதாகவும் கூறியுள்ளார்.

    விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என பளிச்சென கூறியுள்ளார். அஜித் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகை பூனம் பஜ்வா, சிறந்த முன்னுதாரணம் மற்றும் ஹேண்ட்ஸம் என பதிலளித்துள்ளார். மேலும், தனக்கு பிடித்த படம் விஸ்வாசம் எனவும் கூறியுள்ளார்.
    என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் என்று இயக்குனரிடம் நடிகை பற்றி சமந்தா கூறியுள்ளார்.
    2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.

    அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.

    சாய் பல்லவி, சமந்தா


    இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள் படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.

    இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார். அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.
    மதுரையில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமுக்கு சென்று நடிகர் அபி சரவணன் உதவி செய்து இருக்கிறார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு  ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் ஆட்டம் கண்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

    நடிகர் அபி சரவணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த காட்சி


    இந்நிலையில், மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட நடிகர் அபி சரவணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது மதுரையில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உதவி இருக்கிறார். அங்கு இருக்கும் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 1300 நபர்களுக்கும், மதுரையில் இருக்கும் எளிய 300 குடும்பங்களுக்கும் 1 வாரத்திற்கு தேவையான 13 வகையான காய்கறிகள் மற்றும் அரிசிகளை நண்பர்கள் உதவியுடன் கொடுத்திருக்கிறார்.

    மேலும் திருநங்கைகள் 50 பேருக்கும், நெசவாளர்கள் 50 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவைகளை கொடுத்திருக்கிறார்.

    தினக்கூலியை நம்பி இருக்கும் இலங்கை தமிழர் அகதிகள் வறுமையில் இருப்பதை  அறிந்த அபி சரவணன், இவ்வாறு உதவி இருக்கிறார். மேலும் நம் நாட்டு மக்களுக்கு உதவுவது போல, நம் நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் உதவுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மூளையில் கட்டி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார். 

    சாம் லாய்ட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மறைந்த சாம் லாயிட்டுக்கு வனேஸ்ஸா என்ற மனைவியும், வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாய்ட்டின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக உள்ள புஷ்பா படத்தின் முன்னோட்டம்.
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. 

    செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், பாபி சிம்ஹா வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா கிராமத்து பெண்ணாக நடிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
    கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து அமீர்கான் ஏழை மக்களுக்கு கொடுத்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள். இதனிடையே நடிகர் அமீர்கான். ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் பணம் வைத்து நூதனமான முறையில் நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் பரவின.

    இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்துவந்த அமீர்கான். தற்போது டுவிட்டரில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் போலியான தகவலாக இருக்கலாம் அல்லது அதை செய்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என விருப்பப்பட்டிருப்பார்" என பதிவிட்டுள்ளார். 
    டுவிட்டரில் தனது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதை அறிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கைவசம்  ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இவருக்கு தமிழை போல் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

    சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தனது பெயரில் போலி கணக்குகள் செயல்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

    இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "நான் டுவிட்டரில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நிர்வகித்து வருகிறேன். எனது பெயரில் பல போலியான டுவிட்டர் கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். டுவிட்டர் நிறுவனம் போலியான கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த கொரோனா அச்சுறுத்தலால் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் மேலும், எனது கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆகையால் இந்தக் கணக்கை மட்டும் பின்தொடருங்கள் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட உள்ளனர். இதனிடையே மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது. 

    இந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம்,  ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய்

    ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா, தளபதி விஜய் தான் தன்னுடைய பேவரைட் நடிகர் என தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், நடிகை ராசி கண்ணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய பேவரைட் தமிழ் நடிகர் யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், தளபதி விஜய் சார் என தெரிவித்தார். மேலும் தனக்கு பிடித்த ஹீரோயின் சமந்தா என்றும் ராசி கண்ணா கூறினார். 

    கதைத்திருட்டு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட ஹீரோ திரைப்படம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். 

    ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
    இந்நிலையில் இப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூடவே, 
    “களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல்,” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.
    ×