என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே மே 10-ந்தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர். பின்னர் ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும், மே 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்பு மனுக்களை சங்க அலுவலகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் தனி அதிகாரி அறிவித்து இருந்தார்.

    ஆனால் கொரோனா ஊரடங்கை வருகிற 17-ந்தேதிவரை நீட்டித்து இருப்பதால் தேர்தல் பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதையடுத்து தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த இயலாத நிலை உள்ளது என்றும், புதிய தேர்தல் அட்டவணை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

    இந்த தேர்தலில் டி.சிவா, தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர். பாரதிராஜா, எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், என்னை மிரட்டி இருக்காங்க என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மாதவன். சமீபத்தில் இவர் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 

    இவர் கல்லூரி நாட்கள் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ''எனக்கு காலேஜ்ல நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. எனக்கு இருந்த நண்பர்களில் நிறைய பேர் பொண்ணுங்களா இருந்தாங்க. அப்படிதான் சொல்லனும். 

    எப்பவுமே என்னை சுத்தி பெண்கள் இருக்கிறதுனால, சீனியர்ஸ் என்னை மிரட்டி இருக்காங்க. காலேஜ் ரவுடியிசம், சண்டையிலயும் என் பங்கு இருந்துருக்கு'' என்று கூறியுள்ளார்.
    மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து சௌந்தர ராஜா முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா நோயினால் ஏறக்குறைய அணைத்து தரப்பு மக்களும் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். மிகவும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கின்றனர். இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது, மேலும் பல மக்களின் நிம்மதியையும் கெடுக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, மக்கள் நலன் கருதி இதை மறு பரிசீலனை செய்யுங்கள்.
    ஊரடங்கு உத்தரவால் திரை உலகம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா படத்திற்காக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளம் பேசியுள்ளார்.

    சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாம். இதனால் ஊரடங்கு முடிந்து நிலைமை சீரானபின் தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம் ராஷ்மிகா. 
    என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள் என்று சுப்ரமணியபுரம் சுவாதி வருத்தமாக கூறியிருக்கிறார்.
    ட்விட்டரில் போலி கணக்குகள் அதிகரித்து வருகிறது. நேற்று காமெடியன் செந்தில் ட்விட்டரில் இணைந்துவிட்டார் என கூறி ஒரு அறிக்கை வைரலானது. ஆனால் அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது பின்னர் தான் தெரியவந்தது.

    இந்நிலையில் சுப்ரமணியபுரம் படம் மூலம் மிகவும் பிரபலமான சுவாதி தனது பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் கூறியுள்ளார்.

    சுவாதி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு


    இது பற்றி ஸ்வாதி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது..

    "@SwathiReddyOffl" என்ற ட்விட்டர் ஐடி என்னுடையது அல்ல. நான் ட்விட்டரில் இல்லை. இணையும் எண்ணமும் இல்லை. நான் பேஸ்புக் பயன்படுத்துவது இல்லை. அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் ஒன்று உள்ளது. அதை மற்றொருவர் பார்த்துக்கொள்கிறார்."

    "நான் ஏன் இன்ஸ்டாகிராமில் இன்னும் இருக்கிறேன் என தெரியவில்லை. இதையெல்லாம் கூறுவதற்காக கூட இருக்கலாம். போலி ட்விட்டர் கணக்கு பற்றி என் கவனத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி. அந்த கணக்கு போலியானது என நீங்கள் ரிப்போர்ட் செய்யுங்கள்."

    "போலி கணக்கு, போலி செய்திகள், போலியான உறவுகள், போலியான புகைப்படங்கள். என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள். ஒரு லேண்ட் லைன் இருந்தால் நன்றாக பேசலாம், சிறிய மழை பெய்தாலும் கரெண்ட் கட், quarantine என்றால் தான் மற்றவர்களுடன் பழக நேரம் என்பது இல்லை, ஐஸ் கிரீம் மற்றும் முட்டை பப்ஸ் இருந்தால் போதும் நண்பர்களுடன் இருக்க, தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்தது" என சுவாதி ரெட்டி தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் மூலம் மிகப் பிரபலமான ரேஷ்மாவுக்கு அவரது மகன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா,  கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தன் கஷ்டங்களை எல்லாம் சொன்னார் ரேஷ்மா.

    தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ரேஷ்மா பிற பிரபலங்களை போன்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் பால்கனியில் ரேஷ்மா  அமர்ந்திருக்க அவருக்கு மகன் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

    ரேஷ்மாவுடன் அவரது மகன்


    பின்னணியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் ஓடுகிறது. இது என்னுடைய மகன் ராகுல். எனக்கு தன் கையால் காபி போட்டு கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறான்.

    இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் வியந்துள்ளனர். 
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் ஊரடங்கு நேரத்தில் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்.
    கொரோனா முழு அடைப்பு என்பதால் சினிமா உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கு விஷயமும் இல்லாமல் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் நடிகை அமலா பால் தனது வீட்டிலேயே பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

    மாஸ்க் அணிந்துகொண்டு  நடனம் ஆடிய நடிகை அமலா பால்


    தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட இப்படி வீட்டிலேயே பார்ட்டி செய்துள்ளார் அமலா பால்.  மேலும் மாஸ்க் அணிந்துகொண்டு தான் இந்த பார்ட்டியில் நடனம் ஆடியுள்ளார்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த மிகவும் பிரபலமான மீரா சோப்ராவின் தந்தையிடம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
    எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.

    இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, போலீஸ் காலனியில் என் தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது இரண்டு பேர் ஸ்கூட்டரில் வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை பறித்துச் சென்றனர் என்றார்.

    மீராவின் ட்வீட்


    மீரா அளித்த புகாரின்பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள். இதை பார்த்த மீரா டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார். முதியவர்களை பாதுகாப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
    சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர். இதனால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரின் இறுதிச்சடங்கில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

    ரிஷி கபூர், இர்பான் கான்

    இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கூட இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவருக்கும் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறியபோது, ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
    இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக முன்னணி நடிகரான நாகார்ஜுனா களம் இறங்கி இருக்கிறார்.
    தெலுங்குத் திரையுலகில் கொரோனா நிவாரண உதவிகளை பல சினிமா பிரபலங்கள் செய்து வருகிறார்கள். இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா அவருடைய அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்.

    ஆனால், அந்த உதவிகளைக் கிண்டலடித்து ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. அது குறித்து ஆவேசமடைந்த விஜய் தேவரகொண்டா பொய்யான செய்திகளை அளிக்கிறார்கள் என அந்த இணையதளம் மீது குற்றம் சாட்டினார். மேலும், தன்னிடம் ஒரு பேட்டி கேட்டதாகவும் அதைத் தர மறுத்ததால் தான் இப்படியெல்லாம் அவதூறாக எழுதுகிறார்கள என்று கொந்தளித்தார்.

    விஜய்க்கு ஆதரவாக பல சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் சீனியர் நடிகரான நாகார்ஜுனா, “இந்த வேதனையை நாம் கடந்து வந்திருக்கிறோம். விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது மட்டும் போதாது, நடவடிக்கை எடுப்பதற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டுள்ளார். 
    சினிமா பின்னணி பாடகரான மனோ, பழங்குடியின மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய்கண்டிகை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பின்னணி பாடகர் மனோ நிவாரண உதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

    அப்பகுதியில் தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர் என்பதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பாடகர் மனோ எடுத்து கூறினார். அப்போது அவர், சினிமா பாடல்களை பாடி அங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா நடிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி படத்தின் முன்னோட்டம்.
    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

    காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் டீகே. ஒளிப்பதிவு பணிகளை விக்கி கவனிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை பிரவீன்.எச்.எல். மேற்கொண்டுள்ளார். 
    ×