என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரனின் தற்போது வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
    தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கால்பதித்தவர் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.

    நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.

    ஊரடங்கு என்பதால் பிரபலங்கள் தங்கள் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர். தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
    ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள சுமோ படத்தின் முன்னோட்டம்.
    வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து, சிவா-பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம், ‘சுமோ.’ இந்த படத்தை ஹோசிமின் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ‘சுமோ’ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன. 

    சுமோ படக்குழு

    படத்தை பற்றி இயக்குனர் ஹோசிமின் கூறியதாவது:- ‘‘சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது. கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார். 
    பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஹாலிவுட் படம் ஒன்று படமாக்கப்பட உள்ளது.
    பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த இருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த தகவலை நாசா நிர்வாகி உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஜிம் பிரிடெஸ்டைன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளயும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று தெரிவித்துள்ளார்.  இதன்முலம் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியிருந்த விவேக், தற்போது மீண்டும் ஆக்டிவாகி உள்ளார்.
    நடிகர் விவேக், கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தற்போதைய கொரோனா குறித்து ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். 

    இந்நிலையில், அவர் மீண்டும் டுவிட்டருக்கு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: "நண்பர்கள் மற்றும் ரசிகர்களே நான் திரும்ப வந்துட்டேன்" என குறிப்பிட்டு சிவாஜி படத்தில் ரஜினியுடன் அவர் நடித்த, படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    விஜய்யின் 65 வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதனை அவர் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். "விஜய் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக மெனக்கிட்டேன். தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது" என தமன் கூறியுள்ளார். இதன்முலம் விஜய் படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுக்கடைகளில் மது வாங்க பெண்கள் தனி வரிசையில் நிற்பது குறித்து பிரபல நடிகை டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிப் போனார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார்.

    மனிஷா யாதவ்

    இந்நிலையில், மதுக்கடைகளில் பெண்கள் மதுவாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனிஷா யாதவ், "இதற்கு முன் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கு அது சரியாக கடைபிடிக்கப்படுவதுபோல் உள்ளது.  மதுக்கடை முன் ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நிற்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ஊரடங்கு சமயத்தில் ஹாலிவுட் பிரபலத்திடம் இருந்து நடிப்பு கற்று வருகிறார்.
    சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

    இதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் சமந்தா, தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதன்முலம் நடிப்பில் தன்னை மெருகேற்றி வருவதாக சமந்தா கூறியுள்ளார்.
    சமீபத்தில் எக்ஸ்ட்ராக்‌ஷன் என்கிற ஹாலிவுட் படம் இணையதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.
    அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் தயாரான ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதில் பங்கஸ் திரிபாதி, ரந்தீப் ஹோண்டா, ருத்ராக்‌ஷ் சைஸ்வால் உள்ளிட்ட சில இந்திய நடிகர்களும் நடித்து இருந்தனர். இந்தியாவில் இருந்து கடத்தப்படும் சிறுவனை எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி சண்டை காட்சிகளுடன் படமாக்கி இருந்தனர்.

    இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறும்போது, “படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை பெரிய வெற்றி படமாக மாற்றிவிட்டீர்கள். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறேன். இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். அதற்கு என்னிடம் பதில் இல்லை” என்று கூறியிருந்தார்.

    எக்ஸ்ட்ராக்‌ஷன் படக்குழு

    இந்த நிலையில் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜோ ருஸ்ஸோ அளித்துள்ள பேட்டியில் ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ இரண்டாம் பாகம் வருவதை உறுதிப்படுத்தி உள்ளார். “இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கதை முன்னோக்கி செல்லுமா, பின்னோக்கி பயணிக்குமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
    தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, தனக்கு மகாபாரதத்தை படமாக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    ராமாயணம், மகாபாரதம் தூர்தர்ஷனில் ஏற்கனவே தொடர்களாக வந்து வரவேற்பை பெற்றன. தற்போது கொரோனா ஊரடங்கிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு அதிகமானோரை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ‘பாகுபலி’ படம் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனர் ராஜமவுலி, ராமாயணத்தை படமாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வற்புறுத்தினர். ஆனால் அவர் மகாபாரதம் கதையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார். 

    இதுகுறித்து ராஜமவுலி அளித்துள்ள பேட்டி வருமாறு: “கொரோனா ஓய்வில் இருப்பதால் ராமாயணம் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று பலரும் என்னை வற்புறுத்துகின்றனர். ஆனால் எனக்கு மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கொரோனா ஓய்வில் அந்த படத்துக்கான வேலையை ஆரம்பிக்கலாம் என்றால் அது அவ்வளவு எளிதானது அல்ல. 

    ராஜமவுலி

    அதற்கு நிறைய நேரம் வேண்டும். முழு கவனத்தை அதிலேயே ஈடுபடுத்த வேண்டும். இப்போது நேரம் கிடைத்துள்ளது என்று செய்தாலும் வேறு பணிகளில் இருந்து அது திசை திருப்பிவிடும். மகாபாரதம் படத்தை எடுக்க அதிக உழைப்பு தேவை. மகாபாரதம் எனது கனவு படம். அதை எப்படியும் படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறேன்”. இவ்வாறு ராஜமவுலி கூறினார்.

    பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரும் தமிழ், தெலுங்கில் இருந்து மேலும் பல நடிகர்களும் மகாபாரதம் படத்தில் நடிப்பார்கள் என்றும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
    சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், தன்னை பார்த்து உலக நாயகன் என்று அழைப்பதில் சந்தோஷம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடி வருகின்றனர். இதில் கமல்ஹாசன் சில சுவாரசியமான விஷயங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது: “நான் விளையாட, பாலச்சந்தர் எனக்கு நிறைய இடம் கொடுத்தார். அவருடன் 36 படங்களில் பணியாற்றினேன். மலையாள சினிமாவில் தொழில்நுட்ப கலைஞனாக வேலை செய்தபோது பாலுமகேந்திராவின் பரிச்சயம் கிடைத்தது. 

    நான் ஒளிப்பதிவு கற்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். சொல்லித் தருகிறேன் என்றார். பாலுமகேந்திராவுக்கு வணிக சினிமா மீது அப்போது கோபம் இருந்தது. எனக்கு நகைச்சுவை, சீரியஸ் கதாபாத்திரங்கள் இரண்டையும் செய்த சார்லி சாப்ளின் மீது ஈடுபாடு இருந்தது. அப்படி நாம் ஏன் செய்ய கூடாது? மக்களை சென்றடையும் படங்களை எடுப்பதில் என்ன அவமானம்? என்று பேசினேன். நான் பேசியதைத்தான் அவரும் நானும் சேர்ந்து படமாக எடுத்தோம். அதுதான் மூன்றாம் பிறை.

    கமல்ஹாசன்

    சகலகலா வல்லவன் படத்தை பாலுமகேந்திராவும், நண்பர்களும் திட்டினர். நானும் சேர்ந்து படத்தை திட்டினேன். அதன்பிறகு யோசித்தேன். அந்த வழியில் நான் செல்லாமல் இருந்திருந்தால் ராஜ்கமல் பட நிறுவனம் தொடங்கி இருக்க முடியாது. சினிமா என்பது வியாபாரம். நான் தர்மத்துக்காக நடிக்கவில்லை. எனக்கும் கார் வாங்க வேண்டும், எம்.ஜி.ஆர்., சிவாஜிபோல் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. 

    எனவே மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்று வீம்பு செய்ய கூடாது. என்னை பார்த்து உலக நாயகன் என்று அழைப்பதில் சந்தோஷம் கிடையாது. நாம் சொன்னது மக்களிடம் போய் சேருவதில்தான் மகிழ்ச்சி. சார்லி சாப்ளின் ஒரு படத்தில் கால் சுருங்குவதுபோல் நடித்து இருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கதாபாத்திரம் அதை பார்த்த பிறகுதான் மனதில் தோன்றியது.

    இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே மே 10-ந்தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர். பின்னர் ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும், மே 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்பு மனுக்களை சங்க அலுவலகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்றும் தனி அதிகாரி அறிவித்து இருந்தார்.

    ஆனால் கொரோனா ஊரடங்கை வருகிற 17-ந்தேதிவரை நீட்டித்து இருப்பதால் தேர்தல் பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதையடுத்து தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த இயலாத நிலை உள்ளது என்றும், புதிய தேர்தல் அட்டவணை கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

    இந்த தேர்தலில் டி.சிவா, தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து உள்ளனர். பாரதிராஜா, எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், என்னை மிரட்டி இருக்காங்க என்று கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மாதவன். சமீபத்தில் இவர் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 

    இவர் கல்லூரி நாட்கள் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ''எனக்கு காலேஜ்ல நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. எனக்கு இருந்த நண்பர்களில் நிறைய பேர் பொண்ணுங்களா இருந்தாங்க. அப்படிதான் சொல்லனும். 

    எப்பவுமே என்னை சுத்தி பெண்கள் இருக்கிறதுனால, சீனியர்ஸ் என்னை மிரட்டி இருக்காங்க. காலேஜ் ரவுடியிசம், சண்டையிலயும் என் பங்கு இருந்துருக்கு'' என்று கூறியுள்ளார்.
    ×