என் மலர்tooltip icon

    சினிமா

    எக்ஸ்ட்ராக்‌ஷன் படக்குழு
    X
    எக்ஸ்ட்ராக்‌ஷன் படக்குழு

    எக்ஸ்ட்ராக்‌ஷன் 2-ம் பாகம் உருவாகிறது

    சமீபத்தில் எக்ஸ்ட்ராக்‌ஷன் என்கிற ஹாலிவுட் படம் இணையதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது.
    அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் தயாரான ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதில் பங்கஸ் திரிபாதி, ரந்தீப் ஹோண்டா, ருத்ராக்‌ஷ் சைஸ்வால் உள்ளிட்ட சில இந்திய நடிகர்களும் நடித்து இருந்தனர். இந்தியாவில் இருந்து கடத்தப்படும் சிறுவனை எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி சண்டை காட்சிகளுடன் படமாக்கி இருந்தனர்.

    இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறும்போது, “படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை பெரிய வெற்றி படமாக மாற்றிவிட்டீர்கள். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறேன். இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வருமா? என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். அதற்கு என்னிடம் பதில் இல்லை” என்று கூறியிருந்தார்.

    எக்ஸ்ட்ராக்‌ஷன் படக்குழு

    இந்த நிலையில் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜோ ருஸ்ஸோ அளித்துள்ள பேட்டியில் ‘எக்ஸ்ட்ராக்‌ஷன்’ இரண்டாம் பாகம் வருவதை உறுதிப்படுத்தி உள்ளார். “இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கதை முன்னோக்கி செல்லுமா, பின்னோக்கி பயணிக்குமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
    Next Story
    ×