என் மலர்tooltip icon

    சினிமா

    டாம் குரூஸ்
    X
    டாம் குரூஸ்

    விண்வெளியில் படமாக்கப்பட உள்ள ஹாலிவுட் படம்

    பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஹாலிவுட் படம் ஒன்று படமாக்கப்பட உள்ளது.
    பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த இருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 'நாசா'வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த தகவலை நாசா நிர்வாகி உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஜிம் பிரிடெஸ்டைன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளயும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை என்று தெரிவித்துள்ளார்.  இதன்முலம் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×