என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது தற்போது சர்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

    ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார். 

    குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பேசிய வீடியோவை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீமுகி

    இதுகுறித்து ஸ்ரீமுகி கூறும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை. நான் யார் மனதையோ அல்லது எந்தவொரு சமுதாயத்தையோ காயப்படுத்துவதுபோல் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். ஓ மை கடவுளே, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்றார். தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். 

    அவரது கைவசம் மாமனிதன், லாபம், ரண சிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் உப்பென்னா, இந்தியில் லால் சிங் சதா ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் ஹாசனுடன் அவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியன்-2 படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.

    விஜய் சேதுபதி, கமல்ஹாசன்

    இந்த படத்தை முடித்து விட்டு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணையதளத்தில் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் தலைவன் இருக்கின்றான் என்றே பெயர் வைத்து இருந்தனர்.
    தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு காய் கனி வளாகம் கொரோனா தொற்று பரப்பும் மையமாக மாற்றம் கண்டதை கண்டு அனைவரும் அதிர்ந்து கிடக்கிறோம். இந்தநிலையில் மதுக்கடைகளை திறப்பதால் பதற்றம் மேலும் அதிகமாகிறது. இதிலிருந்து மீண்டு விட 43 நாட்கள் குடிக்காமல்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் அரசால் மதுக்கடை திறக்காமல் இருக்க முடியவில்லை. 

    தங்கர் பச்சான்

    மீதம் இருப்பவர்களுக்கும் மதுக்கடைகள் கிருமியை கொண்டு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வருமானம் இல்லாமல்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்பது ஏற்புடையது அல்ல. தாய்மார்களை, பிள்ளைகளை, முதியோரை குடிநோயாளிகள் அடித்து துன்புறுத்துவார்கள். பண்ட பாத்திரங்கள் அடகு கடைக்கு போகும். அனைத்து அரசியல் கட்சியினரும் இணைந்து மதுக்கடைகள் இயங்காமல் பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் வழியை நடிகர் ஹரிஷ் கல்யாண் பின்பற்றுவதாக அறிவித்திருக்கிறார்.
    கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. 

    திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். 
    ஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ள டுவிட்.
    இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்துவரும் படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார். அதை தானும் பின்பற்ற இருப்பதாக ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார். 
    சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஹரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

    திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.
     இயக்குனர் ஹரி திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பு
    இந்நிலையில் இயக்குனர் ஹரி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கப் போகும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாராவின் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    விக்ரம், அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கிய ’தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதையும் கவர்ந்தவர் பேபி சாரா. 

    தெய்வத்திருமகள் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்திலும் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 
    பேபி சாரா
    இந்த நிலையில் பேபி சாராவாக இருந்தவர் தற்போது குமாரி சாராவாக மாறி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் அவர் தமிழ் திரைப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரகுல் பிரீத் சிங் ஆல்கஹால் வாங்கி செல்வது போல் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
    தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மது வாங்க வரிசையில் நிற்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று, ‘என்.ஜி.கே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத்சிங் கையில் சில பாட்டில்களுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் ‘இந்த ஊரடங்கு நேரத்தில் ரகுல், ஆல்கஹால் வாங்கி செல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த வீடியோவிற்கு பதில் கூறிய நடிகை ரகுல், தான் மெடிக்கல் கடையில் அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே வாங்கியதாகவும் மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்பார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் "திட்டம் இரண்டு"

     மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாக இருக்கிறது.   ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது.  

    திட்டம் இரண்டு


    கோகுல் பினாய் படத்தின் ஒளிப்பதிவை செய்ய, சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்ததும் துவங்க இருக்கிறது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை பாயல் கோஷ், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த லாக்டவுன் நேரத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட பாயல் கோஷ், அதன் பாதிப்புகளால் மனதளவில் உடைந்து போனதாகவும், தற்போது முழுவதுமாக அதில் இருந்து மீண்டுள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நல்ல வேளை கொரோனா பாதிப்பு இல்லை என்பது பெரிய நிவாரணமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

    ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ரொம்பவே அச்சப்பட்டேன். பின்னர், தனக்கு மலேரியா என்று தெரிந்ததும், கவலை இல்லாமல், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இந்த ஊரடங்கால் கிடைத்துள்ள இந்த நேரத்தை உலக சினிமா பார்ப்பதிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் செலவிட்டு வருகிறேன் என பயல் கோஷ் கூறியுள்ளார்.
    தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜனனி ஐயர், முதல் முறையாக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
    கொரோனா ஊடரங்கின் காரணமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நடிகைகள், ஓவியர்களாக, கதாசிரியர்களாக, மாடல் அழகிகளாக, வீட்டு வேலை செய்பவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாசமாக ஜனனி ஐயர் மட்டும் பாடகி ஆகியுள்ளார்.

    சென்னையை சேர்ந்த ஜனனி, தான் நடிக்கும் படங்களில் அவர் தான் டப்பிங் பேசுகிறார். ஆனால் பாடல் பாடியதில்லை. கொரோனா காலத்தில் பாடகி ஆகிவிட்டார். ‘உன் நெருக்கம்...’ எனத் தொடங்கும் பாடலை அவர் பாடியுள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்து உடன் பாடி உள்ளார்.

    ஜனனி பாடலை பாடியதுடன் அதற்கேற்ப நடனம் ஆடி அதனை செல்போனில் படம் பிடித்து தனது இன்ஸ்ட்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
    தன்னுடைய படங்களில் பணியாற்றி வரும் டெக்னீசியன்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் முழு சம்பளம் கொடுத்துள்ளார்.
    நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களையும் அவரே தயாரிக்கிறார். மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் எப்.ஐ.ஆர்., முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படம் என 3 படங்களை தயாரித்து நடிக்கிறார்.

    ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் உதவி இயக்குனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இதையறிந்த விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து முழு சம்பளம் கொடுத்து வருகிறார்.

    இந்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பிட்ட 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்‌‌ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரனின் தற்போது வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
    தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கால்பதித்தவர் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.

    நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.

    ஊரடங்கு என்பதால் பிரபலங்கள் தங்கள் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர். தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.
    ×