என் மலர்
சினிமா

ரகுல் பிரீத் சிங்
ஆல்கஹால் வாங்கினாரா ரகுல் பிரீத் சிங்... வைரலாகும் வீடியோ
மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரகுல் பிரீத் சிங் ஆல்கஹால் வாங்கி செல்வது போல் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மது வாங்க வரிசையில் நிற்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று, ‘என்.ஜி.கே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத்சிங் கையில் சில பாட்டில்களுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் ‘இந்த ஊரடங்கு நேரத்தில் ரகுல், ஆல்கஹால் வாங்கி செல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த வீடியோவிற்கு பதில் கூறிய நடிகை ரகுல், தான் மெடிக்கல் கடையில் அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே வாங்கியதாகவும் மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்பார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol 🤔😂😂 https://t.co/3PLYDvtKr0
— Rakul Singh (@Rakulpreet) May 7, 2020
Next Story






