என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பிரபல நடிகராக இருக்கும் பிரசன்னா, தமிழ்நாடு மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாவது ஊரடங்கில்தான் சில தளர்வுகளை அறிவித்து இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி உள்ளது. 

    ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தைய கட்டணத்தையே கட்டச் சொன்னார்கள். 

    தற்போது வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டு அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

    அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “இந்த கொவிட் லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.
    இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
    இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

    இளையராஜா, சீனு ராமசாமி, Ilayaraja, Seenu Ramasamy

    இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    இசைக்கு
    ஒரு வாழ்த்துப்பா...
    ...............................................

    எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
    பாணனே
    மேற்குத்தொடர்ச்சி
    மலையிலே
    மிதந்து வந்த மேகமே

    உமது வருகையை
    எதிர்பார்த்து
    இசையின் வாசல்
    காத்திருந்தது

    கருப்பு வெள்ளை
    அன்னக்கிளியாள்
    பாட்டிசைக்க
    எங்கள் இதயத்தில்
    வண்ணக்கிளிகள் பறந்தன

    அன்று பெய்யத் தொடங்கிய மழை
    இசையின் சிரபுஞ்சியானது

    தவிலின் நாவுகளைப்
    பேச வைத்தாய்
    தமிழிசைக்கே அது
    முதுகெலும்பானது

    உமது மூச்சு
    புல்லாங்குழலுக்கு சுவாசம்

    உமது வயலின்கள்
    சலனப்படமென
    எங்கள் சாலைகளை
    உயிர்ப்புறச் செய்தது

    உமது சங்கீதம் எங்கள்
    நினைவுத் தடத்தில்
    பூத்த பூ
    காலத்தின் பிம்பம்
    கடிகாரத்தின்
    பென்டுல சப்தம்
    தூக்கத்திற்கு முன்
    எம்மைத் தீண்டும்
    அமைதித் தென்றல்

    நீர் ஆர்மோனியத்தில்
    விரல் வைத்தீர்
    எங்கள் செங்காட்டு பூமியில்
    பெயர் தெரியாச்
    செடி ஒன்று
    பூ பூத்தது

    இசைஞானியே
    வெண்பா இயற்றிய
    தமிழ் ஞானியே
    நீர் சுற்றியதால்
    கிரிவலம்
    இசைத்தட்டானது

    எனதன்பு பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்.....

    இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.
    ராஷ்மிகா பிடிக்குமா அல்லது சமந்தா பிடிக்குமா என்ற கேள்விக்கு நடிகர் மகேஷ் பாபு பதில் அளித்துள்ளார்.
    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ்பாபு. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சில வித்தியாசமான கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

    அப்படியே ரசிகர் ஒருவர் உங்களுக்கு ராஷ்மிகா பிடிக்குமா அல்லது சமந்தா பிடிக்குமா என்று கேள்வி கேட்டார்.  அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு "எனக்கு இருவரையும் பிடிக்கும். இருவரும் மிகவும் அற்புதமான நடிகர்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    சமந்தா, ராஷ்மிகா,


    மகேஷ் பாபு சமீபத்தில் தனது தந்தையின்  பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில் தனது புதிய படமான 'சர்க்காரு வாரி பட்டா'  படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதுபற்றி கூறும்போது "இது அழுத்தமான மெசேஜ் உடன் கூடிய பொழுதுபோக்கு படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
    பெங்களூருவில் திருமணத்திற்கு காதலன் மறுத்ததால் சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி லே-அவுட்டில் வசித்து வந்தவர் சந்தனா (வயது 29). இவர், கன்னட சின்னத்திரை நடிகை ஆவார். தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு நாடகங்களும், சில விளம்பரங்களிலும் சந்தனா நடித்துள்ளார். இவருக்கும் தினேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் தினேஷ், சந்தனா இடையே காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

    இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நடிகை சந்தனா திடீரென்று விஷத்தை ஊற்றி குடித்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய சந்தனாவை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தனா பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் சுத்தகுண்டே பாளையா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று சந்தனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சந்தனா தான் தற்கொலை செய்தவற்காக விஷத்தை குடிப்பதை தனது செல்போனில் செல்பி வீடியோ எடுத்து வைத்திருந்தார். மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் அவர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதாவது சந்தனாவும், தினேசும் 5 ஆண்டுக்கும் மேலாக காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அத்துடன் சந்தனா, தினேசுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருந்தார்கள்.

    அதே நேரத்தில் சந்தனாவிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கும் மேல் தினேஷ் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சந்தனாவை திருமணம் செய்ய தினேஷ் மறுத்ததுடன், பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.
    இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை நடிகர் விவேக் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    கொரோனா காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் பிரபலங்கள், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர், இளைஞர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களை ( கண்டிப்பாக படிக்க வேண்டிய) குறிப்பிடலாமே என்று கேள்வி எழுப்பினார்.

    இது குறித்து நடிகர் விவேக் பதில் அளித்திருப்பதாவது: “எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என் மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன். இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா, சுய வரலாறு : த அதர் சைட் ஆப் மீ, உடற்பயிற்சி மேக் த கனெக்‌‌ஷன், யோகநெறி அறியலிவிங் வித் எச்.மாஸ்டர்ஸ். மாணவர்களுக்கு:அக்னி சிறகுகள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    அஜித்தாக இருக்க விரும்புகிறேன் என்று பிரபல நடிகை ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ஏ.எல். விஜய் இயக்கிய பொய் சொல்லப் போறோம் படம் மூலம் நடிகையானவர் பியா பாஜ்பாய். இப்படத்திற்கு பிறகு ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடித்த ஏகன் படத்திலும் நடித்தார்.

    அஜித் பற்றி பியா பாஜ்பாய் கூறியதாவது,

    நான் ஏகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது அஜித் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதும், நான் எவ்வளவு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பதும் எனக்கு தெரியாது.

    அஜித், பியா பாஜ்பாய்


    ஏற்காட்டில் படப்பிடிப்பு நடந்தபோது என் ஷாட் வந்ததும் என்னை அழைத்தார்கள். நான் என் வேனில் இருந்து வெளியே வருவதற்குள் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஒருவருக்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

    அஜித் சார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகே அஜித் சார் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து கொண்டேன். இது இவ்வளவு பெரிய படம் என்று யாருமே என்னிடம் கூறாததை நினைத்து கோபப்பட்டேன். அஜித் சார் என்னிடம் அன்பாக பழகினார்.

    சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக இருக்க முடியும் என்பதை அவரை பார்த்து கற்றுக் கொண்டேன். ஒரு நாள் நான் வேறு ஒருவராக இருக்க முடியும் என்றால், நான் அஜித் சாராக இருக்க விரும்புகிறேன். ரசிகர்கள், மக்களின் அன்பை உணரவே அஜித் சாராக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
    தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
    நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: -

    நடிகை ஆண்ட்ரியா


    ‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

    நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
    தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தமிழில் அதிக படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, ஹரீஷ் கல்யாண் உடன் பெல்லி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற , ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரும் பட்டியலே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.

    பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது தான். ஆனால் அது சில நேரம் அவருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக நடிகை பிரியா வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுள்ளார்.

    பிரியா பவானி சங்கர்


    இதனால் கோபமான பிரியாவின் ரசிகர்கள் அந்த பெண்ணை மோசமாக விமர்சித்து இருக்கின்றனர். இது பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரியா பவானி சங்கர் அதில் கூறியிருப்பதாவது, ’சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதில் சொன்னேன் . ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான வார்த்தைகளை பிரயோகம் செய்திருந்தார்கள் . அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை இழிவாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது’ இவ்வாறு நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

    தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மீர் பவுண்டேசன் மூலமாக உதவியுள்ளார்.
    பீகாரின் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு குழந்தை, தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்த வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது. பார்ப்பவர்களை கண்கலங்க செய்த அந்த வீடியோ, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்திவரும் மீர் பவுண்டேசன் மூலமாக அக்குழந்தைக்கு அவர் உதவியுள்ளார். 

    இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "அந்த சிறுவனை தொடர்புகொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த எதிர்பாராத இழப்பை தாங்கும் வலிமை அவனுக்கு கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அந்த வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு" என பதிவிட்டுள்ளார். 

    அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் `காதலிக்க யாருமில்லை' படத்தின் முன்னோட்டம்.
    கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் `காதலிக்க யாருமில்லை'. திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    காதலிக்க யாருமில்லை படக்குழு

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். குறும்படம் இயக்கி பிரபலமான கமல் பிரகாஷ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
    விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
    மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    மியா ஜார்ஜ்

    லாக்டவுனால் வீட்டில் இருக்கும் மியா ஜார்ஜுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், மியா ஜார்ஜுக்கு அஷ்வின் பிலிப் என்பவருக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் அவரது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
    சந்திரமுகி 2-ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்தன.

    இந்நிலையில், அதுகுறித்து நடிகை சிம்ரன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நான் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக பரவும் செய்தி போலியானது. அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை" எனக் கூறி உள்ளார். இதன்முலம் சிம்ரன் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    ×