என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்.
மும்பையில் வசித்து வந்தவர் பழம்பெரும் இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி. இவர் ராஜ்குமார்- ரேகா நடித்த கர்மயோகி, ராஜ் திலக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். 77 வயதான தயாரிப்பாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு திணறலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை மாகிம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு படுக்கை இல்லை என அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக நடித்து வருபவர் ஐஷ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.


ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா தத்தாவா இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.
புதிய பாதை படம் மூலம் இயக்குனரான பார்த்திபன் தொடர்ந்து பல படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பட விழாக்களில் திரையிட்டும் பாராட்டுகள் பெற்றது.
இந்த நிலையில் தனது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் தயாராகி வருகிறார். இந்த படம் 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. பார்த்திபனே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
விக்ரம், ரோஜா, சுவலட்சுமி, ஐஸ்வர்யா, சுவாதி, வடிவேலு ஆகியோரும் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். தற்போது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார். இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக படத்தின் டிவிடியை ஒரு தயாரிப்பாளர் மூலம் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் அவர் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் சென்ஸார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில், சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. யு சர்ட்டிபிகேட் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா 17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
உலகம் முழுவதும் 'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார். அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.
விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இதுவரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக்கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இதுவரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக்கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவை பிரபல இயக்குனர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும் என்று கூறி “கொரோனாவும் காலநிலை மாற்றமும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பிரபல இயக்குனரான தங்கர் பச்சான், பூமி எதிர்கொள்ளும் உடனடியான சிக்கலை இந்தக்காணொலி நமக்கு தெளிவுபடுத்துகிறது. கட்டாயம் ஒரு முறை இதைக்காணுங்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்காகவாவது! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பார்த்திபன் - கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் விழிப்புணர்வு காணொலி பாருங்கள் என்று கூறினார்.
இயக்குனர் பொன்ராம் - கவனிக்க வேண்டிய பதிவு. காலநிலை மாற்றத்தை பற்றி அற்புதமாக கூறுகிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இயக்குனர் சமுத்திரகனி - இயற்கையை பாதுகாப்போம்... நம்மை பாதுகாத்துக் கொள்வோம்... விழித்தெழு...! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி - பூமியின் அதிக வெப்பத்தால் புயல், வெள்ளம், கிருமிகளின் வருகையென விஞ்ஞானப் பூர்வமாக டாக்டர் அன்புமணி அவர்களின் ‘கொரோனாவும் கால நிலை மாற்றமும்’ எனும் விழிப்புணர்வு காணொளி பேசுகிறது முதலில் இதற்கு நன்றிகள்
பாராட்டுக்கள்...
இந்த வீடியோவை பார்த்த பிரபல இயக்குனரான தங்கர் பச்சான், பூமி எதிர்கொள்ளும் உடனடியான சிக்கலை இந்தக்காணொலி நமக்கு தெளிவுபடுத்துகிறது. கட்டாயம் ஒரு முறை இதைக்காணுங்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்காகவாவது! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பார்த்திபன் - கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் விழிப்புணர்வு காணொலி பாருங்கள் என்று கூறினார்.
இயக்குனர் பொன்ராம் - கவனிக்க வேண்டிய பதிவு. காலநிலை மாற்றத்தை பற்றி அற்புதமாக கூறுகிறார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இயக்குனர் சமுத்திரகனி - இயற்கையை பாதுகாப்போம்... நம்மை பாதுகாத்துக் கொள்வோம்... விழித்தெழு...! என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி - பூமியின் அதிக வெப்பத்தால் புயல், வெள்ளம், கிருமிகளின் வருகையென விஞ்ஞானப் பூர்வமாக டாக்டர் அன்புமணி அவர்களின் ‘கொரோனாவும் கால நிலை மாற்றமும்’ எனும் விழிப்புணர்வு காணொளி பேசுகிறது முதலில் இதற்கு நன்றிகள்
பாராட்டுக்கள்...
இவ்வாறு முன்னணி இயக்குனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நாட்களை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்து உரையாடுகிறார். “ஊரடங்கு நாட்களில் என்ன செய்கிறீர்கள்? அதை எப்படி உணர்ந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராஷ்மிகா கூறியதாவது:-

ஊரடங்கு நாட்களில் நான் வீட்டிலேயே இருக்கிறேன். அக்கம்பக்கத்தினர் யாரும் தங்கள் வேலையை பற்றி பேசவில்லை. இதை நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.”
“18 வயதில் இருந்தே எனக்கு வாழ்க்கை ஒரு மாரத்தான் போட்டி போல் இருந்தது. போட்டி முடிந்தது என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் போட்டி தொடங்கி விடும். இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை. நான், ஒரு விடுதி மாணவி. பள்ளிப்பருவத்தில் இருந்து உயர் கல்வியை முடிக்கும் வரை, விடுதியில்தான் தங்கி படித்தேன்.

ஊரடங்கு நாட்களில் நான் வீட்டிலேயே இருக்கிறேன். அக்கம்பக்கத்தினர் யாரும் தங்கள் வேலையை பற்றி பேசவில்லை. இதை நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.”
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.
1978-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்து, ருத்ரையா இயக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய படம், ‘அவள் அப்படித்தான்.’ 42 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த படத்தை மீண்டும் இயக்க முன்வந்து இருக்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ். இவர், ‘பாணா காத்தாடி,’ ‘செம போத ஆகாதே’ ஆகிய படங்களை இயக்கியவர். ‘அவள் அப்படித்தான்’ படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன்? என்பது பற்றி இவர் கூறுகிறார்:

ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள் அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.
“அவள் அப்படித்தான் கதை இன்றைய சூழலுக்கு பொருந்துகிற கதை. ‘மீ 2,’ ‘காஸ்ட்யூம் கவுச்’ போன்ற பிரச்சினைகள் பற்றி 42 வருடங்களுக்கு முன்பே பேசிய படம், இது. எனக்கு மிகவும் பிடித்த படம். பெண்ணியம்தான் படத்தின் கரு. பெண்ணியவாதியாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள் அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.
சூரரைப்போற்று, அருவா படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படம் கடந்த மாதமே திரைக்கு வர இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது.

‘சூரரைப்போற்று’ படம் எப்போது திரைக்கு வரும் என்று அறிவிக்கப்படாத நிலையில், சூர்யா நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய அடுத்த படத்தை பாண்டிராஜ் டைரக்டு செய்ய இருக்கிறார்.
மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருவா படத்திலும் சூர்யா நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம்வருகிறார் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் லாக்டவுனுக்கு பின் ரிலீசாக உள்ளது. இதனைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பின்னர் பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து அத்ரங்கி ரே எனும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தனுஷ் நடிக்கும் 43-வது படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம்.
கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. இதனால் இதன் டிஜிட்டல் உரிமத்தை வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






