என் மலர்
சினிமா செய்திகள்
மலையாள நடிகரான ஜெயராம், ரஜினியுடன் தமிழ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தில் சரத்பாபு நடித்த வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஜெயராம். பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகினார். அதற்கான காரணத்தை அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஏனெனில், முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்தது. அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள் என்பதால் அதில் நடிக்க மறுத்ததாக நடிகர் ஜெயராம் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயராம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் முன்னோட்டம்.
ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இணைய விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை நாம் செய்திகளில் படித்துவரும் இந்த வேளையில், முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாதா 87’ திரைப்படத்திற்கு இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
மீசைய முறுக்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆத்மிகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில், நீல நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆத்மிகாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருவதோடு, டுவிட்டரிலும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவிவந்த நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிம்புவுக்கும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவருக்கும் லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில், அதுகுறித்து சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ராஜேந்தர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக சின்னத்திரை நடிகர், நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா தொழில் முற்றிலும் முடங்கியது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சினிமா தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். சிலர் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்ளும் அவலமும் அரங்கேறி வருகிறது.
அந்தவகையில், சென்னையை அடுத்த கொடுங்கையூரை சேர்ந்த சின்னத்திரை நடிகர்களான ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரின் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை வைத்துதான் போலீசார் அவர்களை அடையாளம் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்டானில் இருந்து திரும்பிய நடிகர் பிருத்விராஜ், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஜோர்டான் சென்றிருந்தார். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.

இதனிடையே வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அவரும் படக்குழுவினர் 57 பேரும் கடந்த மாத இறுதியில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
14 நாட்கள் முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால், நடிகர் பிருத்விராஜ் அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் மனைவி, மகளை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மீண்டும் சேர்ந்துவிட்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.
'குயின்' ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் வெப் தொடர் இல்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய வெப் தொடர் குயின். இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதை தான் குயின். மேலும் இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்று சொல்லப்பட்டது. அதேபோல் தான் இத்தொடரில் இடம்பெறும் ரம்யா கிருஷ்ணனின் ஷக்தி சேஷாத்ரி கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இது ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதை இல்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் வெப் தொடர். ஜெயலலிதாவின் கதையைப் போல ஒத்து இருந்ததால் இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு ஜெயலலிதாவின் துணிச்சலும், உண்மையான குயின் போல் அவர் இருந்ததும் மிகவும் பிடிக்கும்.

கதைப்படி இன்னும் அந்தக் கதாபாத்திரம் முழு அரசியல்வாதி ஆகவில்லை. முதல் பாகத்தில் அவர் அந்த நிலை வரை செல்கிறார். இன்னும் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதில் பங்கேற்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் அதிக ஆக்ஷன், பரபரப்பான காட்சிகள் இந்த 2-ம் பாகத்தில் மக்கள் எதிர்பார்க்கலாம் .
தற்போது நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. கடைசியாக நான் இந்த தொடரின் கதாசிரியர் ரேஷ்மாவுடன் பேசியபோது, அவர் 2-ம் பாகத்திற்கான திரைக்கதையை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ஷுட்டிங் செல்ல அனைத்தும் தயார். ஆனால் இந்த லாக்டவுனை பொறுத்துதான் அது உள்ளது". இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, விரைவில் கோடீஸ்வர குடும்பத்து பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவும், இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனுமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவருக்கு பல இடங்களில் இருந்து மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் வந்து குவிந்தன. ஜாதகம் பொருந்தாததால் அவருடைய திருமணம் தள்ளிப்போனது.
சில ஜாதகங்கள் பொருந்தினால், சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த காரணங்களால் மணப்பெண் அமையவில்லை. இது, அவருடைய குடும்பத்தினரை போலவே ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.

சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழும் வகையில், இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அவருக்கு லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணப்பெண், சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினராம். கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன. கொரோனா பிரச்சினைகள் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்தார்.
அஜித் பட நடிகை ஒருவர் விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா.
சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் கனிகா நடித்த கடைசி படமாகும். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்துள்ள, இப்படத்தில் நடிகர் விவேக், இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார். அதன்படி யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா பதிவிட்டுள்ளார்.
ரஜினியை கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட இந்தி நடிகர் ரோகித் ராயை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர்.
இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரோகித் ராய். தேஸ் மெய்ன் நிகிலா ஹோகாந்த், ஸ்வபிமான் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள், முக கவசம் அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள், நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது” என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது.
ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய் “நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய் “நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை,” என்று கூறியுள்ளார்.
சொந்த ஊர் திரும்ப உதவி செய்த பிரபல இந்தி நடிகருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறியுள்ளனர்.
இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பஸ், விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

இதையடுத்து அவர் பஸ் மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். இதில் முதல் பஸ் நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் கூறினார்.
இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
இந்தநிலையில் சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான்கோலி வாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்.
மும்பையில் வசித்து வந்தவர் பழம்பெரும் இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி. இவர் ராஜ்குமார்- ரேகா நடித்த கர்மயோகி, ராஜ் திலக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். 77 வயதான தயாரிப்பாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு திணறலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை மாகிம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு படுக்கை இல்லை என அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.







