search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthu"

    • பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.
    • ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிக துறை சார்பில் 3 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி குளோபிஸ் என்ற பெயரில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் பங்கேற்றார்.

    ஜப்பான்-இந்தியா நாடுகளின் வர்த்தக சூழல் தொடர்பாக வல்லுநர்களுடன் ஆங்கிலத்தில் அவர் கலந்துரையாடினார்.

    இந்த கலந்துரையாடலின் முடிவில் பேசிய அவர் தமிழ் எனக்கு பிடித்த மொழி.எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்று குறிப்பிட்டார்.

    அதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் முதலாளி... உலகில் மற்றவன் தொழிலாளி... விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி என்று முழு பாடலையும் அவர் பாடினார்.

    இதனால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

    அவர் பாடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அத்துடன் தனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும், அதிலும் ரஜினி படங்கள் அதிகம் பிடிக்கும் என்று குறிப்பிட்ட கோபுகி சேன் தமிழ் திரைப்படங்களில் தான் ரசித்து பல விஷயங்களை பகிர்ந்தார். 

    • மிக பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பெப்சி உமா.
    • இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதனை மறுத்துவிட்டார்.

    தமிழ் சினிமாவில் நடிகர்களை தாண்டி ஒரு சில தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தான் பெப்சி உமா என்ற உமா மகேஸ்வரி. 15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இவர்.


    அந்த நாட்களில் இவரின் நிகழ்ச்சியில் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்று தவம் இருந்த ரசிகர்கள் ஏராளம். இப்படி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த பெப்சி உமாவிற்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்தும் அதையெல்லாம் அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

    ரஜினியை அவரின் இரண்டு படங்களில் நடிக்க பெப்சி உமாவை கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம். அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பையும் தவிர்த்துவிட்டாராம். இப்படி தொகுப்பாளினியாக மட்டும் இருந்து பிரபலமான பெப்சி உமா நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    அதில், "இதை நான் எங்கும் சொன்னது இல்லை. இது ராக்கிங் மாதிரி இருக்கும். ரஜினிகாந்த் ஒரு முறை என்னை தொடர்புகொண்டுஉங்க பக்கத்துல எந்த பிரபலம் இருந்தாலும் கண்ணு அங்க போகாம உங்க பக்கமே போகிறது" என்று சொன்னதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் செய்தது குறித்து ரம்பா பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை.
    • ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகின.

    கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீசான போதே அதநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை. எனினும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் பதிப்பு உருவாக்கப்பட்டு, ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதை தயாரிப்பாளரான எஸ். தானு தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக படத்தின் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

    இந்த நிலையில், ஆளவந்தான் படம் ரிலீசாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் தங்களது நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவிருப்பதை ஒட்டி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், இதே தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது. #Rajini #Muthu #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. ரஜினி இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியானது.

    1998-ம் ஆண்டு அக்டோபரில் 50 திரையரங்குகளில் ஒடொரு மகாராஜா (டான்சிங் மகாராஜா) என்ற பெயரில் ரிலீசான முத்து படம் அங்கு வெற்றி பெற்றது.

    100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. 2006-ம் ஆண்டு ஜப்பான் நாடாளுமன்றத்தில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றும்போது முத்து படத்துக்கு அங்கே கிடைத்த வரவேற்பை பற்றி குறிப்பிட்டார். ரஜினிக்கும், மீனாவுக்கும் ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் உருவானார்கள்.

    ஜப்பானில் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் அந்த தாக்கம் இன்னும் இருப்பதால் படத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளான 4கே திரை மற்றும் 5.1 ஒலி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

    டிசம்பர் மாதம் வெளியிடுவதற்காக படத்தை டிஜிட்டலாக மாற்றி தொழில் நுட்பத்தை புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    படம் தொடங்குவதற்கு முன்னர் ரஜினி திரையில் தோன்றி ஜப்பான் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார். இந்த வீடியோவை படத்துக்கான விளம்பரத்திலும் பயன்படுத்த இருக்கிறார்கள். ஈடன் என்டெர்டெயின்மெண்ட் என்ற ஜப்பானிய பட நிறுவனம் 25 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் மறுவெளியீடான படம் என்ற பெருமையை முத்து படம் பெற இருக்கிறது.
    ×