என் மலர்
சினிமா செய்திகள்
அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம்.
கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள, இப்படடத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இப்படத்தை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் தான் விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. இதனால் இதன் டிஜிட்டல் உரிமத்தை வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் டாம் குரூஸ், படப்பிடிப்புக்காக கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில் நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். வெனிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் டாம் குரூஸ் இங்கிலாந்து அரசின் அனுமதியுடன் புதிய முயற்சியில் இறங்கி உள்ளார். அதன்படி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு ஷயர் மாகாணத்தில் தற்காலிக திரைப்பட நகரம் அமைக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளார்.

இங்கு டாம் குரூஸ் உள்பட மிஷன் இம்பாசிபிள் படகுழுவினர் அனைவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. படப்பிடிப்புக்கு தேவையான அரங்குகளும் போடப்படுகிறது. கொரோனா இல்லாத நகரமாக இது அறிவிக்கப்பட்டு, பலத்த மருத்துவ பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்படுகிறது. படக்குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை அடுத்தாண்டு நவம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
65 வயதை கடந்தவர்கள் பங்கேற்க தடை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மகாராஷ்டிரா அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் சில மாநிலங்கள் அனுமதி அளித்திருந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. சமூக இடைவெளி, குறைவானவர்களை படப்பிடிப்பில் பயன்படுத்துவது, தூய்மையை கடைப்பிடிப்பது என்றெல்லாம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கு கண்டிப்பாக வரக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது உடல்நிலை பாதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவக்குழு எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட சினிமாத்துறையினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க கூடாது என்ற நிபந்தனையை மட்டும் ஏற்க மறுத்துவிட்டனர். வயதான நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய திரைப்பட தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

காரணம் அமிதாப்பச்சன், அனுபம்கேர், ஷக்தி கபூர், நசுருதீன் ஷா, பரேஷ் ராவல், மிதுன் சக்கரவர்த்தி, சுபாஷ்கை, மகேஷ்பட், சேகர் கபூர், மணிரத்னம், ஜாவேத் அக்தர், பிரியதர்ஷன் உள்ளிட்ட பல மூத்த கலைஞர்கள் இந்த நிபந்தனை காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. ஆகையால் இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை சிம்ரன் சச்தேவா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்தி சீரியல் நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற சோட்டி சர்தார்னி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரில் ஏற்கனவே மான்சி சர்மா நடித்து வந்தார். அவருக்கு உடல்நலம் குன்றி தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக சிம்ரன் சச்தேவாவை நடிக்க வைத்தனர். இவர் ஏற்கனவே பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். கொரோனா ஊரடங்கினால் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் முடங்கி உள்ளன.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அதிக சம்பளம் வாங்கிய நடிகர் நடிகைகளை தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்துக்கு சம்மதிப்பவர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதுபோல் சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவிதம் சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து தொடரில் இருந்து அவர் விலகி விட்டார்.

இது குறித்து சிம்ரன் சச்தேவா கூறும்போது, “தொடரில் நடிக்க ஏற்கனவே சம்பளத்தை ஒழுங்காக தரவில்லை. இப்போது 40 சதவீதம் சம்பளத்தை குறைக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் தவறாக நடக்க முயன்றார். மரியாதை இல்லாமலும் நடத்தினார். இதனால் அந்த தொடரில் இருந்து விலகினேன்” என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், நடிகர் சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துள்ளார்.
காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் 'கார்த்திக் டயல் செய்த எண்' எனும் குறும்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாகி உள்ளது. இதில் சாந்தனு, மேகா ஆகாஷ், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார்.
இப்பாடலை கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்பாடலின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் முழுப்பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://t.co/sCfzliYTpE
— Gauthamvasudevmenon (@menongautham) June 4, 2020
Oru chance kudu.. to everybody out there.
Coming soon! #oruchancekudu
பாபு யோகேஸ்வரன் இயக்கிய காட்மேன் வெப் தொடர் சர்ச்சை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் படத்தை இயக்கியவர் பாபு யோகேஸ்வரன். இவர் தற்போது டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் எனும் வெப் தொடரை இயக்கி உள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த வெப் தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: "காட்மேன், தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்.
இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய தயாரிப்பு நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல, மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய @ZEE5India நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல!!!மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க!!
— pa.ranjith (@beemji) June 4, 2020
தலைவி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் ரிலீஸ் குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இருப்பினும் இப்படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார். தலைவி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் தான் சரியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
90-களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, தற்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரோஜா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்த ரோஜா படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் கதையை கேட்டதும் பிடித்துப்போனதால் உடனே நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் அவர் பவர்புல்லான வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவாகிவரும் பிரண்ட்ஷிப் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.
இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை (05.06.2020) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருந்த குழந்தைகள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவி வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நடத்தும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அவரே கூறினார். இந்நிலையில் குழந்தைகள் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், "நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர விரும்புகிறேன். எனது குழந்தைகள் ட்ரீட்மெண்ட் முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி. எனது சமூக சேவைதான், எனது குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார்.
மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடைக்குட்டி சிங்கம் மான்ஸ்டர் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார்.







