என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல்.

     இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். லாக்டவுன் முடிந்த பின் செப்டம்பர் 23-ஆம் தேதி படத்தை வெளியிடுவோம் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

     யாஷ், பிரசாந்த் நீல்


    இன்று (ஜூன் 4) இயக்குனர் பிரசாந்த் நீல் தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கேஜிஎப் சேப்டர் 2 #KGFChapter2 என்ற ஹாஷ் டாக்கை ரசிகர்கள் தற்போது உருவாக்கி டிவிட்டரில் டிரெண்டாக்கி பிரசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் எஸ்.தணிகைவேல் வாழ்த்து கூறி இருக்கிறார்.
    இராம நாராயணன் அவர்களின் மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இன்று தனது பிறந்தநாளை  கொண்டாடி வருகிறார். இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை தயாரித்து இருந்தார்.

    இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

    வாழ்த்து தெரிவித்த காட்சி


    விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனா வைரஸின்  கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.

    திரைப்பட தயாரிப்பாளர்  கேயார்


     டிக்கெட் கவுண்டரில் மக்கள் கூடுவது, இடைவேளையில்  கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது. படத்தின் வசூலையும் பாதிக்கும்.

    எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மன்சூரலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரபலங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான், இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களை பீதியடைய செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும்  மக்களிடம் கொரோனா பயத்தை அதிகரிக்க செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதை காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    மன்சூரலிகான்


    அதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    உலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மன்சூராலிகான் தெரிவித்துள்ளார்.
    விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பெண் நக்சலைட்டாக நடித்துள்ள நடிகை பிரியாமணியின் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    நடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அவர், அடுத்ததாக அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக  நடிக்கிறார். வேணு உடுக்குலா இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

    நாரப்பா, விராட பருவம் பட போஸ்டர்கள்

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாரப்பா மற்றும் விராட பருவம் படக்குழுவினர் அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரை  வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
    பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற ஹிட் படங்களை கொடுத்த சசி அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து படம் இயக்கி வருகிறார் சசி.

    இந்நிலையில், சசி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரீஷ் கல்யாண் படத்தை இயக்கி முடித்தபின், அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி கைவசம் யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ ரணசிங்கம், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல் போன்ற படங்கள் உள்ளன.
    அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் முன்னோட்டம்.
    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 

    மாறா படக்குழு

    இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசாகும் முன்பே பிகில் பட சாதனையை முறியடித்துள்ளது.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.

    விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.15 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்குமுன் விஜய் நடித்த பிகில் படத்தை அந்நிறுவனம் ரூ.14 கோடிக்கு வாங்கியதே சாதனையாக இருந்தது. தற்போது மாஸ்டர் படம் அதனை முறியடித்துள்ளது. மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீசான பின்புதான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    அவருடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே நிறைவடைந்தது. படத்தை மே 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

    நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி

    இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தணிந்து உலகம் எப்போது பாதுகாப்பானதாக மாறுகிறதோ, மக்கள் அனைவரும் பயமின்றி எப்போ குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும். இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு பண்ணிட்டோம்" என கூறினார்.
    அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் மாறா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ’சார்லி’. துல்கர் சல்மான் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தை மார்ட்டின் பர்கத் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் பல்வேறு விருதுகளையும் வாங்கியது. 

    இந்த படம் தமிழில் 'மாறா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே விக்ரம்-வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், படம் குறித்து எந்தவித தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. 

    மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மாதவன் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி மாறா படக்குழு படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பை லாக்டவுன் முடிந்தவுடன் ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகராக அறிமுகமான துருவ், அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தந்தையும் மகனும் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறப்பட்டது. இதனிடையே விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    விக்ரம், துருவ்

    இந்நிலையில், இப்படத்தில் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு இப்படத்தில் பவர்புல்லான ரோலாம். ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி என இரண்டு முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி கண்ட கார்த்திக் சுப்பராஜ், விக்ரம்-துருவ் இருவரையும் வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுனுக்கு பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும். 
    சாந்தனு இயக்கி நடித்த 'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' எனும் குறும்படத்தை பார்த்து விஜய் பாராட்டி உள்ளார்.
    ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே 'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். 

    அந்தவகையில் இந்த குறும்படத்தை பார்த்து விஜய் வாழ்த்தியது குறித்து சாந்தனு தெரிவித்துள்ளார். முதலில் டீசரை விஜய்க்கு சாந்தனு அனுப்பி வைத்தாராம். அதில் "செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் மனுஷன். செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் தான் புருஷன்" என்ற டயலாக் இடம்பெற்றிருக்கும்.

    சாந்தனு, கீர்த்தி

    இதைப்பார்த்த விஜய், 'அட்ரா அட்ரா அட்ரா... Factu Factu Factu' என்று சொன்னாராம். பின்னர் படத்தை பார்த்து நன்றாக இருந்ததாக குறுஞ்செய்தி அனுப்பினாராம்.  அவரது பாராட்டு மிகுந்த உற்சாகம் அளித்ததாக சாந்தனு கூறியுள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, அவருடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×