என் மலர்
சினிமா செய்திகள்
சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்தால் மட்டுமே குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மனித இனத்தின் மீதிருந்த நம்பிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நாம் தவறாக பயன்படுத்துகிறோம். பலவீனமானவர்களை நாம் காயப்படுத்துகிறோம். நம் அரக்கத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள குழந்தைகளைக் கொல்கிறோம்.

நாம் கடக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை மனித இனத்தைச் சுத்திகரிக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற மோசமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த மனிதத்தன்மையற்ற உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானது அல்ல.
ஊடக வெளிச்சத்துக்கு வரும் குற்றங்களுக்கும், சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்தால் மட்டுமே குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது என்று நான் வேண்டுகிறேன். இவ்வாறு இருந்தால் புகார் அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் போகும் குற்றங்கள் என்ன ஆகும்?
பல கொடூரமான குற்றங்கள் நடக்கின்றன. அதில் ஒன்றிற்கு மட்டும் ஹேஷ்டேக் உருவாக்குகிறோம்" என சாய் பல்லவி பதிவிட்டுள்ளார்.
அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நெப்போலியன் வீடியோ காலில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அத்தகைய ஒரு பேட்டியில் விஜய் உடன் உள்ள பிரச்சனை பற்றி பேசி இருந்தார். போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதன்பின் விஜய்யுடன் பேசுவதில்லை, அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை எனக்கூறினார்.

இந்நிலையில், அஜித் பற்றி நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டேன், அஜித் உடன் தான் இன்னும் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனா, வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன். பாசிட்டிவான கதாபாத்திரம் கொடுத்தால் அவருடன் நடிக்க தயார்" என நெப்போலியன் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை ஜெனிலியா, தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
கமல்ஹாசன், சூர்யா, சிரஞ்சீவி, சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை ஜெனிலியாவும் தற்போது சேர்ந்துள்ளார். இவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது ரசிகர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபோல் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புதானம் செய்வதாக கூறியுள்ளார். இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஷாலின் தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அவரது மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஷால் ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர், ‘திமிரு’, ‘ஆம்பள’, ‘பாயும்புலி’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர், பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் விஷாலின் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷாலின் மேலாளர் அரி என்பவர், வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், கூறியிருப்பதாவது: நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. அந்த பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையாடல் செய்தார்களா? அல்லது பணம் எப்படி மோசடி செய்யப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

உதவி கமிஷனரின் அறிவுறுத்தலின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியதால் வருமானம் இன்றி தவித்த நடிகர் ஒருவர், மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
கொரோனாவால் 100 நாட்களுக்கு மேலாக பட உலகம் முடங்கி உள்ளது. படப்பிடிப்புகள் இல்லாததால் முன்னணி நடிகர் நடிகைகள் தவிர சிறிய வேடங்களில் நடித்து வந்த மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் திரையுலகினர் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். தமிழில் ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி டைரக்டர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். ரோஹன் பட்னேகர் என்ற மராத்தி நடிகர் கருவாடு விற்கிறார்.

இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் சுதீஷ் அஞ்சேரி மீன் வியாபாரியாக மாறி இருக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மிமிக்ரி கலைஞராகவும் இருக்கிறார். பள்ளியில் ஓவிய ஆசிரியராகவும் வேலை பார்த்தார். அவர் கூறும்போது, “ஊரடங்கால் சினிமாவில் வருமானத்தை இழந்து மீன் வியாபாரம் செய்ய வந்துள்ளேன். மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்குவதுவரை மீன் வியாபாரம் செய்வேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் சந்தையில் வேலை பார்த்துள்ளேன்” என்றார்.
பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடன இயக்குநராக இருப்பவர் சரோஜ் கான் (71). 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். இதில் ஒரு விருது தமிழில் அதிதிராவ் நடித்த சிருங்காரம் என்ற படத்திற்காக கிடைத்தது.
சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் மூச்சு திணறல் பிரச்சனைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சரோஜ்கானுக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவருக்கு ஏற்கெனவே இருக்கும் மூச்சு திணறல் பிரச்சனைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'’இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாக தகுதியுடையவர்கள் தான்... அது தான் மனிதர்களாகிய நமக்கு கடவுளின் பதிலாகவும் இருக்கும்.. நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்....’’ என பதிவிட்டுள்ளார்.
வித்யாபாலன் நடிப்பில் உருவாக்கியிருக்கும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்துள்ளார்.
கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் படத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார்.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனு மேனன் இயக்கியுள்ளார்.
இப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது? இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது கைவசம் 2 படங்கள் வைத்திருக்கும் தமன்னா விரைவில் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார் என செய்தி பரவி வருகிறது.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆஹா என்ற ஒரு ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவினை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் மற்றும் தமன்னா ஆகியோர் தான் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்காக தமன்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.
நான் துளிகூட நல்லவன் கிடையாது என்று நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன் தியேட்டரில் வெளியாகும் முதல் திரைப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

’மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கேரக்டர் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனது கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






