என் மலர்
சினிமா செய்திகள்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் யோகி, ஊரடங்கு சமயத்தில் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
பிரபல காமெடி நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' மூலம் பிரபலமானவர் யோகி. சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் யோகி தன் காதலி சவுந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த ஜூன் 24-ந் தேதி எளிமையாக நடைபெற்றது. இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
யோகி - சவுந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவரும் காதலிக்கவில்லை. சமீபத்தில் கல்லூரி ரீ-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்துள்ளார். அப்போது காதல் மலர்ந்தாலும், யோகி காதலை வெளிப்படுத்தவில்லையாம்.

இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில், எப்படியோ காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் பிடித்துப்போனதால், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால், யோகியின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அக்ஷய் குமாருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதி அளித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார், டாக்டரை சந்திக்கப்போவதாக சிறப்பு அனுமதி பெற்று மும்பையில் இருந்து நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அக்ஷய் குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்கு தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது?. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு’ என்று தெரிவித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடலை என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர்.
ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலாவுக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் பிரபல நடிகரின் தந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. புட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கதிரின் வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா - அம்மாவின் போட்டோ பகிர்ந்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில்,

இருவரது வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் கனவும், ஆசையும் தான் இன்றைக்கு நான் இருக்கும் இடம். 53 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு மாஸ்டர் படத்தில் நிறைவேறியது. அது மிகவும் சிறிய வேடம் தான். அவருடைய வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்ட வனிதா முத்தத்திற்கு அர்த்தம் கூறி பதிவு செய்திருக்கிறார்.
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் சர்ச்சையாகி பீட்டர்பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் வனிதா-பீட்டர் பால் திருமணத்தன்று வனிதாவின் உதட்டில் பீட்டர் பால் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முன் முத்தம் கொடுப்பது குறித்து ஒரு சிலர் சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டி வந்தாலும், வனிதா இதற்கும் பதிலடி பதில்களை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது வனிதாவின் நெற்றியில் பீட்டர் பால் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’ என குறிப்பிட்டுள்ளார்.
Magalgalai Petra Appaakkalukku Mattum Thaan Theriyum
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 2, 2020
Mutham Kaamathil Serndhadhu Illai Endru...🤗 pic.twitter.com/3QqUu41Ecv
வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் அறந்தாங்கி சிறுமி கொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து ஒரு பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கொடூர செயலை கண்டித்து ஒரு பதிவு செய்துள்ளார்; அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல. நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் செய்து பதிவு செய்துள்ளார் கவினின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தன்னுடைய பட வாய்ப்புகளை தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்.
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் வாரிசு நடிகர்கள் புதிய படங்களில் தன்னை ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து டாப்சி கூறியதாவது:-

சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு தொடர்புகள் அதிகம் கிடைக்கிறது. இதனால் சினிமா வாய்ப்புகளை எளிதாக பெற்று விடுகின்றனர். ஆனால் வெளியில் இருந்து வரும் நடிகர் நடிகைகள் பிரபலங்களுடன் அறிமுகமாகவும் தொடர்புகளை உருவாக்கவும் அதிக நாட்கள் தேவைப்படும்.

இயக்குனர்கள் வெளியில் இருந்து வருபவர்களை நடிக்க வைப்பதற்கு பதிலாக தனக்கு தெரிந்தவர்களையே நடிக்க வைக்கின்றனர். நான் வாரிசுகள் ஆதிக்கத்தினால் சில பட வாய்ப்புகளை இழந்து வேதனைப்பட்டேன். இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதற்கு ரசிகர்களும் காரணம். சினிமா குடும்பத்தில் இருந்து அறிமுகமாகிறவர்களின் படங்களை பார்க்கவே அவர்கள் ஆர்வமாக செல்கிறார்கள். மற்றவர்கள் படங்களை பார்க்க மறுக்கின்றனர்.
இவ்வாறு டாப்சி கூறினார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றால், இந்த உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை அனுதினமும் சந்தித்து வருகிறோம். பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது.
கேரளாவில் மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்க்கையையும் கொரோனா வைரஸ் தொற்று புரட்டிப்போட்டிருக்கிறது. நடிகை மஞ்சுவுக்கு 15 ஆண்டுகளாக சோறு போட்டுக்கொண்டிருந்தது மேடை நாடகங்கள்தான். தனது சேமிப்பையும் கேரள மக்களின் கலைக்கழகத்திடம் கடன்பெற்றும் ஒரு ஆட்டோவை வாங்கினார். அந்த ஆட்டோ அவர் நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவதில் வழித்துணைவனாக மாறிப்போனது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாதக்கணக்கில் ஊரடங்கு போடப்பட, மேடை நாடக அரங்கேற்றங்கள் நடைபெற வழியற்றுப்போனது. இதனால் தனது கையில் இருக்கிற ஆட்டோவையே வாழ்வாதார சாதனமாக மாற்றினார். ஆமாம். இப்போது அவர் ஆட்டோ ஓட்டி தனது வாழ்வாதாரத்தை சம்பாதித்துக்கொள்கிறார்.
கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி விடாமல் நெஞ்சில் துணிவுடன் ஆட்டோ ஓட்டி வாழ்வில் புதிய பாதையை போட்டுள்ள நடிகை மஞ்சுவை அந்தப் பகுதியில் பாராட்டாதோர் யாருமில்லை.
விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கிய இயக்குனருக்கு பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார்.

மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக தற்போது இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் இச் செய்தியை மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆறுமுக குமார், "மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (FINAS) எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

ஓர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் மற்றும் வணிகப் பிரிவின் (FINAS) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்திய மலேஷிய பொழுது போக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பாலமாக இருப்பேன்" என்றார்.
பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வரும் லலிதா ஷோபி, அந்த படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை என்று கூறியுள்ளார்.
எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி.

திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி, கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், விஜய் நடித்த பிகில், விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
`சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார் நடன இயக்குனர் லலிதா ஷோபி.






