என் மலர்
சினிமா செய்திகள்
இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நடிகை மீரா சோப்ரா என்கிற நிலா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம் சாட்டினார். தற்போது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “நானும் வேறு சிலரும் நடிகர்கள் எதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை.
எனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி. சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை. வேலையை தாண்டியும் பல விஷயங்கள் சினிமா துறையில் நடக்கின்றன. இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. சுயமரியாதை, கவுரவத்தை விட மன அமைதி முக்கியம்.” இவ்வாறு நிலா கூறியுள்ளார்.
வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக மாறி விடும்.
நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் எனக்கு சவாலாக இருக்கிற மாதிரியான நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் நானும் விரும்பினேன். படப்பிடிப்பில் தொழில் ரீதியாக பிரச்சினைகள் நிறையவே இருந்தன. இப்போது அவற்றை நினைத்து பார்த்தாலும் இனிமையான நினைவுகள்தான்.

விவேகம் படப்பிடிப்பில் மைனஸ் 12 டிகிரி குளிரில் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் புடவை கட்டி நடித்தேன். திரையில் ரசிகர்கள் பார்த்து பாராட்டியதை பார்த்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஆனந்தமாக மாறி விட்டது. இதுமாதிரி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுதான் நமது பலவீனம். சாதிக்க முடியும் என்று நினைத்தால் அதுதான் நமது பலம். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
பெண்குயின், சிந்துபாத் படங்களில் நடித்த லிங்கா, சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்தவர் லிங்கா. இவர் நடிப்பில் தற்போது தடயம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை மணி கார்த்திக் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து மணி கார்த்திக் கூறும் போது, ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன். சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு, தற்போது 'தடயம்: முதல் அத்தியாயம்' என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறேன்.

தடயம் முதல் அத்தியாயம் உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். போலீஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது.
தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத, 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அருண் விஜய் நடிப்பில் உருவாகும் பாக்ஸர் படத்தின் வில்லன் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன், அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை தொடர்ந்து தற்போது, 'சவரக்கத்தி' படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் 'பிதா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.

மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

இன்று காலை நடைபெற்ற சம்பிரதாயமான துவக்க விழா பூஜையில் 'பிதா' படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷெரின், ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டில் தான் 10 கிலோ எடை குறைந்து விட்டேன். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது என்னை நானே கண்ணாடியில் பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் முக்கியம் மகிழ்ச்சியாக இருப்பதுதான். உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது. கோபமான மற்றும் கடினமான வார்த்தைகளைப் பேசாமல் எப்பொழுதும் நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் போதும் உடல் எடை தானாக குறைந்து விடும் என்று ஷெரின் கூறியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், தனது மகன் துருவை மாஸ் ஹீரோவாக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதித்ய வர்மா படம் மூலம் கவனம் ஈர்த்த துருவ், இப்படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மகன் துருவை மாஸ் ஹீரோவாக்கவே விக்ரம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் ஏற்கனவே இருமுகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமி’ படத்தின் முன்னோட்டம்.
ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம், ‘பூமி.’ இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரிக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் லட்சுமண் கூறியதாவது: விவசாயிகளின் பிரச்சினைகளை படம் பேசும். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாய கதையாக இருந்தாலும் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலை வைத்து வணிக ரீதி படமாக எடுத்துள்ளோம். படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் படமாக இது தயாராகி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
தனுஷ், செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் சமூக வலைத்தளம் வாயிலாக நன்றி தெரிவித்து உள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இப்படத்தின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்டதால் 2010-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், காதல் கொண்டேன் படத்தின் 17-வது ஆண்டு வெற்றியை டுவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி சோனியா அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், “இறைவனுக்கு, மயக்கும் தமிழ்நாட்டுக்கும், செல்வராகவன் மற்றும் மிஸ்டர் கஸ்தூரிராஜாவுக்கு நன்றி, அற்புதமான ரசிகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி 17 வருடங்கள் ஆகிறது.

தனுஷ் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. காதல் கொண்டேன், தமிழ் சினிமா இதுவரை காணாத, எந்தப் படத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு படம்,” எனக் கூறியுள்ளார்.
கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது. 1997-ல் வி.ஐ.பி, ஒன்ஸ்மோர் ஆகிய 2 படங்களில் அறிமுகமானார். இந்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே.சம்மந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ, வாரணம் ஆயிரம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2003-ல் தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் 23 வருடங்களாக நீடிப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “23 ஆண்டுகளுக்கு பிறகும் திரையுலக சகாப்தமான சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய நாட்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த நாளில் எனது வாழ்நாள் கனவு நிறைவேறியது. அவரிடம் இருந்து ஆசிர்வாதமும் படிப்பினையும் கிடைத்தது. அதுபோல் நண்பர்கள் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் நடித்ததும் எனது அதிர்ஷ்டம். எனது கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் போக்கூரி ராமராவும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இவர் கோபிசந்த் நடித்த ரணம், நேட்டி பாரதம், இன்ஸ்பெக்டர் பிரதாப், அம்மாயிகோசம் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார்.
போக்கூரி ராமராவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலும் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65. ஏற்கனவே பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராஜ்திலக் இந்தி படத்தை தயாரித்த பிரபல இந்தி பட அதிபர் அனில்கபூர் ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளன.
இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.






