என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கேப்டனாக அவர் வழிநடத்திய விதத்தால் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. பிரபல நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகர் தனது தாய் 81 வயதில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதலே திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் திரைபிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் வீட்டு வேலைகள் செய்வது, உடற்பயிற்சி வீடியோக்களையும் நடிகர், நடிகைகளின் சமூகவலைதள பக்கங்களில் அதிகம் காண முடிகிறது.

இந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமன் தனது தாயார் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, அவரது 81-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 81வது பிறந்த நாளை எனது அம்மா கொண்டாடுகிறார். 15 தண்டாலுடன் பார்ட்டி, பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா'' என்று கூறியுள்ளார்.
சமூக அவலங்களைப் பற்றி நடிகர் பிரசன்னாவும் சேரனும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
நடிகர் பிரசன்னா சமூக விஷயங்கள் பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அறந்தாங்கி அருகே ஜெயப்பிரியா என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆனது. அதில் நடிகர் நடிகைகள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா “ஜெயலலிதா, ஜெயராஜ் அல்லது ஜெயப்பிரியா சம்பவங்கள் அடுத்த பரபரப்பான மரணம், கொலை, பாலியல் வன்கொடுமை செய்திகள் வரும்வரைத்தான்.
அதன்பிறகு நீதி கோரும் ஹேஷ்டேக்குகள் மாறும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்தி உள்ளன. சோகம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. மறதி ஒரு தேசிய வியாதி” என்று சாடியுள்ளார்.
பிரசன்னாவின் கருத்துக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள டைரக்டர் சேரன், “மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு. எல்லாவற்றையும் அடுத்த செய்தியில் மறந்து விடுவான் என்ற நம்பிக்கையால்தான் இத்தனை காலம் நடந்த அத்தனை பட்டாபிஷேகங்களும் நடத்தப்பட்டன” என்று கூறியுள்ளார்.
விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் புவனா தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் புவனா. பத்திரிகையாளராக தனது கேரியரைத் தொடங்கிய இவர், விபி பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படம், குறும்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்தார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், 2005 ஆம் ஆண்டு ரைட்டா தப்பா என்ற படத்தை இயக்கி தயாரித்தும் இருந்தார். அந்தப்படம் வணிகத்தை விட விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழக அரசின் 2 மாநில விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. தன்னை இன்னும் மெருகேற்றுவதற்காக அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்தார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட பல கோர்ஸைகளையும் முடித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது அங்கிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தயார்நிலையில் வைத்திருக்கிறார்.

இவர் இதற்கு முன் பல குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு "காதலிக்க நேரமுண்டு" என்ற படத்தை இயக்கி தயாரிக்க இருக்கிறார்.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்தபின் தொடங்க இருக்கிறது.
இவர் புவனா மீடியா என்ற இணையதளத்தையும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். மிக முக்கியமாக விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே.. 2009-இல் வெளியானது இந்தக் குறும்படம். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதால் இவரது மீடியா தளம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தரமான அறம் சார்ந்த படத்தை அடுத்த வருடம் தர இருக்கிறார்.
நடிகை வரலட்சுமி சரத்குமாரை வைத்து ராஜபார்வை என்ற படத்தை தயாரித்து இருக்கும் தயாரிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.

ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடிக்கவே, ஒருகட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன்.. ஆனால் பாபுரெட்டி பணத்தை திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார் பாபுரெட்டி.
இந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதன் காரணமாக, ஊரடங்கு என நிலைமையே மாறிவிட்டது. இதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த ‘ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜயராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார்.. இந்த விஜயராஜேஷ் ரங்கப்பா உடனே இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார். படத்தை இன்னொருவருக்கு விற்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதை கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசிய பாண்டியனுக்கு அவரது அட்வான்ஸ் தொகையை திருப்பித்திந்திருக்க வேண்டும்..

ஆனால் அப்படி செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, மலேசிய பாண்டியனுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ராஜபார்வை படத்தை OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. படத்தை தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை இந்த மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்பது மலேசியா பாண்டியனுக்கு தெரிவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் மலேசியா பாண்டியன்.. மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது: 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். 'மங்காத்தா' படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.
அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
மணி கார்த்திக் இயக்கத்தில் லிங்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தடயம் முதல் அத்தியாயம் படத்தின் முன்னோட்டம்.
மணி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தடயம் முதல் அத்தியாயம்'. உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்டுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இதில், கதையின் நாயகனாக பெண்குயின், சிந்துபாத் மற்றும் சேதுபதி படங்களில் நடித்த லிங்கா, நடித்திருக்கிறார். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். விஐய் அன்டரிவ்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் மணி கார்த்திக் கூறியதாவது: போலிஸ் அதிகாரியாக வரும் லிங்காவைச் சுற்றி நடக்கும் தொடர் கொலைகள் அதில் கிடைக்கும் திடுக்கிடும் தடயங்கள் அவரை மேலும் முன்னோக்கி நகர்த்த அதில் அவர் சந்திக்கும் இன்னல்கள், இறுதியில் எதிரியின் சதியை முறியடித்தாரா என்று முதல் அத்தியாயம் தொடர்கிறது. தடயம் முதல் அத்தியாயத்தின் காட்சிகள் அனைத்தும் கொடைக்கானல் பிண்ணனியில் அமைக்கப்பட்டுள்ளது. தடயம் முதல் அத்தியாயம் விறுவிறுப்பான ஒரு சஸ்பன்ஸ் திரில்லராக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் என்பதில் எங்கள் படக்குழு நன்னம்பிக்கை கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரம்யா பாண்டியன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'டம்மி டப்பாசு' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ராஜூமுருகனின் 'ஜோக்கர்' படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 'ஆண் தேவதை' எனும் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்
படங்களைத் தாண்டி, சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தக் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வரும் ரம்யா பாண்டியன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்ல உள்ளீர்களா' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், "தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்" என பதிலளித்துள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசனின் போதே ரம்யா பாண்டியன் பங்கேற்க ஆர்வம் காட்டி இருந்தார். ஆகையால், பிக்பாஸ் 4-வது சீசனில் ரம்யா பாண்டியனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் உலக சாதனை படைத்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள்.
இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு யூடியூபில் வெளியான சினிமா டிரெய்லர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டிரெய்லர் மொத்தமாக 36 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 'தில் பெச்சாரா' படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. தற்போது வரை 'தில் பெச்சாரா' டிரெய்லர் 50 லட்சம் லைக்குகளுடன் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
#DilBecharaTrailer is out now, enjoy the love tale. https://t.co/aJXQC83his#SushantSinghRajput@foxstarhindi@sonymusicindia@DisneyplusHSVIP@MukeshChhabraCC
— A.R.Rahman (@arrahman) July 6, 2020
முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் ஆகிய 2 படங்கள் வந்தன. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது அருவா, வாடிவாசல் ஆகிய 2 புதிய படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
அருவா படத்தை ஹரி இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் 3 பாகங்கள் வந்துள்ளன. வேல் படத்தை போலவே அருவா கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தனுசை வைத்து இவர் இயக்கி திரைக்கு வந்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சூர்யா தந்தை, மகனாக இருவேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அருவா படத்தை முடித்து விட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார்.
ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை நேரடியாக இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை இணைய தளத்தில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓடிடி தளத்தில் வெளிவந்தன.
அந்தவகையில், அடுத்ததாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

ஷகிலா 1990-களில் மலையாள பட உலகில் கொடி கட்டி பறந்தார். மம்முட்டி-மோகன்லால் படங்களையே வசூலில் இவரது படங்கள் பின்னுக்கு தள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.
எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி அனிருத் அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர்.
பிரபல சினிமா இசைப்பாளர் அனிருத் ரஜினி ஸ்டைலில் தனது வாழ்த்தை மியூசிக் மூலம் வெளிப்படுத்த விரும்பினார். பின்னணி இசையுடன் ஒவ்வொரு எழுத்தாக ‘SUPER STAR RAJINI’ வந்தபோது தியேட்டர் ரசிகர்களின் கைத்தட்டலாம் அதிர்ந்தது. அதன்பின் ரஜினி நடித்த படங்களில் யார் இசை அமைத்தாலும் இந்த பின்னணி மியூசிக் உடன் ரஜினி பெயர் திரையில் தோன்றும்.
ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் மரணம்... மாசு மரணம்... என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.
இன்று எம்எஸ் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது இசையின் மூலம் சிறப்பான வகையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். ரஜினியின் டைட்டில் பெயர் வருவதுபோல் எம்எஸ் டோனி பெயர் வருவது போல் உருவாக்கி, அதன்பின் மரணம்... மாசு மரணம்... என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






