search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி‌ஷால்"

    • வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

    லத்தி - வி‌ஷால்

    லத்தி - வி‌ஷால்

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

    லத்தி - வி‌ஷால்

    லத்தி - வி‌ஷால்

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து 'லத்தி' திரைப்படத்தின் டீசர் 24-07-2022 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி 'லத்தி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விஷாலுக்கு உரித்தான ஆக்‌ஷன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது. 



    ×