என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. நலம்பெற வேண்டி திரைப்பிரபலங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளனர்.
    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து பிரபலங்கள் பலர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.

    நடிகர் பார்த்திபன்

    தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு. அப்படி எஸ்.பி.பி.யின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும். நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைகளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் திரு எஸ்.பி.பி.யின் இளமை ததும்பும் பாடல்களே! காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட, எஸ்.பி.பி.யின் குரல் பத சதவிகிதம் கூடுதலே. 

    பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால், இன்று மாலை 6 மணிக்கு, அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி... இசையுலகின் பெரும்புள்ளி நோக்கி... அவர் மீண்டு வந்து, நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த, நம் இதயங்குவித்து பிரார்த்தனை செய்வோம். 

    தயாரிப்பாளர் தாணு

    வானுதிர்த்த கதிராக நெல்லூரில் வந்துதிர்த்த இசையே குழல் இனிது யாழ் இனிதா? என்றால் நின் குரலே இனிதென்பேன். முக்கனி சாறெடுத்து கொம்புத் தேனில் முகிழ்த்தெடுத்த அருஞ்சுவைக்கு மேலானது நின் குரலே சுவையென்பேன். அங்கிங்கெனாதபடி எங்கும் நின் குரல் கேட்க எட்டுத்திக்கும் எதிரொலிக்க எழுந்து வா! பாலு விரைந்து வா. 

    இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா தேனிசைத் தென்றலும் ஏழிசை சுரங்களும் நின் வரவுக்காக காத்திருக்க எழுந்து வா! பாலு விரைந்து வா. ஆம் பாரதிராஜா வேண்டியபடி  அகிலம் ஆண்டவனை பிரார்த்திக்க நீ. வருவாய் திருவாய் மலர்வாய்.


    பாடகர் ஹரிகரன்


    நடிகர் ரஜினிகாந்த்

    ரஜினியின் அறிக்கை

    இசையமைப்பாளர் டி.இமான்

    இளையராஜா

    மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின், 4-வது சீசனுக்காக நடிகர் கமல்ஹாசன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
    தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. 

    விரைவில் பிக்பாஸ் 4-வது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறதாம். 

    கமல்ஹாசன்

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

    பிக்பாஸ் 4-வது சீசனிலும் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. ஏனெனில், இதில் வனிதாவின் 3-வது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது.
    நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வரும் மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்து கலாம் இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் பற்றி பல விமர்சனங்களை வைத்திருந்தார். இதைக் கண்டித்து நடிகர்கள் சூர்யா, விஜய்யின் ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

    இந்த விமர்சனங்களுக்கு எதிராக சூர்யா, விஜய்யின் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டார். இதனை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    மீரா மிதுன்

    இந்த புகாரை மீரா மிதுன் கேலி செய்து பதிவு செய்ததாக, மீரா மிதுனின் உருவ பொம்மைகளை எரித்து, புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற்று வர ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். இதை வரவேற்கும் விதமாக பலரும் நாளை மாலை 6.00 மணிக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.



    தற்போது நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரும் ஒரே காரியத்திற்காக வேண்டும் போது அதன் சக்தியே தனி. அந்த சக்தி மூலமாக பலர் மீண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் நம்ம எஸ்.பி.பி.க்காக நாளை மாலை 6 மணிக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வீடியோவில் கூறியிருக்கிறார்.
    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற்று வரவேண்டும் என்று சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். 

    இந்நிலையில் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்து வரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

    இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

    இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டும் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

    சிம்பு அறிக்கை

    லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் பாடும் நிலா எழுந்து வரவேண்டு நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்.பி.பி. அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

    வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்...

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ படம் பற்றிய மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் போது படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 

    ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய்

    இந்நிலையில் ‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    நேற்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
    கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா' எஸ்.பி.பி தான்.

    தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதை பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 20-8-2020 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்.

    பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம்.”

    இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    நடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார். அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    குஷ்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, இன்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் என் கணவரை அதிகம் சைட் அடித்தேனா அல்லது வேறு யாராவது என்னை சைட் அடித்தார்களா என தெரியவில்லை இப்படி ஆயிருச்சு என நகைச்சுவையாக பதிவிட்டு, கண்ணில் லேசான அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், சில நாட்களில் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளார். 
    முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு, அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள காதம்பரி படத்தின் முன்னோட்டம்.
    அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.
    பேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளாராம்.
    அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.

    படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.

    காதம்பரி படத்தின் போஸ்டர்

    இப்படத்தின்  டிரெய்லரை புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளனர். முதலில் இதன் டிரெய்லரை வெளியிடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனை அணுகியதாகவும் ஆனால் அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.

    நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் புதிய படம் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தான் நினைத்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டதால் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.
    பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கி உதவியுள்ளார்.
    அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அம்மாநிலத்தில், 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின கடும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளத்தால் 80 போ் பலியாகியுள்ளனர், சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சர்பானந்தா சோனாவாலின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து அம்மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் தனது சமூக வலைதள பதிவில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு, ரூ. 1 கோடி வழங்கிய நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நன்றி. இக்கட்டான சூழ்நிலையில் எப்போதும் உங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறீர்கள். அசாமின் உண்மை நண்பனான உங்களுக்கு கடவுள் அருளால் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். 
    ×