என் மலர்
சினிமா செய்திகள்
எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகியே விளக்கம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம் தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன் இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.

என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான் முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.
தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டி உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி.க்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சிலர் கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே எஸ்.பி.பி. பாடிய சங்கராபரணம் எனும் சூப்பர் ஹிட் பாடலை வாசித்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தித்தனர். இதன் பின்னர் எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது.

சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும், ஐயப்பனின் புகழைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் 'ஹரிவராசனம்' என்ற விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு எஸ்.பி.பி.க்கு இந்த விருது வழங்கப்பட்டது. இளையராஜா, பி சுசீலா, கே.ஜே. ஜேசுதாஸ் உள்பட பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும். கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் எனும் 3டி படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம் ராமாயணத்தின் ஒருபகுதியை படமாக்குவது உறுதியானது.

ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஷ்வினும் ஆதிபுருஷ் கதை ராமாயணத்தை மையமாக வைத்துதான் உருவாகிறது என்று தெரிவித்துள்ளார். கடவுள் ராமராக பிரபாஸை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நடிகர்கள்தான் இதற்கு முன்னால் ராமராக நடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2022-ல் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை குழுவினருடன் இந்திய மற்றும் உலக தரம் வாய்ந்த மருத்துவர்கள் இணைந்து எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி. உடல் நலம் பெற திரை உலகினர், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இன்று கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.
நான் ஈ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நானி, தனது 25வது படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
நான் ஈ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நானி. இவர் நடிப்பில் தற்போது ‘வி’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இது நானி நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இதில் அவர் முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக இப்படம் திட்டமிட்டபடி தியேட்டரில் வெளியாகவில்லை. இதனால் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

தனது 25-வது படம் ஓடிடியில் வெளியாவது குறித்து நானி, "கடந்த 12 ஆண்டுகளாக எனது படங்களைக் காண டிக்கெட்கள் எடுத்து திரையரங்கிற்கு வந்தீர்கள். இப்போது நான் உங்களுடைய வீட்டிற்கே வந்து நன்றி கூறவுள்ளேன் என்று கூறியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், இப்படி பாட உங்களால் மட்டும் தானே முடியும் என்று பிரபல நடிகர் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் #GetWellSoonSPBSIR 🙏🙏🙏 pic.twitter.com/RmwGhPGPAD
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 20, 2020
இந்நிலையில், எஸ்.பி.பி உடல் நலம் பெற திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எஸ்.பி.பி. பாடலை வெளியிட்டு ‘இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம். என்று பதிவு செய்திருக்கிறார்.
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று பிரபலங்கள், ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரவர் வீட்டில் இருந்த படியே எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தார்கள். இயக்குனர் பாரதிராஜா தலைமையில், பிரபு, நடிகை சரோஜாதேவி, இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சன், பார்த்திபன், சேரன், கே.எஸ்.ரவிக்குமார், லிங்கு சாமி ஆகியோர் வீடியோ மூலம் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள்.

அதுபோல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
ரசிகர்களின் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்புகிறோம் என்று பாடகர் எஸ்.பி.பி மகன் சரண் கூறியுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி.யின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் எஸ்.பி.பி.யை மீட்கும். இன்று அவருக்காக தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்கள்.
விவி இயக்கத்தில் ஆர்யன் ஷாம், ஆத்யா, லீமா பாபு நடித்துள்ள ‘அந்த நாள்’ படத்தின் முன்னோட்டம்.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க ஆர். ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் ‘அந்த நாள்’. வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விவி.
இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான இறுதிக் கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு நடித்துள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார். சதீஷ் கதிர்வேல்
ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.எஸ். ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற இறைவனிடம் வேண்டுவதாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் நீங்க தேன் சாப்பிடுவீங்களானு கேட்டேன். ஏன் அப்படி கேட்கிறீங்கன்னு கேட்டார்.
இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குதுன்னு சொன்னேன். அதற்கு அவர் ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்கனு சொன்னார். அவர் உடல்நலம் சரியில்லாம இருப்பதை பார்த்து இந்தியாவே கவலைப்படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும் என சரோஜா தேவி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.






