என் மலர்tooltip icon

    சினிமா

    எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.பி.பி.சரண்
    X
    எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.பி.பி.சரண்

    ரசிகர்களின் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்புகிறோம் - எஸ்.பி.சரண்

    ரசிகர்களின் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்புகிறோம் என்று பாடகர் எஸ்.பி.பி மகன் சரண் கூறியுள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

     இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி.யின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் எஸ்.பி.பி.யை மீட்கும். இன்று அவருக்காக தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

    இன்று மாலை 6 மணிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்கள்.
    Next Story
    ×