என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது மனைவியுடன் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதுமாக முடிந்த பின்பு ‘வலிமை’ திரைப்பட ஷூட்டிங்கை தொடங்கலாம் என்று அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

    லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித் தலையில் தொப்பி, முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார்.


    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

    இயக்குனர் 'சுதா கொங்கரா' அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பில் உருவாகும் திரைப்படம் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை.

    எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.

    சூர்யா அறிக்கை

    'சூரரைப் போற்று திரைப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சார்ந்தவர்களும் என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படம் சூரரைப் போற்று நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள், கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

    இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். 'சூரரைப் போற்று திரைப்படம் வெளியிட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு, 'ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

    பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் 'கொரோனா யுத்த களத்தில்" முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும். வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மன உறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம். நன்றி’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படாமல் இருந்தது. தியேட்டர்கள் திறந்ததும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


    இந்நிலையில், இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    செக் மோசடி வழக்கில் பிரபல நடிகருக்கு நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
    தமிழில் ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடித்த தென்றல் வரும் தெரு மற்றும் காசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரிஸாபவா. பிரபல மலையாள நடிகரான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் நடிகர்கள் படங்கள் மலையாள மொழிகளில் வெளியாகும்போது அவர்களுக்கு டப்பிங் குரலும் கொடுக்கிறார்.

    கடந்த 2014-ல் எலம்காரா பகுதியை சேர்ந்த சாதிக் என்பவரிடம் ரிஸாபவா ரூ.11 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக அவருக்கு காசோலை கொடுத்து இருந்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து சாதிக் எர்ணாகுளம் கோர்ட்டில் ரிஸாபவா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    ரிசாபாவா

     நீதிமன்றம் கெடு விதித்தும் கடனை அவர் திருப்பி கொடுக்காததால் ரிஸாபவாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ.11 லட்சத்தையும் செலுத்தினார். ஆனாலும் கோர்ட்டு விதித்த காலஅவகாசத்துக்குள் பணத்தை செலுத்த தவறியதால் நீதிமன்றம் முடியும் வரை அறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்தார்.
    நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயம் தான் அதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
    நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

     “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன.

     எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ஆகும். திருமணம் ஆனபிறகும் எனக்கு வித்தியாசமான கதைகளும் ரசிகர்கள் பாராட்டும் கிடைக்கிறது. நான் நாகார்ஜுனா வீட்டு மருமகள். அவர் குடும்பத்து பெயர் என்னால் கெடக்கூடாது என்று ஜாக்கிரதையாக கதைகள் தேர்வு செய்கிறேன். இப்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

    சமந்தா

     அந்த மாதிரி கதாபாத்திரம் எனக்கு வரும்போது இதை என்னால் செய்ய முடியுமா முடியாதா என்ற பயம் எனக்குள் ஏற்பட வேண்டும். அப்படி பயம் இருந்தால்தான் இன்னும் கவனமாக அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும். சமீபத்தில் எனக்கு நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் வருவதற்கு காரணம் இந்த பயம்தான்.” இவ்வாறு சமந்தா கூறினார்.
    பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள நகுல், தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார்.
    சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்த கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. 

    இந்நிலையில் நடிகர் நகுல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நாங்கள் எங்கள் மகளுக்கு Nak(khul) & Sru(Bee) - Khulbee) குல்பி என்று பெயரிட்டுள்ளோம் என்று உங்களில் பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புனைப்பெயர். அடுத்த சில மணிநேரங்களில் குழந்தையின் பெயரை வெளியிடுவோம் என்று பதிவிட்டிருந்தார். 

    நகுல் மகளின் பெயர்

    இதையடுத்து மற்றொரு பதிவில் குழந்தையின் பெயரை வெளியிடுள்ளார். குழந்தைக்கு அகீரா என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடிகையை வீட்டிலேயே மிகவும் எளிமையாக இயக்குனர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல திருமணங்கள் எளிமையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும் திரைப்பிரபலங்களின் திருமணம் கூட மிகவும் எளிமையாகவும் நடைபெற்று வருகிறது.

    அப்படி தற்போது தமிழில் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதாவிற்கும் நடிகை ஷாலினி வட்னிகட்டிக்கும் இன்று வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

    மனோஜ் பீதா - ஷாலினி வட்னிகட்டி

    இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம், டிக்கிலோனா டிரைலரில் நடந்த கல்யாணத்தை நிறுத்த செல்கிறார்.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.



    இதில், டைம் மிஷின் மூலம் 2027ல் இருந்து 2020 ஆம் ஆண்டுக்கு செல்லும் சந்தானம், அப்போது நடக்க இருக்கும் கல்யாணத்தை தடுத்து நிறுத்த செல்வதாக டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியில் சந்தானம் மூன்று கெட்டப்புகளில் ஒரே காட்சியில் தோன்றுவது போல் காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து பிரபல நடிகை ஒருவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது சினிமா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் நெப்போட்டிஷம்தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. 

    இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தில், நீதி கிடைக்க வேண்டும் என தொடக்கத்தில் இருந்து பேசி வரும் நடிகை கங்கனா ரனாவத் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுவரையும் ட்விட்டர் வலைதள பக்கத்தில் நேரடியாக இல்லாமல் இருந்த கங்கனா, தற்போது அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார். 



    இதுகுறித்து பேசிய அவர், ''நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ஏன் சோஷியல் மீடியாவில் நான் இணையவில்லை என பலர் கேட்டுள்ளனர். எனக்கு அதில் பெரிதான விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அண்மையில் சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்பதில், சோஷியல் மீடியாவின் சக்தியை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் காரணமாகதான் இந்த முடிவு'' என தெரிவித்துள்ளார். இதையடுத்து கங்கனாவின் ரசிகர்கள், #BollywoodQueenOnTwitter என நடிகையின் ட்விட்டர் வரவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் , எக்மோ உதவியுடன் எஸ்.பி.பி.க்.கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, புதிய கெட்-அப்பில் இருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது 'மாஸ்டர்' திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள 'லாபம்' படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    சமீபத்தில் விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. புதிய படத்தின் கெட்-அப்பாக இருக்கும் என்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறும்போது, ''லாக்டவுனா இருக்குறதுனால டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேன் சார். அதான். மூஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமே. 

    விஜய் சேதுபதி

    பூமியோட குணம் ஒன்னு இருக்கு சார். ஒரு புல் தரை இருக்கு. அதுல நடந்துட்டே இருந்தா பாதை வந்துடும். நடக்கமா விட்டிங்கனா திரும்ப புல் மொளச்சுடும். recover ஆகும் தன்மை பூமியை போல மனுசனுக்கு இருக்கு என நான் நம்புறேன்'' என்றார்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.  

    படத்தைப் பற்றி ஆனந்தன் சொல்கிறார்: “இது, ஆன்லைன் வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். விஷாலிடம் கதையை சொன்னதும் அவருக்கு பிடித்து விட்டது. “இந்தப் படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன். கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும்” என்று கூறிவிட்டார். ‘கதையில் வரும் பெண் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு யாரை தேர்வு செய்வது’ என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. 

    சக்ரா படக்குழு

    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். சென்னை மற்றும் கோவையில் படம் வளர்ந்து இருக்கிறது. இந்தப் படம், ஒரு தொழில்நுட்ப ‘த்ரில்லர்.’ விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் விருந்தாக இருக்கும்.”
    ×