என் மலர்
சினிமா

ரிஸாபவா
செக் மோசடி வழக்கில் நடிகருக்கு நூதன தண்டனை
செக் மோசடி வழக்கில் பிரபல நடிகருக்கு நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழில் ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடித்த தென்றல் வரும் தெரு மற்றும் காசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரிஸாபவா. பிரபல மலையாள நடிகரான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் நடிகர்கள் படங்கள் மலையாள மொழிகளில் வெளியாகும்போது அவர்களுக்கு டப்பிங் குரலும் கொடுக்கிறார்.

கடந்த 2014-ல் எலம்காரா பகுதியை சேர்ந்த சாதிக் என்பவரிடம் ரிஸாபவா ரூ.11 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக அவருக்கு காசோலை கொடுத்து இருந்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து சாதிக் எர்ணாகுளம் கோர்ட்டில் ரிஸாபவா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் கெடு விதித்தும் கடனை அவர் திருப்பி கொடுக்காததால் ரிஸாபவாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ.11 லட்சத்தையும் செலுத்தினார். ஆனாலும் கோர்ட்டு விதித்த காலஅவகாசத்துக்குள் பணத்தை செலுத்த தவறியதால் நீதிமன்றம் முடியும் வரை அறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்தார்.
Next Story