என் மலர்tooltip icon

    சினிமா

    சக்ரா பட போஸ்டர்
    X
    சக்ரா பட போஸ்டர்

    சக்ரா

    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம்.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.  

    படத்தைப் பற்றி ஆனந்தன் சொல்கிறார்: “இது, ஆன்லைன் வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். விஷாலிடம் கதையை சொன்னதும் அவருக்கு பிடித்து விட்டது. “இந்தப் படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன். கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும்” என்று கூறிவிட்டார். ‘கதையில் வரும் பெண் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு யாரை தேர்வு செய்வது’ என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. 

    சக்ரா படக்குழு

    கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். சென்னை மற்றும் கோவையில் படம் வளர்ந்து இருக்கிறது. இந்தப் படம், ஒரு தொழில்நுட்ப ‘த்ரில்லர்.’ விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் விருந்தாக இருக்கும்.”
    Next Story
    ×