என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் பெயரிடப்படாத படம், பாலிவுட்டில் அத்ரங்கி ரே ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன், தனுஷ்

    இப்படங்களை தொடர்ந்து கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுடன் தனுஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வரும் தனுஷ், காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாகவே பிரதீப் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கதை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கோமாளி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
    ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

    ஒரு கட்டிடத்தை கட்ட செல்லும் கட்டிடக்கலை நிபுணர்கள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். 10 வருடங்களாக அந்த கட்டிடத்தை யாராலும் கட்டி முடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவருக்காக துப்பறிந்து அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிப்பது, படத்தின் கதை. 

    படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், ஓபூமிகா’வும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.
    மனோரமாவின் பயோபிக்கில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில், 2 சிறுவர்களுக்கு தாய் வேடத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர், ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தர்மதுரை, வடசென்னை, செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை என அவர் நடித்த படங்களும், கதாபாத்திரங்களும் பேசப்பட்டன.

    அடுத்து அவர் நடித்து வெளிவர இருக்கும் படம், ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    இதில் நடித்தது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். இயக்குனர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான இயக்குனர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், பூமிகாவும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. 

    இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம். வரலாற்று படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, மனோரமாவின் பயோபிக் படத்தில் நடித்து, தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது, என் நீண்ட கால ஆசை. நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
    ‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.
    தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அறிமுக படத்திலேயே வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதனால் பட வாய்ப்புகளும் குவிந்தன. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா தயாரிக்கும் 2 படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், வாணி போஜன் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். 

    தாழ் திறவா படத்தின் போஸ்டர்

    பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    பிரபல பாலிவுட் நடிகை நடிக்கும் தமிழ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

    அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் மற்றும் நாம் சபானா, பட்லா, மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி ஹீரோயினாக உயர்ந்தின. தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    டாப்சி

    இந்தப் படத்துக்குப் பிறகு பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். 

    டாப்சி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 1-ந் தேதி ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்துள்ளார்.
    நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. 

    அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வழங்க ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கிறார்.

    போனி கபூரின் டுவிட்டர் பதிவு

    இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
    விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்... அதுதான் உண்மை என்று லாபம் படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். 

    இந்த படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 


    சில தினங்களுக்கு முன்பு லாபம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. தொழிற்சாலை இயக்கினால் தான் விவசாயம், மக்கள் வாழ முடியும் என்று நம்ப வச்சிட்டாங்க... விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும் அதுதான் உண்மை என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று உள்ளது. இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவரே வீடியோவில் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

    ஆனால், கடந்த 13-ம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

    எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து தினமும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து  மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் கொரோனா பாதித்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
    ஆரவ், அஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜ பீமா’ படத்தின் முன்னோட்டம்.
    ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராஜ பீமா’. இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்க இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாசர், கே.எஸ்.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சைமன் கே கிங் இசையமைக்க, சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது 95 பின்னணி வேலைகளையும் படக்குழுவினர் முடித்துள்ளனர். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிட்டு, தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
    இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியையும் சாடினார்.

    தற்போது சுஷாந்த் சிங்கின் இன்னொரு காதல் மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் தனக்கிருந்த காதல் போன்றவற்றை பற்றி பேசி இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், “சுஷாந்த் சிங். சாரா அலிகான் காதல் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வந்துள்ளது. எதற்காக இந்த நட்சத்திர குழந்தைகள் வெளியில் இருந்து வரும் நடிகர்களை ஆசையில் விழ வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள்.

     அதன்பிறகு சுஷாந்த் சிங் எதற்காக கழுகிடம் சிக்கி கொண்டார் என்பதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும் சுஷாந்த் சிங்கை சாரா அலிகான் உண்மையாக காதலித்து இருப்பார் என்று நம்புகிறேன். சாராவுக்கு அழுத்தம் ஏற்பட்டதால் விலகி இருக்கலாம்.

    கங்கனா ரனாவத் ரித்திக் ரோஷன்

     நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று எதற்காக ஒரு எதிரிபோல மாறினார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் கங்கனாவை கண்டித்துள்ளனர்.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    வாத்தி கம்மிங்

    இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் துணை நின்றிருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள 25-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.



    இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார். அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×