என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கருப்பா, உயரமா இருப்பதாக சொல்லி பாலிவுட் திரையுலகில் தன்னை நிராகரித்ததாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    சமீரா ரெட்டி


    இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி, பாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:  “நீங்க ரொம்ப கருப்பாக, உயரமாக இருக்கிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கூறினார்கள். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திற்கு நீங்கள் செட்டாகமாட்டீர்கள் என்றார்கள். அதற்காக நான் வருந்தவில்லை. அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு எனக்கு என்மீதான அன்பு தான் கூடியது. இது பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகையாக இருந்தால் இப்படித் தான் இருக்கனும்னு எதிர்பார்க்கிறார்கள்”. இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு தெரிவித்துள்ளார்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    படப்பிடிப்புகள் இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார்.

    தற்போது படப்பிடிப்பு இல்லாததால் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் தினமும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை சொல்லி வருகிறார். 

    சாக்ஷி அகர்வால்

     தற்போது புதிய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அதிக லைக்ஸ்களை குவித்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பிறந்தநாளை செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

    இந்நிலையில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் அன்பிற்கினிய ரசிகர்களே, இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை சிறப்படையச் செய்கிறது.

    ஜெயம்ரவியின் அறிக்கை

    ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப்போராடி வெற்றிபெறுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்று தற்போது சந்தானம் நடித்திருக்கும் படத்தில் இடம் பிடித்திருக்கிறது.
    சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டிக்கிலோனா. இப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான சூப்பர் ஹிட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

     சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள். இதற்கான உரிமையை இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன்.

    சந்தானம்

    கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார்.
    யமுனா, மெட்ரோ படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் இன்று கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
    யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் சத்யா. இவரின் திருமணம் இன்று  (24-08-2020, திங்கள் கிழமை) காலை புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருகோவிலில் இனிதே நடைபெற்றது.

    கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

    விரைவில் வரவேற்புரை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சத்யா நடித்து முடித்த ஒரு திரைப்படமும் கொரோனா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது.
    பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாழ் திறவா’ படத்தின் முன்னோட்டம்.
    பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தாழ் திறவா’. அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளனர்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
    நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், பிரபல இயக்குனருமான ஏ.பி.ராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.
    மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார். 

    இவரது தந்தை ஆண்டனி பாஸ்கர் ராஜ் மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக விளங்கினார். மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ள அவர், தமிழில் துள்ளி ஓடும் புள்ளி மான் மற்றும் கை நிறைய காசு ஆகிய இரண்டு படங்களை இயக்கி உள்ளார். 

    சரண்யா பொன்வண்ணன், ஏ.பி.ராஜ்

    95 வயது ஆகும் ஆண்டனி பாஸ்கர் ராஜ் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது மகள் சரண்யா பொன்வண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என அவரது மகன் சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.

    ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர். 

    இந்நிலையில், இன்று காலை எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் டுவீட் செய்திருந்தார்.

    இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன். ஆனால், இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம். 

    அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும். ஆகவே, தவறான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
    விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, புதிய தொழில் தொடங்கி உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

    இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை. 

    ஹன்சிகா

    இந்நிலையில்,  நடிகை ஹன்சிகா 'தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்' என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம். 

    அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த கொரானோ லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ‘தளபதி 65’ குறித்த மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக தனது 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாசுடன் இணைய உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படம் குறித்து சமூக வலைதள பேட்டியில் பேசியுள்ளார். அதில், "நீங்க மீண்டும் விஜய் சாருடன் படம் பண்றது உண்மையா?, அது துப்பாக்கி 2ம் பாகமா?" என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்ததாவது: "எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், ஓப்பனாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது என்னோட கருத்து. ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது போல் தான் இருக்கும். அதைத் தாண்டி ஒன்றை யோசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கும்.

    விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்

    சமூக வலைதளங்களில், துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தலைப்பு கொடுக்கவில்லை என்று வருவது எல்லாம் பொய். அதில் எதுவும் உண்மையில்லை. இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் இல்லை. அது எந்த மாதிரியான படம் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வந்தால் தான் சரியாக இருக்கும்" என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.
    புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.

    ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர். 

    இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 
    ×