என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடிக்கும் கே.ஜி.எப் 2 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். 

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2-ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. 

    கேஜிஎப் 2 படப்பிடிப்பு தளத்தில் பிரகாஷ் ராஜ்

    தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும் நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். கே.ஜி.எப். 2 படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 
    சீரியல் நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பின்னர் சீரியலில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவரை மேலும் பிரபலமாக்கியது. இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சித்ரா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

    சித்ரா

    ரசிகர்களோ இதுவும் போட்டோஷூட் புகைப்படம் தான் என நினைத்திருக்க, அதுவோ அவரது நிச்சயதார்த்தத்திற்கு தயாரான புகைப்படமாம். பின்னர் மணமக்கள் இருவரும் மேடையில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. சித்ராவுக்கும், ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சித்ராவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    ஹீரோ, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் டொவினோ தாமஸ் தற்போது சூப்பர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
    வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில்,  பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது.

    பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    மின்னல் முரளி

      மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார். பாசில் ஜோசப் இயக்கும்  இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

    இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா  தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.  “மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும்  இதுவரை கேமரா காணாத கேரள  லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. 
    தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமான சர்வானந்த், தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். இந்த படத்தில் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றார். சேரன் இயக்கிய ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் கதாநாயகனாக நடித்து இருந்தார். காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

    தமிழில் திரிஷா நடித்து வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சர்வானந்த்

    சர்வானந்துக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயது தோழியை காதலித்து வந்ததாகவும் அந்த பெண் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். திருமண தேதி விரைவில் வெளியாக உள்ளது.

    சர்வானந்த் தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடிக்கிறார்.
    90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

     பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.
    கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.

    கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்குகிறார். கொரோனா அச்சுறுத்தலா இவர் இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள்.

    ரைசா

     ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. 
    சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இயக்குநர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரானா வைரஸ் தொற்று எதிரொலியால் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பல படங்கள் வெளியீடு செய்ய முடியாமல் முடங்கியுள்ளன.

    இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தயாராகி நான்கு மாதங்களாக திரையிடப்பட முடியாததால், வரும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை மூலமாக சூர்யா தெரிவித்திருந்தார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், திரைப்படத்துறையை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இயக்குநர் ஹரி சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்: ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஒடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்.

    இயக்குனர் ஹரி அறிக்கை

    தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
    வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும், இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் இருந்தது. இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    டுவிட்டர் பதிவு

    இதற்கு மறுப்பு தெரிவித்து அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்படுள்ளதாவது: எங்களது  ‘பார்ட்டி’ திரைப்படம் திரையரங்குகளுக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சில ஊடங்களில் வந்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். அது உண்மையில்லை. வெறும் வதந்தி. அப்படி எந்த திட்டமும் எங்களிடம் இல்லை”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம்.
    நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். 

    இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    அவர் கூறியிருப்பதாவது: “இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.

    தற்போது எங்கள் கவனம் முழுவதும் வேலையில தான் இருக்கு. லவ் எப்ப போர் அடிக்குதுனு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பா தெரியப்படுத்துவோம்”. என அவர் தெரிவித்துள்ளார்.
    மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாக கூறப்படுகிறது.
    விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். 

    சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 

    விஜய்

    சூரரைப் போற்று படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படமும் அவ்வாறே வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாகவும் கூறப்படுகிறது. 

    தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்கும் திட்டத்தில் உள்ளார்கள். மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடி வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் பார்வை ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளன. புதிய படங்களை திரையரங்குகளுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ்வின் லாக்கப் போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது .

    ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அதே தொகைக்கு ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கு விலைபோனதாக சொல்லப்படுவதால், மொத்தம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

    சூர்யா

    திரையரங்குகள் திறந்தாலும் உள்ளே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவில் ஒரு இருக்கையை காலியாக வைப்பது ஒரு வரிசைக்கு பின்னால் உள்ள வரிசையில் ஆட்களை நிரப்பாமல் விடுவது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். 

    இதனால் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் திரையரங்கில் 400-க்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்க முடியும் என்றும் பொதுமக்களும் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனாலேயே பெரிய படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    ×