என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிற்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறதாம்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா, தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:  “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட் கோலியும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    அட்லீ இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

    ஸ்ரீராம், விஜய்

    இப்படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸ்ஸில் எடுக்கப்பட்டாலும், ஒரு சில காட்சிகளில் விஜய்யின் பிகில் கேரக்டருக்கு டூப் போட்டு தான் எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இளம் நடிகர் ஸ்ரீராம் என்பவர் தான் விஜய்க்கு டூப்பாக நடித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பிகில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. 

    இந்த நிலையில் தற்போது தர்ஷன் ஒரு மியூசிக் ஆல்பத்தின் நடித்துள்ளார். ‘தாய்க்கு பின் தாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் தர்ஷனுடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது. 

    தர்ஷன்

    இந்த ஆல்பம் சித்ஸ்ரீராம் குரலில் தரண் குமார் இசையில் உருவாகி இருக்கிறது. இந்த ஆல்பத்தில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளது என்று தர்ஷன் கூறியிருக்கிறார். 




    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பிரபல நடிகர் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை மூலமாகவும் மற்றும் அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாக கூறியுள்ளனர்.

    இந்நிலையில், பிரபல நடிகரான அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிமேல் ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரைப் போல் யாரும் சாதிக்க முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே யாரும் சாதிக்க முடியாது. அவர் தான் நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிரார்த்தனையை விட எதுவும் சிறந்தது கிடையாது. தற்போது இவருக்காக கோடிக்கணக்கான பேர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.



    கூடிய சீக்கிரம் உடல் நலம் ஆரோக்கியத்துடன் அவர் வருவார் என்று நானும் வேண்டிக்கொள்கிறேன். உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் தெரியும் நீங்கள் ஒரு போராளி என்று. உங்களுடைய புதிய பாட்டை கேட்க ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தற்போது ஹாலிவுட் நடிகர் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

    பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாத செல்வராகவன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தத்துவங்கள், கேள்வி பதில்களை எழுப்பி வரும் செல்வராகவன் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.



    பைரட்ஸ் ஆப் கரிபியன் படத்தின் ஹீரோவான ஜானி டேப் தோற்றத்திற்கு செல்வராகவன் மாறி இருக்கிறார். ஆப் மூலம் முகத்தை மாற்றி வீடியோ பதிவு செய்திருக்கிறார். என் முகத்தை தனது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் மாற்றி இருப்பதாக கூறியிருக்கிறார்.
    கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனையும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக்குள் உடல் நிலை முழுவதுமாக குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வீடியோவில் எஸ்.பி.பி.சரண் கூறியிருக்கிறார்.


    சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று சூர்யாவிற்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப்போற்று, சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    தற்போது இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமீப நாட்களில் ஓடிடிக்கு எதிரானப் பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விசயமாகும். இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யாவும் குறிப்பிடத்தகுந்தவர்.

    சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடி-யில் வரக்கூடாது, திரையில் தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டுவர முன் வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும், தயாரிப்புகளிலும் தொழில்சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்கக் கூடாது.

    என் நண்பர் சிவக்குமாரின் வளர்ப்பும், வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன். சூர்யா, கார்த்தி இருவரும் என்வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள். அவர்களின் மனித நேயப்பண்பும், நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன். இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்தபொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள். மனம்வலிக்கிறது.

    சூர்யா

    இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே வாருங்கள் பேசித்தீர்ப்போம். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

    கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தைக் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கின்ற நல்லெண்ணதில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும்.

    சூர்யா மிரட்டியுள்ள சூரரைப்போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் முத்திரைபதிக்கும் தமிழனைப் போற்றும்’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா வீட்டில் நுழைந்திருக்கிறது.
    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறையவில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். அதேபோல் தமிழில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த சிலநாட்களாகவே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 


    இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
    நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புவதாக நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் விஜய், சூர்யா குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், அவரது உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

    மீரா மிதுனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், அண்மையில் கைலாச நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டி, மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அனைவரும் அவரை கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாக பேசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
    நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் முன்னோட்டம்.
    கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. அரவிந்த் சாமி நடிக்க  ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.  இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 

    இப்படம் தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் மனோபாலா தயாரித்துள்ளார். 
    கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த நண்பணுக்கு நடிகர் விஜய் தேடிச்சென்று உணவளித்தாராம்.
    தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் நடிகர் சஞ்சீவும் ஒருவர். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து ருசீகர தகவல் ஒன்றை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனிமையில் இருந்தேன். 

    சஞ்சீவ், விஜய்

    அப்போது விஜய்யிடமும் இதுபற்றி சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் எனக்காக மதிய உணவு கொண்டு வந்தார் விஜய். எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விஜய்யை நேரில் சென்று பார்க்கவில்லை. எனது வீட்டு செக்யூரிட்டியிடம் அவர் உணவை கொடுத்துவிட்டு சென்றார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
    நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது கணவர் குறித்து நடிகை வனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார். நிச்சயம் அதிசயம் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதல் வலிமையானது. எங்களை கைவிடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.

    திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம்.

    பீட்டர் பால், வனிதா

    பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள் வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டுள்ளேன். வாழ்க்கை மிகவும் குறுகியது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா.
    ×