என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜனவரியில் குழந்தை பிறக்கப்போகிறது.... விராட்-அனுஷ்கா தம்பதி பூரிப்பு
Byமாலை மலர்27 Aug 2020 6:44 AM GMT (Updated: 27 Aug 2020 6:44 AM GMT)
நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவிற்கு விரைவில் குழந்தை பிறக்கப்போகிறதாம்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா சர்மா, தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட் கோலியும் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×