என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல நடிகை சிகரெட் கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.
    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல்நாள் சிறையில் கொடுத்த உணவை அமைதியாக வாங்கி சாப்பிட்ட சஞ்சனா, அதன்பின்னர் தனக்கு தினமும் சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என்று கேட்டு வருவதாக தெரிகிறது. 

    கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு சஞ்சனா அடம்பிடித்து உள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒருநாள் தான் சிறையில் அசைவ உணவு வழங்குவோம், இதனால் தற்போது கோழி இறைச்சி வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் சமாதானம் செய்து உள்ளனர். இதையடுத்து தனக்கு சிகரெட் வேண்டும் என்றும் சஞ்சனா கேட்டு உள்ளார். அதற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

    சஞ்சனா கல்ராணி

    இந்த நிலையில் தனக்கு சிகரெட், கோழி இறைச்சி வேண்டும் என்று நேற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் சஞ்சனா அடம்பிடித்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டு உள்ளார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் இதற்கு மறுத்ததோடு, அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர்.
    கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயலால் சிலாகித்துப்போன நடிகை திரிஷா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


    கொரோனா ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வீடியோ பதிவிடுவது என ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

    அந்த வகையில் ரசிகர் ஒருவர் திரிஷாவின் முகத்தை ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அவர் கண்ணைக் கட்டிக்கொண்டு வரைந்துள்ளார். ரசிகரின் இந்த திறமையை பார்த்து சிலாகித்துப்போன திரிஷா அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார். 

    இதையடுத்து சிம்பு, அருண்விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மிஷ்கின் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

    பிசாசு 2 பட போஸ்டர்

    மிஷ்கினும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராக்போர்ட் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு நடிகை லட்சுமி மேனன் பதில் அளித்துள்ளார்.
    பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக 'கும்கி' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து 'சுந்தர பாண்டியன்', 'பாண்டிய நாடு', 'கொம்பன்' என பல வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அவரிடம், 'நீங்கள் சீக்கிரம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை வாழுங்கள். தயவுசெய்து சினிமாவை விட்டு விலகுங்கள். நீங்கள் ஏஞ்சல்'' என்று குறிப்பி்ட்டுள்ளார்.

    அதற்கு லட்சுமி மேனன் அளித்துள்ள பதிலில், ''என் நலம் விரும்பியின் வேண்டுகோளை பாருங்கள். என்னை போன்ற ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளவேண்டுமாம். பரிதாபமானநிலை'' என்று விமர்சித்துள்ளார்.
    எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைந்து வருகிறார் என அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

    வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்.

    அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார்.

    மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார்.

    அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது.

    நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இம்முறை சிறிய மாற்றம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் 16 போட்டியாளர்கள் கொண்டதாகவும், 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை போட்டியாளர்கள் குறைக்கப்படும் என்றும் பிக்பாஸ் நடக்கும் நாட்களும் குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    பிக் பாஸ்

    அதாவது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறும் 12 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இருப்பினும் போட்டி தொடங்கும் முதல் நாளில் தான் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர், எத்தனை நாட்கள் இந்த போட்டி நடைபெறும் என்பது குறித்த தகவல் உறுதியான தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை மிஸ் செய்வதாக உருக்கமான பதிவு செய்திருக்கிறார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது. இவருடைய தந்தை சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

    அதில், "அப்பா நானும் ஜித்துவும் இன்று எங்கள் வாழ்க்கையில், நாங்கள் செய்வது போல் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. உங்கள் பிறந்தநாள் அன்று இரண்டு விருப்பங்கள் எனக்கு உண்டு. முதலில் நீங்கள் இப்போது எந்த வடிவத்தில் இருந்தாலும், நான், அம்மா மற்றும் ஜித்து நீங்கள் சிறந்த மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி மற்றும் அனைத்து விருப்பங்கள் பெற்று வாழ விரும்புகிறேன். 

    அமலாபால்

    இந்த உலகத்தில் நீங்கள் வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் உங்களை அடையாளம் காண எங்களுக்கு வழிகாட்டவேண்டும் என்பது இரண்டாவது விருப்பம். ஏனென்றால் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். லிட்டில் அமலா உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா..!" என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.
    கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் முழுமையடையாமல் இருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன், சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

    விக்ரம்

    இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. தாமரை எழுதியுள்ள ஒரு மனம் என்ற அந்த பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ளனர். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் ரீமேக்கில் முன்னணி நடிகையான தமன்னா சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'அந்தாதுன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியானது. இந்த படத்தில் நடிகை தபு கணவரை விட்டு வேறொருவருடன் தகாத உறவு வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதில், நிதின் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கிறார்களாம்.

    தமன்னா

    இந்த படத்தை வசனம் எழுதி மெர்லபகா காந்தி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் துவங்கப்படவிருக்கிறது. மஹட்டி ஸ்வர சாகர் இந்த படத்துக்கு இசையமைக்க, ஹரி கே வேதாந்த் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி, எங்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் விஜய்யின் குஷி, பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் சத்யுக் தங்கம் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பணியாற்றினர். இந்த நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்க அட்டைகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர் ஒரு கிலோ தங்கம் வாங்கியதாகவும் ஆனால் ஷில்பா ஷெட்டி அதில் மோசடி செய்து விட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு ஷில்பா ஷெட்டி தற்போது பதில் அளித்து கூறியதாவது:-

    ஷில்பா ஷெட்டி

    “சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவருக்கு ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் கொடுத்து விட்டோம். அதற்கான சட்டப்பூர்வ கட்டணத்தை அவர் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். அவர் எங்களுக்கு கட்ட வேண்டிய பணம் பற்றிய விவரங்களை கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். அதோடு செக் மோசடி புகாரும் அவர் மீது அளித்துள்ளோம். இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய கோர்ட்டு ஒருவரை நியமித்து உள்ளது” என்றார்.
    ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை, நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது என்று கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு இப்போது போதை பொருள் பக்கம் திரும்பி உள்ளது. முன்னணி நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினால் பெரிய நடிகர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்றும் கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இதற்கு நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கங்கனா ரணாவத்தை கண்டித்து பலரும் பேசி வருகிறார்கள்.

    கமல்ஹாசனின் இந்தியன் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கூறும்போது, “கங்கனா ரணாவத் இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பை மகளான என்னால் இதனை பொறுக்க முடியாது. கங்கனா ரணாவத் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாசல பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் போதை பொருள் உற்பத்தி ஆகிறது” என்றார். இதற்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார். 

    கங்கனா - ஊர்மிளா

    அவர் கூறும்போது, “ஊர்மிளா அவதூறாக பேசி உள்ளார். ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை. நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது. அதை உறுதியாக சொல்ல முடியும். ஆபாசத்துக்கு பெயர் போனவர் ஊர்மிளா. தேர்தலில் பா.ஜனதா கட்சியில் சீட் வாங்குவதற்கு நான் முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவருக்கே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும்போது எனக்கு கிடைக்காதா?”

    இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.
    பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாக இருக்கிறது.
    ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    முந்தானை முடிச்சு

    பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இத்திரைப்படத்தை 2021-ம் ஆண்டு திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
    ×