என் மலர்
சினிமா செய்திகள்
தளபதி 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில், அதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதனிடையே விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விஜய் படத்தை இயக்கப்போகும் நெல்சனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‘ரொம்ப சந்தோசம் நெல்சன் அண்ணா. மிகப்பெரிய கனவுடன் இருக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் பிரபல மலையாள நடிகை ஹீரோயினாக நடித்துள்ளாராம்.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.
அதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இதன்மூலம் வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இவர்கள் இணைந்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த குறும்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரயாகா மார்டின் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பிசாசு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘செல்லம்மா’ என்கிற பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இந்தப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. யூடியூபிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Whooo.... 1 million likes for #Chellamma 🤩 Thank you peeps 😇🙏🏼
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) December 11, 2020
ICYMI: https://t.co/7n1CkHnt92
✍️ @Siva_Kartikeyan
🎶 @anirudhofficial
🎤 #Anirudh, @jonitamusic#DOCTOR | #1MLikesForChellamma | @KalaiArasu_ | @Nelsondilpkumar | @priyankaamohan | @kjr_studios | @SonyMusicSouthpic.twitter.com/5jUEqm0HFl
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு சித்ராவின் தாய் விஜயா தொடர்ந்து கூறி வந்ததால் சித்ராவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரிடம் சண்டையிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றும் அவரை விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சித்ராவின் தாயாரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
சில்க் சுமிதா பயோபிக்கில் நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர். அதில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதை தமிழிலும் படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சில்க் சுமிதா போன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ், புதிய தொடக்கம், கோலிவுட் என குறிப்பிட்டிருந்தார். இதனால் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அனுசுயா, ‘நான் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் சுமிதாவாக நடிக்கவில்லை’ என கூறியுள்ளார்.
கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா மீது அசோக்நகர் காவல் நிலையத்தில் ரூ.10 லட்சம் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் மேலாளராக வேலை பார்த்த திலீப் குமார் என்பவர், கிருஷ்ணா மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நடிகர் கிருஷ்ணா தனது சொந்த தேவைக்காக என்னிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பித்தராமல் என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எனக்கு தரவேண்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தரவேண்டும், என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அசோக்நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடி இருந்ததால் புதிய படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்பட்டன. சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம், அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன் நடித்த அந்தகாரம், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப், யோகிபாபுவின் காக்டெயில் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் கூட்டம் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படத்தில் சாயிஷா, சாக்ஷி அகர்வால், கருணாகரன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு பொம்மையும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. சக்தி சவுந்தரராஜன் இயக்கி உள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து வரும் மாநாடு படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, தற்போது விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் பாரதிராஜா, மாநாடு படத்திற்கு தேதி ஒதுக்க முடியாததன் காரணமாக, அப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.
நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகுமார், அன்றைய முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.
அப்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, 2 படங்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்றார். 2 படத்திலுமே அவருக்கு விஜயகுமார் ஜோடியாக நடித்தார். துரதிருஷ்டவசமாக அந்தப் படங்கள் திரையை எட்டிப் பார்க்காமலே போய்விட்டன.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"நான் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞராக மேடம் ஜெயலலிதா இருந்தார். அப்போது அவர் சில காலம் நடிப்புலகை விட்டு ஒதுங்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் மகரிஷியின் `நதியைத் தேடி வந்த கடல்' நாவலை படமாக்க முடிவு செய்தனர். இதில் சரத்பாபு நாயகன். ஜெயலலிதா நாயகி.
இதே நேரத்தில் டைரக்டர் பாலகிருஷ்ணன் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை ஒப்பந்தம் செய்தார். படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பார் என்றார்கள். இதற்கு முன் அவருடன் நான் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை.
இதே நேரத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் "மணிப்பூர் மாமியார்'' என்றொரு படம் இயக்க வந்தார். இதிலும் நானும் மேடம் ஜெயலலிதாவும்தான் ஜோடி.
மேடத்தை நான் செட்டில் பார்க்கும்போதே, அவரது பண்பையும், அறிவாற்றலையும் புரிந்து கொண்டேன்.
அவருக்கான காட்சி முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள முருகாலயா ஸ்டூடியோவில் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் எதையும் அளந்து பேசும் அவரது பண்பும், விஷயங்களை அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றலும் என்னை பெரிதும் வியக்க வைத்தன.
அது 1978-ம் வருடம். அந்த நாட்களில் சிங்கப்பூர் போவதென்பது ரொம்பவும் அபூர்வ விஷயம். போகிறோம் என்று தெரிந்தாலே நட்பு வட்டமும், உறவினர்களும் `எனக்கு அது வாங்கி வாருங்கள், இது வாங்கி வாருங்கள்' என்று பெரிய லிஸ்ட்டை கொடுத்து விடுவார்கள்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் சிங்கப்பூருக்கு போய்வர இருந்தேன். படப்பிடிப்பில் இருந்த பலரும் அவரவருக்கு தேவையான லிஸ்ட்டை கொடுத்தார்கள். மேடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. நானாக அவரிடம் போய், "மேடம்! சிங்கப்பூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அவரோ, "கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்'' என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.
என்றாலும் நான் விடவில்லை. "எல்லாரும் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பியதை வாங்கி வருவது எனக்கு சிரமமான காரியம் அல்ல. உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்கள் மேடம்'' என்றேன்.
நான் இப்படி வேண்டி விரும்பி கேட்ட பிறகே அவர், "சிங்கப்பூரில் `கிட்காட்' சாக்லெட் கிடைத்தால் வாங்கி வாருங்கள்'' என்றார்.
சிங்கப்பூரில் போன வேலையை முடித்து விட்டு ஷாப்பிங் செய்தால், மேடம் கேட்ட `கிட்காட்' சாக்லெட் மட்டும் `கிடைப்பேனா' என்கிற மாதிரி என்னை அலையவைத்தது. கடைசியில் அலைந்து திரிந்து தேடியதில், ஒரு ஷாப்பிங் மார்க்கெட்டில் அந்த சாக்லெட் கிடைத்தே விட்டது.
இருந்ததில் பெரிய பாக்ஸாக வாங்கிக் கொண்டு விமானத்தில் வந்தேன். சென்னை வந்ததும் மேடத்தின் வீட்டுக்கு அந்த சாக்லெட் பாக்சை கொடுத்தனுப்பினேன். கிடைத்த சில நிமிடங்களில் டெலிபோனில் எனக்கு நன்றி சொன்னார்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை 10 ஆயிரம் அடியிலும், மணிப்பூர் மாமியார் 9 ஆயிரம் அடியுடனும் நின்று போயின. இது, இன்றளவும் எனக்கு வருத்தம் தரும் விஷயம்.
இந்த சமயத்தில்தான், எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா மேடம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.''
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமுக்கு இன்று முக்கியமான நாள் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சேது. இந்த படத்தை இயக்குனர் பாலா திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார். இளையராஜா படத்திற்கு இசை அமைத்திருந்தார். டிசம்பர் 10ஆம் தேதியான இன்று சேது படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என சேது திரைப்படம் விருதுகளை அள்ளியது. அது மட்டுமன்றி பாலா & விக்ரம் இருவருக்கும் இந்த படத்திற்காக சில விருதுகள் வழங்கப்பட்டன.

சேது படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக #21YearsOfEpicSethu என்னும் #டேக் போட்டு விக்ரமின் நடிப்பை பற்றியும், அர்ப்பணிப்பை பற்றியும் ரசிகர்கள் ட்வீட் போட்டு தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் புதிய அப்டேட்டை ரசிகர்களுக்காக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.

அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு ...
படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். என்று சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து வரும் சிம்ரன், தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

இந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்ரன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த அவர் திரைப்படங்கள் பெருவெற்றி பெற்றவை என்று குறிப்பிடத்தக்கது.