என் மலர்
சினிமா

சிவகார்த்திகேயன், விஜய், நெல்சன்
‘தளபதி 65’ பற்றி சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில், அதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதனிடையே விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விஜய் படத்தை இயக்கப்போகும் நெல்சனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‘ரொம்ப சந்தோசம் நெல்சன் அண்ணா. மிகப்பெரிய கனவுடன் இருக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.
Next Story






