என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படக்குழுவினர் வாழ்த்துக்கூறி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.
    விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.

    மார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ''டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்'' என்று முடிவெடுத்தார் ரஜினி. 

    சிவா

    இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி அவர்களுக்கு அண்ணாத்த படக்குழுவினரின் சார்பாக வாழ்த்துக் கூறி ரசிகர்களின் ஆதரவோடு டிசம்பர் 15ஆம் தேதி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
    எனது விவசாய சகோதரர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அரசு எதையாவது வேகமாக செய்ய வேண்டும் என்று நடிகர் தர்மேந்திரா கூறியுள்ளார்.
    மும்பை :

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த வாரம் பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் ஒருவர் அதை ஸ்கிரின்ஷாட் எடுத்து, இதை ஏன் நடிகர் நீக்க வேண்டும் என ஆச்சரியம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்த நடிகர் தர்மேந்திரா, “இதுபோன்ற கருத்துகள் வந்து என்னை சோகப்படுத்தும் என்பதால் தான் அந்த பதிவை நீக்கி இருந்தேன். உங்கள் மன திருப்திக்கு நீங்கள் என்னை வசைபாடலாம். நீங்கள் மகிழ்ச்சி அடைவது எனக்கு சந்தோஷம் தான். ஆம், நான் எனது விவசாய சகோதரர்களுக்காக வருந்துகிறேன்“ என கூறியிருந்தார். இந்தநிலையில் நடிகர் தர்மேந்திரா மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில் அவர், “எனது விவசாய சகோதரர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அரசு எதையாவது வேகமாக செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.
    பட அதிபர் ஜீவி தயாரித்த "கை கொடுக்கும் கை'' படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை விஜயகுமார் கவனித்துக் கொண்டார். அப்போது படத்தின் "கிளைமாக்ஸ்'' குறித்து, அவருக்கும் படத்தின் டைரக்டர் மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது.

    விஜயகுமார் ஏற்கனவே சிவாஜியை வைத்து "நெஞ்சங்கள்'' என்ற படத்தை தயாரித்தார். வசூல் ரீதியாக அந்தப்படம் வெற்றி பெறாததால், தொடர்ந்து படம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டார்.

    ஆனால், பட அதிபர் ஜீவி கேட்டுக்கொண்டதால், "தயாரிப்பு மேற்பார்வை'' என்ற பொறுப்பை ஏற்க நேரிட்டது.

    இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "சொந்தப்படம் எடுத்த அனுபவம், எனக்கு நிச்சயம் புதிய அனுபவம். இனி தயாரிப்பே வேண்டாம் என்கிற அளவுக்கு இந்த தயாரிப்பு அனுபவம் என்னை பாதித்திருந்தது.

    தொடர்ந்து 4 வருடம் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் ஜீவி என்னை அழைத்துப்பேசினார். "ஒரு கன்னடப்படம் வந்திருக்கிறது. வித்தியாசமான கதையமைப்புடன் நன்றாகவே இருக்கிறது. தமிழில் ரஜினியை வைத்து அதை தயாரிக்க இருக்கிறேன்'' என்றார்.

    ரஜினி அப்போது சூப்பர் ஸ்டார் ஆகயிருந்த நேரம். அதோடு வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவந்தார். எனவே, ரஜினி அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஜீவியிடம் என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

    "உங்களுக்கு இந்தப் படத்தில் வேலை இருக்கிறது. தயாரிப்பாளராக நான் இருந்தாலும், நீங்கள்தான் முன்னிலை தயாரிப்பு மேற்பார்வை செய்யவேண்டும்'' என்றார், ஜீவி.

    அவர் அப்படிச் சொன்ன பிறகு, எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.

    படத்தில் ரஜினி ஜோடியாக பார்வையற்ற பெண் கேரக்டரில் ரேவதி நடித்தார். மகேந்திரன் டைரக்ட் செய்தார்.

    திட்டமிட்டபடி, படம் வளர்ந்து வந்தது. கிளைமாக்ஸ் காட்சியின்போதுதான் எனக்கும் டைரக்டர் மகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பார்வையற்ற பெண்ணுக்கு ரஜினி வாழ்வு கொடுக்கிறார். அந்தப் பெண் ரஜினியை மணந்து கொண்ட நேரத்தில் அந்த ஊர் பண்ணையாரால் அவள் கற்பு பறிபோகிறது. இதை தெரிந்து கொண்ட ரஜினி பெருந்தன்மையுடன் "உன் மீது எந்த தவறும் இல்லை. நடந்ததை ஒரு விபத்தாக கருதி மறப்போம்'' என்று சொல்லி மனைவி ரேவதியுடன் வேறு ஊருக்கு புறப்பட்டுப் போகிற மாதிரி படம் முடியும்.

    பொதுவாகவே ரஜினி மாதிரி `இமேஜ் வேல்ï' உள்ள நடிகர்கள் படங்களில், ஜோடியாக வருபவர்களுக்கு எந்த மாதிரியான துன்பம் என்றாலும் உயிரைப் பணயம் வைத்தாவது ஹீரோ காப்பாற்றி விடுவார். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். "ரஜினியின் மனைவியாக நடிக்கும் ரேவதியின் கற்பு பறிபோகிற மாதிரியான காட்சியை ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே கிளைமாக்சை மாற்றுங்கள்'' என்று மகேந்திரனிடம் சொன்னேன்.

    அவரோ, "ஒரிஜினல் கதையில் இப்படித்தான் இருக்கிறது. நமது ரசிகர்கள் புதுமை விரும்பிகள். அதனால் கிளைமாக்சை மாற்ற அவசியமில்லை'' என்றார்.

    அப்படியும் நான் விடவில்லை. முதல் இரவில் அந்த பார்வையில்லாத பெண் கணவனிடம் என்ன சொல்கிறாள்? "நான் உங்களுக்கு முன்னாடியே பூவும் பொட்டுமா போயிடணும்னு ஆசைப்படுகிறேன்'' என்கிறாள். பதறிப்போகும் கணவனை கையமர்த்தி, "அப்படி நான் செத்துப்போகும்போது நீங்கதான் என்னை குளிப்பாட்டி புடவை கட்டி விடணும். அதாவது ஒரு பெண் கூட என் உடம்பை பார்க்கக் கூடாது. கணவனா நீங்களே அந்தக் கடமையையும் செய்துடணும்'' என்கிறார்.

    இப்படி இன்னொரு பெண்கூட தனது உடம்பை பார்த்து விடக்கூடாது என்று சொல்லும் அவள், வேறொரு ஆண் மகனால் சிதைக்கப்படுவது அந்த கேரக்டரின் தன்மையையே சின்னா பின்னப்படுத்துவது போல் ஆகிவிடாதா? எனவே கிளைமாக்சை ரஜினி கேரக்டரின் தன்மைக்கு பாதிப்பு நேராமல் நாயகியின் விருப்பமும் பூர்த்தியாகிற மாதிரி மாற்றிப் பாருங்கள்'' என்றேன்.

    இதற்கிடையே நான் கிளைமாக்சை மாற்றச் சொன்ன விஷயம், ரஜினிக்கும் தெரியவந்தது. அதுபற்றி என்னிடம் பேசிய ரஜினி, "விஜய்! நீங்க சொன்ன கிளைமாக்சையும் எடுத்துவிடுவோம்'' என்றார், ஆர்வமாக.

    ஆனால், அதற்குள் ஏற்கனவே எடுத்த கிளைமாக்சுடனேயே படம் தயாராகி விட்டது. அந்த முடிவுடன்தான் படம் ரிலீஸ் ஆகியது.

    ரஜினியின் ரசிகர்களால் படத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

    இதற்குப் பிறகு படத்தயாரிப்பு பக்கம் என் பார்வை போகவில்லை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடகா ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.
    பெங்களூரு:

    கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் லோயம் பெப்பர் சம்பா, வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, பிரதிக் ஷெட்டி உள்பட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இந்த விவகாரத்தில் கைதான நடிகைகள் 2 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  போதைப்பொருள் விசாரணை வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். சஞ்சனா கல்ராணி  கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன்  மனு தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவில் தனக்கு உடனடியாக  மருத்துவ அறுவை சிகிச்சை தேவை என்றும்  ஜாமீன் கிடைக்காவிட்டால் தனக்கு  ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி இருந்தார்.

    நீதிமன்றம் அவரை  அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிட்டது அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சனா கல்ராணிக்கு  ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

    போதைப்பொருள் விசாரணை வழக்கில் சஞ்சனாவுடன் நடிகர் ராகினி திவேதியும் கைது செய்யப்பட்டார். இருப்பினும், ராகினிக்கு தற்போது வரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

    நடிகை சஞ்சனா கல்ராணியின் உண்மையான பெயர் அர்ச்சனா கல்ராணி ஆகும். அவர், சினிமா துறையில் நடிக்க வந்ததால் தனது பெயரை சஞ்சனா கல்ராணி என்று மாற்றி இருந்தார். சஞ்சனா கல்ராணி தமிழில் பிரபல நடிகையாக இருந்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.
    எபினேஷர் தேவராஜ், நீலிமா நடிப்பில் செல்வேந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கருப்பங்காட்டு வலசு படத்தின் விமர்சனம்.
    கருப்பங்காட்டு வலசு கிராமம் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. சுமார் 200, 300 பேர் கொண்ட இந்த கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்கிறார் ஊர் தலைவரின் மகள் நீலிமா. சிசிடிவி கேமரா, கழிப்பறைகள் ஆகிய வசதிகளை செய்கிறார். இவர் செய்யும் இந்த முயற்சிக்கு ஊர் மக்கள் சிலரின் எதிர்ப்பும் கிளம்புகிறது.

    ஊர் மக்களின் மொத்த ஆதரவு கிடைத்தவுடன் திருவிழா நடத்துகிறார்கள். திருவிழா முடிந்த அன்று இரவு நான்கு பேர் மர்மான முறையில் இறக்கிறார்கள். நான்கு பேர் எப்படி இறந்தார்கள்? இதற்கு யார் காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமா, விவகாரத்து பெற்றதால் தன்னுடைய மனநிலையை சரிசெய்ய கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கிராமத்தில் கூத்துகட்டும் எபினேஷர் தேவராஜ் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    விமர்சனம்

     இவருடன் வரும் அரியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாரி செல்லதுறையின் அனுபவ நடிப்பையும், ஜார்ஜ் விஜய் நெல்சன் அலட்டல் இல்லாத நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    கிராமத்தில் நடக்கும் கொலை, அந்த கொலைக்கான காரணம், ஆணவ கொலை என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். பிற்பாதியில் வரும் நீண்ட காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது. கிராமத்து கதையை திரில்லர் பாணியில் கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

    விமர்சனம்

    ஆதித்யா-சூர்யாவின் இசை பல இடங்களில் ரசிப்பும், சில இடங்களில் இரைச்சலுமாக உள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘கருப்பங்காட்டு வலசு’ சுவாரஸ்யம் குறைவு.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், தற்போது ஒரே ஷாட்டில் உருவாகும் ஹாரர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விமல். இவர் நடிப்பில் தற்போது கன்னிராசி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக ஹாரர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

    கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. "1 பந்து 4 ரன் 1 விக்கெட்" பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விமல்

    நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் சென்னையில் துவங்குகிறது.
    சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் சிலம்பரசன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
    சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    சிலம்பரசன்

    ஒரே மாதத்தில் இதன் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் டிரெண்டானது. தற்போது இப்படத்தின் முதல் பாடலை 14.12.2020 அன்று வெளியிட இருப்பதாக நடிகர் சிலம்பரசன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
    நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இரண்டு வேடங்களில் பாம்பாட்டம் ஆட இருக்கிறார்.
    ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’.

    நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் நடித்த ரித்திகா சென், பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள்.

    யாஷிகா ஆனந்த்

    முக்கியமான இளவரசி கதாபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் ஐந்து மொழிகளிலிருந்தும் 20 க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இனியன் ஜே ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
    லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன் நடிப்பில் ஈ.இப்ராகிம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கொம்பு படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜீவா, படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டேவின் அறிமுகம் சித்தப்பா பாண்டியராஜன் மூலம் கிடைக்கிறது. திஷா செய்யும் ஆராய்ச்சி தன் கதைக்கு பயன்படுமே என்று அவருடன் பயணப்படுகிறார் ஜீவா. 

    ஜீவா, அவரது நண்பர் யோகேஸ்வரன், பாண்டியராஜன், திஷா பாண்டே, அவரது தோழி ஐவரும் கிராமத்துக்கு வருகின்றனர். அங்கு ஒரு வீட்டில் பேய் இருப்பதாக எல்லோரும் பயமுறுத்துகிறார்கள். அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. ஆவிகளை அடக்கி வைத்திருக்கும் கொம்பு பற்றியும் அதை எடுத்தவர்கள் மர்மமாக கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது. கொம்பின் பின்னணி என்ன? ஜீவா, திஷா பாண்டே உள்பட அனைவரும் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே கதை.

    விமர்சனம்

    கொம்புக்குள் ஆவிகள் என்ற சுவாரசியமான கதையை காமெடி, காதல், கவர்ச்சி கலந்து இயக்குனர் இப்ராகிம் கொடுத்துள்ளார். குடும்பத்தோடு பார்த்து பயந்து, சிரித்து ரசித்து மகிழ ஏற்ற கமர்சியல் படமாக கொடுத்துள்ளார்.

    ஜீவாவுக்கு இது முக்கியமான படம். காமெடி கலந்து நடிப்பை கொடுத்து இருக்கிறார். இறுதி காட்சியில் கமர்சியல் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். நடனம், நடிப்பு, சண்டை என நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. திஷா பாண்டே வழக்கமான நாயகியாக அல்லாமல் கதையை நகர்த்துகிறார்.

    விமர்சனம்

    பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், அம்பானி சங்கர், யோகேஸ்வரன் என காமெடி நடிகர்கள் தங்களால் முடிந்த வரை படத்தை சுவாரசியமாக்கி உள்ளார்கள். வில்லனாக வரும் எம்.பன்னீர்செல்வமும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

    தேவ்குருவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. சுதீப்பின் ஒளிப்பதிவும் வண்ணமயம். கிரீசனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் 'கொம்பு' கூர்மை.
    பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை தற்போது தீவிர ஆன்மீக பயணத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளார்.
    நடிகைகள் பலரும் சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அமலா பால் நவராத்திரியில் பல்வேறு அவதாரங்களில் வந்து ரசிகர்களுக்கு ஆன்மீக தத்துவங்களை அளித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன்பு நடிகை நந்திதா பழனி முருகன் கோவிலுக்குச் சென்றிருந்தார். சஞ்சிதா ஷெட்டி தடை செய்யப்பட்ட போதும் திருவண்ணாமலை மலை மேல் ஏறி தீப வழிபாடு செய்தார். 

    திருப்பதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என திரைத்துறை பிரபலங்கள் கடவுளைத் தரிசிக்க கோவில்களுக்குச் செல்வது வழக்கம். தற்போது நடிகை அனுஷ்கா ஷெட்டி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலவரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்ய படகில் பயணித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

    அனுஷ்கா

    பிசியாக நடித்து வரும் அனுஷ்கா ஆன்மிகத்திற்காகவும் சிறிது நேரம் ஒதுக்கியிருக்கிறார். அனுஷ்கா ஷெட்டி போலவரத்தின் பட்டிசீமா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். தனது நண்பர்களுடன் அனுஷ்கா இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது திருமணத்திற்காக அனுஷ்காவின் வேண்டுதல் என்று கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது தன்னுடைய மாஸ்டர் படத்திற்காக புதிய திட்டம் போட்டு இருக்கிறார்.
    விஜய், தனது அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்குக் கொடுத்திருக்கிறார்.  

     'மாஸ்டர்' படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய், அந்தப் படத்திற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். இதற்கிடையில், 'மாஸ்டர்' படத்தின் ரிலீசுக்காக விஜய் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

    விஜய்

     'மாஸ்டர்' படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து 9 மாதங்கள் தாமதமாக ரிலீஸாக இருப்பதாலும், கொரோனா தாக்கத்தால் தியேட்டருக்கு மக்கள் வர தயங்குவதாலும், அதனை சரி செய்ய விரும்பிய விஜய், நீண்ட நாள்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
    டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசன்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘பிளாஷ்பேக்’ படத்தின் முன்னோட்டம்.
    ரெஜினா கசன்ட்ரா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இப்போது, ‘பிளாஷ்பேக்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. இதில் அவர் பள்ளிக் கூட ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். டான் சேண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “அழகான காதல் பின்னணியில், ‘பிளாஷ்பேக்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த சம்பவங்களை நினைவூட்டும்” என்றார், டைரக்டர் டான் சேண்டி.
    ×