என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் யூ டர்ன் படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனருடன் இணைந்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. தற்போது இவர் கன்னடத்தில் “யூ டர்ன்” (U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், குடி யெடமைதே ( Kudi yedamaithe ) என்னும் வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

    அமலா பால்

    இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது. இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 
    யுகன், நஜீனா நடிப்பில் விசி தண்டபாணி இயக்கத்தில் வெளியாக இருக்கும் கள்ளத்தனம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் யுகன், அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு ஊரில் மண்ணை ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் சிறுவயதில் இருக்கும்போது, இவரது பெற்றோர்களை ஊரில் தாதாவாக இருப்பவர் ஓலைச்சுவடிக்காக கொன்றுவிடுகிறார்.

    அதுபோல் நாயகி நஜீனாவின் பெற்றோர்களையும் தாதா கொன்றுவிடுகிறார். வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கும் நஜீனா, நாயகன் யுகனுடன் சேர்ந்து தாதாவை பழிவாங்க திட்டம் போடுகிறார். இதை அறிந்த தாதா இவர்களை கொல்ல நினைக்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் யுகன் நாயகி நஜீனா இருவரும் தாதாவை பழி வாங்கினார்களா? நாயகன் நாயகியை தாதா கொன்றாரா? ஓலைச் சுவடியின் மரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுகனுக்கு கொஞ்சம் கூட நடிப்பு வரவில்லை. இவரின் முகபாவனைகள் வசனம் பேசுவதும் படத்திற்கு எடுபடவில்லை. நாயகி நஜீனாவின் நடிப்பை மன்னித்து விடலாம். தாதாவாக நடித்திருப்பவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    விமர்சனம்

    கிராமத்து பின்னணியில் கதையை உருவாக்கிய இயக்குனர் விசி தண்டபாணி, எடுத்த விதத்திலும் திரைக்கதையிலும் தடுமாறியிருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. அதுபோல் காமெடி என்னும் பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாகி இருக்கிறார்கள்.

    ரவிக்கிரணின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். அமர்நாத்தின் ஒளிப்பதிவில் தெளிவு இல்லை.

    மொத்தத்தில் 'கள்ளத்தனம்' கவரவில்லை.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஷிவானியை நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
    சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.

    இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்தார். 

    ஷிவானி

    தற்போது இவர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஷிவானி வாழைப்பழம் சாப்பிடும் காட்சி இடம்பெற்றது. இதற்கு நெட்டிசன்கள் வடிவேலுடன் இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
    பிரபல இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனையும் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவையும் கூழாங்கல் என்னும் திரைப்படம் கவர்ந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். அதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் தயாரித்து வருகிறார்கள். ராக்கி படத்தை வாங்கி வெளியிடவும் இருக்கிறார்கள்.

    தற்போது 'கூழாங்கல்' என்னும் படத்தின் உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா கைப்பற்றி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த 'கூழாங்கல்' எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது.

    விக்னேஷ் சிவன் நயன்தாரா

    'கூழாங்கல்' பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குநராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

    இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.

    உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்".

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் பிரபல நடிகைகள் இரண்டு பேர் இணைந்து இருக்கிறார்கள்.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சூப்பர் ஸ்டாருடன் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதால் அண்ணாத்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் , நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு மற்றும் மீனா படப்பிடிப்பிற்கு இணைந்துள்ளனர். 

    மீனா - குஷ்பு

    நடிகை குஷ்புவும் மீனாவும் விமான நிலையத்தில் சந்தித்து ஒன்றாக பயணித்து உள்ளனர். இவர்கள் சந்தித்த தருணத்தை இருவரும் தங்கள் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
    சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ரகுல் பிரீத் சிங்

    "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

    நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்".

    இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
    ‘பாவக் கதைகள்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இணைந்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘புத்தம் புது காலை’ போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

    கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படம் வெளியானது. ஆணவக்கொலையை கதைக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் மேனன்

    இந்நிலையில், பாவக் கதைகள் படத்தை இயக்கிய அதே இயக்குனர்களை வைத்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
    ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் யுகேஷ், வர்ஷா விஸ்வநாத் நடிக்கும் ஓங்காரம் படத்தின் முன்னோட்டம்.
    நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.

    ‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காக 
    புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

    மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார். கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

    ஓங்காரம் படக்குழு

    சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு  வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    சென்னை மெட்ரோ ரயில் ஃபெராரி காரை விட வேகமானது என பிரபல நடிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்வதற்கு மெட்ரோ ரயில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. தற்போது பிரபலங்களும் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சமீபத்தில் சென்னையில் கனமழை பெய்த போது பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அப்போது தான் விமான நிலையம் செல்ல மெட்ரோ மிகவும் உதவிகரமாக இருந்ததாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

    ரகுமான்
     
    இந்நிலையில், பிரபல நடிகர் ரகுமான் சென்னை மெட்ரோ ரயில் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ஒவ்வொரு முறை நான் சென்னை விமான நிலையத்திற்கு செல்வதற்கும், அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்கும்  மெட்ரோ ரயிலையே பயன்படுத்துகிறேன். மெட்ரோ ரயில் ஃபெராரி காரை விட வேகமானது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் சுத்தமாகவும் வசதியாகவும் மாசு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ள அவர், மெட்ரோ ரயில் சரியான நேரத்துக்கு வருவதாகவும்” பாராட்டி பதிவிட்டுள்ளார்.
    நடிகை நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் ஒரே ஊரில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள முடியவில்லையாம்
    ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுடன் நடந்து வருகிறதாம்.

    படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் அனைவரையுமே ஒரு பயோ பபுளுக்குள் இருக்கிறார்களாம். கடந்த ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்ட அதே பயோ பபுள் ஏற்பாடுகள்தான் 'அண்ணாத்த' டீமிற்கும் செய்யப்பட்டுள்ளது. அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது.

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    மருத்துவர்களின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட சில நாள்களில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு தீவிர பாதுகாப்புடன் 'அண்ணாத்த' படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

    பயோ பபுள் முறையால் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருகிறாராம். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. ஒரே ஊரில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள முடியவில்லையாம். 
    விஜய்யின் 65-வது படத்திற்காக எழுதிய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல நடிகரிடம் சொல்லி ஓகே வாங்கி உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது. அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். தற்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்னதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கும் அந்தக் கதை பிடித்துவிட்டதாம். 

    சிவகார்த்திகேயன்

    முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையம்சம் கொண்ட அப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்க்கு சொன்ன அதே கதையை தான் சிவகார்த்திகேயனிடம் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஜனவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.
    கேரளாவில் வாலிபர்களின் சில்மி‌ஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை, அவர்களை மன்னிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    கேரள மாநிலம் கொச்சியில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு தாய் மற்றும் சகோதரியுடன் சென்ற இளம் நடிகை, அங்கு தன்னிடம் 2 வாலிபர்கள் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்தார். கொச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்தனர்.

    சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த ஆதில் முகமது, ரம்ஷாத் என்ற 2 வாலிபர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டனர். சரண் அடைவதற்காக களமசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், தெரியாமல் நடந்திருந்தால் மன்னிக்குமாறும் கூறினர்.

    பிடிபட்ட வாலிபர்கள்

    இந்நிலையில் வாலிபரின் சில்மி‌ஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை அந்த வாலிபர்களை மன்னிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் இந்த சம்பவத்தால் என் குடும்பம் வேதனை அனுபவித்து வருகிறது. இதுபோல அவர்கள் குடும்பமும் வேதனை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் நேற்று களமச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைத்தனர்.
    ×