என் மலர்
சினிமா செய்திகள்
படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.
பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் திகில் படங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் மாயத்திரை என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இதில் அசோக் கதாநாயகனாகவும், சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தை டி.சம்பத்குமார் இயக்கி உள்ளார்.
குஷ்பு, சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் தயாரித்துள்ளார். இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சம்பத்குமார் கூறும்போது, “மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள்.
தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேயாக வருகிறார். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய் படமாக தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது” என்றார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், தனது தாயின் அறக்கட்டளையால் கட்டப்பட்ட மதுரைப் பள்ளிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், மதுரையில் உள்ள ஒரு பள்ளி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது தாய் மற்றும் அவரது அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஒரு பள்ளியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதுரையில் அமைந்துள்ள மவுண்டைன் வியூ என்ற பள்ளியானது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏழை குழந்தைகளுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. தற்போது 200 குழந்தைகள் வரை இங்கு பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படிப்பதற்கான வசதி உள்ளது. மேலும் 14 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டி இருக்கிறது. நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்து பல குழந்தைகளின் கனவை நனவாக்குவோம். தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மிகவும் அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி ‘மிஷன் மஞ்சு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஷாந்தனு பாஹி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரி, சுஃபியும், சுஜாத்தையும் போன்ற படங்களை இயக்கி பிரபலமான இளம் இயக்குனர் ஷாநவாஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாம்.
மலையாள படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஷாநவாஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான கரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய சுஃபியும், சுஜாத்தையும் படம் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் கடந்த வாரம் பாலக்காடு அருகில் உள்ள அட்டபாடியில் தங்கி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

37 வயதே ஆகும் ஷாநவாஸ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுஃபியும், சுஜாத்தையும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாபு, ஷாநவாஸ் வெண்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், அவரது இதயம் இன்னும் துடித்துக் கொண்டு இருப்பதாக கூறினார். ஷாநவாஸுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், அற்புதம் நடக்கும் என்று நம்புவோம். தவறான தகவல்களை பகிரவேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அப்படக்குழு மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதேபோல் மிஷ்கினின் பிசாசு 2 படக்குழுவும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். இதில் பிசாசு 2 பட போஸ்டரை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தியில் இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்வரன், மாநாடு படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர். விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.
அண்மையில் இப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது. அதன்படி தங்களது 20-வது படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் கிருஷ்ணா இயக்க உள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 24-ந் தேதி இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
We are glad & proud to have the trend setter of our ages @SilambarasanTR_ and the Heart throbe @Gautham_Karthik joining forces for our 20th project !!
— Studio Green (@StudioGreen2) December 23, 2020
"Sillunu oru kaadhal"s, Jillana director @nameis_krishna is the captain of this ship!#Studiogreen20@kegvraja
Bless us! pic.twitter.com/xgxGIDstmY
உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே பிரசாத் ஸ்டுடியோ-வில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிரசாத் ஸ்டுடியோ அளித்த பதில் மனுவில், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் போன்ற நிபந்தனைகளுக்கு இளையராஜா சம்மதித்தால் அவரை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ உடைமைகளை உரிமை கோர மாட்டேன் எனவும் இளையராஜா அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட கவர்ச்சி நடிகையை படக்குழு தேடி வருகிறதாம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அதற்கு கவர்ச்சி நடிகை ஒருவரை ஆட வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஒரு பாடலுக்கு ஆட அதிக தொகையை சம்பளமாக கொடுக்க படக்குழு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இப்பாடல் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம்.
பிரபல இந்தி நடிகர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கி பலரை கைது செய்தனர்.
இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அந்தேரி, பாந்திரா பகுதிகளில் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அர்ஜுன் ராம்பாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையேற்று போதை பொருள் போலீஸ் முன்பு ஆஜராகி அர்ஜுன் ராம்பால் விளக்கம் அளித்தார். அப்போது தனக்கு மனநல சிகிச்சைக்காக மாத்திரைகளை மன நல மருத்துவர் கொடுத்ததாக தெரிவித்தார். மருந்து சீட்டுகளையும் சமர்ப்பித்தார். மருந்து சீட்டுகள் போலியானவை என்று தெரியவந்தால் அர்ஜுன் ராம்பால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது. அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். தற்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், அதற்கு இயக்குனர் முருகதாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்குவதாக பரவும் செய்திகள் உண்மையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முருகதாஸ் அடுத்ததாக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் மாதவன், தான் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்துக்கு பிறகு மாதவன் மாறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக தயாராகும் ராக்கெட்ரி படத்தில் நடித்து இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில் மாதவன் புதிய தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கதாநாயகன், வில்லன், மன்னர் என்ற பல தோற்றங்களில் இந்த புகைப்படங்கள் உள்ளன.

இவை வலைத்தளத்தில் வைரலாகின்றன. அவை தான் நடித்து திரைக்கு வராமல் போன படங்களின் தோற்றங்கள் என குறிப்பிட்டுள்ளார். சில படங்களில் மாதவன் கவுரவ தோற்றங்களில் வந்தார். இனிமேல் அதுபோன்று நடிக்கவில்லை என்றும், அடுத்த 2 வருடங்களுக்கு முழுக்க எனது படங்களாகவே வரும் என்றும் தெரிவித்து உள்ளார்.






