என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா மேனன்

    நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங் கேற்று சமீபத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறினாலும் அவருக்கு சமூக வலை தளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஓவியாவுக்கு பிறகு சனம் ஷெட்டியை பிக்பாஸ் ரசிகர்கள் ‘தலைவி’ என்று அழைத்து வருகிறார்கள். அவரும் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று உடை அணிந்து படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு‌ஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

    சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சாண்டா தொப்பியை மாட்டிவிட்டார்.

    சமந்தா, அனு இமானுவேல், நிக்கி கல்ராணி

    துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அனு இமானுவேல் சிவப்புநிற ஓவர் கோட் அணிந்து கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே சிரிப்புடன் போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகைகளின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வருகின்றன. இதேபோல் சமந்தா, ஆத்மிகா, சாக்‌ஷி அகர்வால், நிக்கி கல்ராணி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
    நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அப்பல்லோ நிர்வாகம், “கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் தனியார் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மலையாள சினிமாவில் பார்ட்டி கலாச்சாரம் பரவலாக உள்ளது. இதில் தனியார் ரிசார்ட்டுகளில் நடத்தும் விருந்துகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போதை ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் இரவில் தனியார் ரிசார்ட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பவுடர் உள்பட 7 வகையான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    பிரிஸ்டி பிஸ்வாஸ்

    இந்த போதை விருந்தில் மலையாள சினிமாவை சேர்ந்த இளம் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்வதாக இருந்தனர். போலீசாரின் அதிரடி சோதனை குறித்து தகவல் அறிந்து பார்ட்டிக்கு வராமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த போதை விருந்திற்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜிமல் ஜாகீர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகை பிரிஸ்டியும் ஒருவர், இவர் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் கன்னட சினிமாவில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணிதிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட சிலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சியான்கள்’ படத்தின் விமர்சனம்.
    தேனி அருகே பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த இவர்கள் 7 பேரும் அறுபது வயதை தாண்டியும் இளம் வயது நண்பர்களைப் போல் பழகி வருகிறார்கள். 

    7 பேருக்கும் தனித்தனி ஆசைகள் இருக்கின்றன. அதில் நளினிகாந்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று மற்ற நண்பர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

    சியான்கள்

    இந்த நிலையில், மருமகள் கையினால் அடி வாங்கிய அவலம் காரணமாக 7 சியான்களில் ஒருவரான நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே வி‌‌ஷ ஊசி போட ஏற்பாடு செய்ததில், துரை சுந்தரம் என்பவர் இறந்து போகிறார்.

    இரண்டு நண்பர்களும் தங்கள் கண் முன்னே கொல்லப்படுவதாலும் தற்கொலைக்கு தூண்டப்படுவதாலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவு என்ன? இந்த சமூகத்துக்கு முதியவர்களின் அவசியத்தை அவர்கள் உணர்த்தினார்களா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறது படம்.

    சியான்கள்

    படத்தின் நாயகனான கரிகாலன் டாக்டராக வந்து முதியவர்களுக்கு உதவும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷா ஹரிதாஸ் கிராமத்து அழகியாக அம்சமாக தெரிகிறார். முதியவர்கள் தொடர்பான வறுமை காட்சிகளுக்கு இடையே கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் ஜோடியின் யதார்த்தமான காதல், ரசிக்க வைக்கிறது. 

    நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகிய 7 முதியவர்களும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அவர்களில் நளினிகாந்தின் கதையும், நடிப்பும் கலங்க வைக்கிறது. குறிப்பாக கவலைக்கிடமான நிலையில், படுத்த படுக்கையாக கிடக்கும் மனைவிக்கு இவர், ‘தண்டட்டி’ போட்டு விடும் காட்சி, உருக்கம்.

    சியான்கள்

    வித்தியாசமான கதை. பேய்களையும், தாதாக்களையும் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், மாற்றுப்பாதையில் போய் ஏழை முதியவர்களின் கதையை சொல்லி நெகிழவைத்து இருக்கிறார், இயக்குனர் வைகறை பாலன். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் உணர்வுபூர்வமாகவும் செல்கிறது. இறுதிக்காட்சி கண்களை குளமாக்குகிறது. திரைக்கதையில் வேகம் கூட்டியிருக்கலாம்.

    முத்தமிழ் இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் கிராமிய மணம் கமழ்கிறது. கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார். 

    மொத்தத்தில் ‘சியான்கள்’ மிளிர்கிறார்கள்.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். 

    கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கிறிஸ்துமஸ் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது. 
    சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
    நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான். அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான்.

    சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன. சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்.

    ஆர்னவ் விஜய்

    ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம். ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

    மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.
    சினிமாவில் ஹீரோவாக 10 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய் சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். 

    டாப் ஹீரோ என்ற இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

    இவ்வாறு தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதிக்காக ஒரு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி படங்களில் பேசிய பேமஸான வசனங்களை தொகுத்து அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். நடிகைகள் 2 பேரும் சிறையில் இருந்தபடியே தங்களுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 2 பேரின் ஜாமீன் மனுக்களும் 5 முறைக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதனால் நடிகைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவை காரணம் காட்டி, சஞ்சனாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் ஓட்டலில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராகிணி திவேதி

    இந்த வழக்கில் நடிகை சஞ்சனாவுக்கு முன்பே நடிகை ராகிணி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால், ராகிணி மனஉளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ராகிணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அதாவது மூச்சுத்திணறல், வயிற்று வலியால் ராகிணி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை.

    இதையடுத்து சிறை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் நேற்று உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற ஜெயநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ராகிணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.
    முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்திருக்கிறார்கள்.
    'தேவராட்டம்' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

    முதலில் 'பேச்சி' எனத் தலைப்பிட்டு இருந்த இந்தப் படத்தைப் பொங்கல் பண்டிகை அன்று சன் டிவியில் ஒளிபரப்பவும், அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டார்கள். ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விக்ரம் பிரபு

    மேலும் 'பேச்சி' என்ற பெயர் பொருத்தமாக இல்லை என்றும், அதனால் 'புலிக்குட்டிப் பாண்டி' என்று படத்தின் பெயரை மாற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து இருக்கிறார்கள்.
    நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

    தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதும் அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

    சமந்தா

    சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துவரும் அவர், சற்று அத்துமீறி வெறும் சட்டையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகி ஒரு மில்லியனுக்கும் மேலாக லைக்ஸ் பெற்று வருகிறது.
    தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார்.
    கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.  

    தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். 

    ராஷ்மிகா

    அதன்படி ‘மிஷன் மஞ்சு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சாந்தனு பாகி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ×