என் மலர்
சினிமா

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு படத்தில் திடீர் மாற்றம்
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்திருக்கிறார்கள்.
'தேவராட்டம்' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

முதலில் 'பேச்சி' எனத் தலைப்பிட்டு இருந்த இந்தப் படத்தைப் பொங்கல் பண்டிகை அன்று சன் டிவியில் ஒளிபரப்பவும், அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டார்கள். ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 'பேச்சி' என்ற பெயர் பொருத்தமாக இல்லை என்றும், அதனால் 'புலிக்குட்டிப் பாண்டி' என்று படத்தின் பெயரை மாற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






