என் மலர்
சினிமா

சாக்ஷி, ஆத்மிகா, ஷாலு ஷம்மு
வைரலாகும் நடிகர், நடிகைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங் கேற்று சமீபத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறினாலும் அவருக்கு சமூக வலை தளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஓவியாவுக்கு பிறகு சனம் ஷெட்டியை பிக்பாஸ் ரசிகர்கள் ‘தலைவி’ என்று அழைத்து வருகிறார்கள். அவரும் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று உடை அணிந்து படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலுஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார்.
சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சாண்டா தொப்பியை மாட்டிவிட்டார்.

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அனு இமானுவேல் சிவப்புநிற ஓவர் கோட் அணிந்து கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே சிரிப்புடன் போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகைகளின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வருகின்றன. இதேபோல் சமந்தா, ஆத்மிகா, சாக்ஷி அகர்வால், நிக்கி கல்ராணி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story






