என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
    தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.

    இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
    கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆனதால் படக் குழுவினர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
    பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

    கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை (08.01.2021) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    யாஷ்

    சற்று முன் இந்த டீஸர் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திற்காக நடன பயிற்சி செய்யும் நடிகர் தனுஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
    கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

    இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

    தனுஷ்

    இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் தனுஷ், தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, சிம்பு பேசியது தவறு என்று கூறியுள்ளார்.
    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார் கருணாஸ். இதனால், திருவாடனை சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் இன்று தமிழக காவல்துறை டிஜிபியை அலுவலகத்தில் சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தார்.

    அதன்பின் பேசிய கருணாஸ், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோம். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் நல்லது. 

    கருணாஸ் - சிம்பு

    கொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான இருப்பவர் செல்வராகவன். இவர் இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஓம்கார் என்ற மகனும் லீலாவதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் தற்போது மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி, குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் குழந்தைக்கு 'ரிஷிகேஷ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    செல்வராகவன் - கீதாஞ்சலி

    செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    பிரபல நடிகைகளாக இருக்கும் ஒன்பது பேர் மார்கழி மாத திருப்பாவை பாசுரத்துக்காக இணைந்திருக்கிறார்கள்.
    மார்கழி மாத திருப்பாவை பாசுரத்தை நடிகைகள் சுஹாசினி, உமா பத்மநாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனுஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு நடிகை ஷோபனா நடனம் ஆடி உள்ளார். 

    இதுகுறித்து சுஹாசினி கூறும்போது, “மார்கழித் திங்கள் தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக தொழில் ரீதியிலான பாடகர்கள் அல்லாத நாங்கள் 8 நடிகைகள் எங்கள் சொந்த குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம். 

    திருப்பாவை

    இந்த பாடலை பெரும்பாலானோர் எங்கள் செல்போனிலேயே பாடி பதிவு செய்தோம். இது அற்புதமாக தொகுக்கப்பட்டு உள்ளது. இந்த பாடல் மக்களை மகிழ்விக்கும்'' என்றார். நடிகைகள் பாடிய திருப்பாவை பாசுரத்தை நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் வெளியிட உள்ளனர்.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் கபடதாரி படத்தின் முன்னோட்டம்.
    கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் படம் கபடதாரி. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சிபிராஜுடன் நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். 

    சிபிராஜ்

    ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜ் இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், தனஞ்செயனும் எழுதியுள்ளார்கள். 
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி இருக்கும் கேஜிஎப் 2 படத்தை பிரபல மலையாள நடிகர் கைப்பற்றி உள்ளார்.
    2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். 

    கேஜிஎப் 2 படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவர் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரி... ஆரி... ஆரி என கோஷமிட்டனர். இதைப்பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார். இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்ப நிலை கோலிவுட்டில் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
    கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பின்பு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று நிபந்தனையும் விதித்தது. இதனால் திரையுலகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. 

    பெரிய படங்கள் வெளியாகவில்லை. வெளியான சிறிய படங்களுக்கும் போதிய வரவேற்பு இல்லை. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்புகளும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

    தியேட்டர்

    இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலா ளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    இதன் காரணமாக பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்ப நிலை நீடிக்கிறது. திரையுலகினரும் குழம்பிப்போய் உள்ளனர். ஒருவேளை அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ‘மாஸ்டர்’ பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.
    கயல், பரியேறும் பெருமாள், விசாரணை போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்திக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதாம்.
    தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார். பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

    இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ஆனந்தி

    இந்நிலையில், நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா துறையினர் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
    100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், இதை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.

    தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது. அதில் “50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு மதுரை கிளை

    இந்நிலையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர். 

    100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை. எனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.
    ×