என் மலர்
சினிமா செய்திகள்
எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்ற கேள்விக்கு நடிகை சரோஜாதேவி பதில் அளித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவி பெங்களூரு மல்லேசுவரம் 11-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி சரோஜாதேவியின் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கலந்துகொண்டு சரோஜாதேவி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். பின்னர் அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் ஒரு திடமான முடிவை எடுத்து உள்ளார். அவரது முடிவை நான் பாராட்டுகிறேன். கமல்ஹாசனும் அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார்.

எம்.ஜி.ஆர். போல நடிகர்கள் அரசியலில் ஜொலிப்பார்களா? என்று உறுதியாக சொல்ல முடியாது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்ப்போம். சில நேரங்களில் படங்கள் தோல்வியும் அடையும். அதுமாதிரி தான் அரசியலில் நடிகர்கள் வெற்றியும், தோல்வியும் அடைவார்கள். எம்.ஜி.ஆர். எங்களுக்கு ஒரு தெய்வம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது நான் வாழ்நாளில் செய்த புண்ணியம் என்றார்.
நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் சாண்டி, சுருதி செல்வம் நடிப்பில் உருவாகி வரும் மூணு முப்பத்தி மூணு படத்தின் முன்னோட்டம்.
பிரபல நடன இயக்குனரான சாண்டி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘3:33’. டி.ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை நம்பிக்கை சந்துரு இயக்கி உள்ளார். இதில் சுருதி, ரமா, ரேஷ்மா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இதில் பாடல்கள் இல்லையாம்.

படத்தை பற்றி இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறியதாவது: வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்... என திகில் கலந்த படம் இது. திக் திக் என காட்சிக்கு காட்சி திகில் அதிகரித்துக்கொண்டே போகும். படத்துக்காக மாங்காடு அருகே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, அதை பேய் பங்களாவாக மாற்றினோம். பெரும்பகுதி காட்சிகள் அந்த பங்களாவுக்குள்ளேயே படமாக்கப்பட்டன. படத்தை இயக்கியிருப்பதுடன், டாக்டர் வேடத்தில் நடித்தும் இருக்கிறேன்” என்கிறார்.
கயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆனந்தியின் காதல் கைகூடியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம்.

நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் ஹீரோயின். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.
பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது. சாக்ரடீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கவும் உள்ளாராம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதேபோல் பிரபல பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 9 மாதம் கடந்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வருகிற ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், இதை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.
தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது. அதில் “50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்திருந்தனர். 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் 2 படத்தின் டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியானது முதல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய பட டீசர் என்ற சாதனையை கேஜிஎப் 2 படைத்துள்ளது. இதற்கு முன் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று அதனை முறியடித்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மாஸ்டர்’ படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘கைதி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்க்கு மாஸ்டர் கதையை சொன்னேன். அவருக்கு பிடித்தது. படப்பிடிப்பை வேகமாக முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். கொரோனாவால் தாமதமாகி பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

கதை சென்னை, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய ஊர்களை மையமாக வைத்து நடக்கிறது. பாதி விஜய் படமாகவும், பாதி எனது படமாகவும் இருக்கும். விஜய் ரசிகர்களை மாஸ்டர் படம் திருப்திப்படுத்தும். விஜய்க்கு இணையான வேடத்தில் விஜய் சேதுபதி மோசமான வில்லனாக நடித்து இருக்கிறார்.
அந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்று விஜய்க்கு சந்தேகம் இருந்தது. அவர் சம்மதித்ததில் மகிழ்ச்சி. படத்தில் இருவரும் சந்திக்கிற காட்சிகள் பிரமாதமாக இருக்கும். படம் 3 மணிநேரம் ஓடும். படத்தில் அரசியல் இல்லை. நகைச்சுவை படம் எடுக்க ஆர்வம் உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவும் ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்த ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாறா’ படத்தின் விமர்சனம்.
நாயகி ஷ்ரத்தாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது புடிக்காமல், தனக்கு வேலை இருப்பாதாக கூறிவிட்டு கேரளாவிற்கு செல்கிறார். செல்லும் இடத்தில், தங்க இடம் தேடி அலைகிறார். அப்போது சிறுவயதில் ஒருவர் தனக்கு சொன்ன கதை, அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளதை பார்த்து வியப்படைகிறார்.
இறுதியாக நாயகன் மாதவன் உபயோகித்து வந்த வீட்டில் தங்குகிறார் ஷ்ரத்தா. அந்த வீட்டில் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் உண்மை கதை ஒன்று சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. அதை ஷ்ரத்தா ஆவலுடன் படித்து வருகிறார். ஆனால் அந்த உண்மைக்கதை சித்திரம் ஓரிடத்தில் சஸ்பென்சாக நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் மாதவனை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஷ்ரத்தா.

மாதவன் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் ஷ்ரத்தா, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து மாதவனின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இறுதியில் ஷ்ரத்தா மாதவனை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் கதைக்கருவை கொண்டு மாறா படம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறாவாக நாயகன் மாதவன், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் மாறா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி ஷ்ரத்தா அழகு, பதுமையுடன் நடிப்பில் மிளிர்கிறார். மாறாவின் சித்திரங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அருமை. மற்றொரு கதாநாயகியான ஷிவதாவின் நடிப்பும் அற்புதம்.
அலெக்ஸாண்டரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், அப்புக்குட்டி, மவுலி, அபிராமி என படத்தில் ஏராளமான அனுபவ நடிகர்கள் நடித்திருக்கிறார். அவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் திலீப் குமார், சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் ரசிக்கும்படி உள்ளது. சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பி பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தேர்வு திறம்பட செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம்.
கலை இயக்குனர் அஜயனின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதீபலிக்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘மாறா’ மனதில் நிற்கிறார்.
சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு தனது செலவில் அனுப்பி வைத்து பெயர் பெற்றவர். இந்தநிலையில் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக கே.வார்டு உதவி கமிஷனர் அந்த புகாரை அளித்துள்ளார்.
ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டை பெருநகர மண்டல நகர திட்ட விதிகளை மீறி ஓட்டலாக மாற்றி உள்ளார் என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சோனு சூட்டுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி இருந்தது.

ஆனால் அந்த நோட்டீசை மீறியும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்ந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இருப்பினும் போலீசார் சோனு சூட் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாநகராட்சி தனது புகார் தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கிய பிறகு வழக்குப்பதிவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்து உள்ளது. இங்கு விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய இருவரும் பல வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் அந்த பொறுப்பில் இருந்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்து நீக்கம் செய்து அறிவித்தார். இதனால் இரண்டு பேரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

இதையடுத்து நடிகர் விஜய் தரப்பில் அவரது வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளனர். அதில், தனது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் இரண்டு பேரையும் காலி செய்து தரும்படி கூறியிருந்தார். வீட்டைக் காலி செய்ய அவகாசம் வேண்டும் என இருவரும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.
நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.
இதுபற்றி லதா கூறியதாவது:-
"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்து முடித்த கையோடு எனக்கு எம்.ஜி.ஆருடன் "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதிலும் என்னுடன் மஞ்சுளா இருந்தார். எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நல்லவராகவும், வைரக் கொள்ளையராகவும் வருவார். வைரக் கொள்ளையராக வரும் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நான் வருவேன்.
"சச்சா ஜுட்டா'' என்ற இந்திப்படத்தின் `ரீமேக்' இந்தப்படம். தமிழுக்கென சில மாற்றங்களை செய்தார், எம்.ஜி.ஆர். குறிப்பாக படத்தின் கொள்ளையன் ரஞ்சித்தின் பாதை மாறிய பின்னணியை விவரிக்கும் தாய்ப்பாசத்துடன் கூடிய கிளைமாக்சை உருவாக்கினார்.
அவரது ஸ்பெஷாலிட்டியே இதுதான். தனது கேரக்டரின் தன்மை ரசிகர்களின் உணர்வுகளுடன் கலந்து போவதாக இருக்க வேண்டும் என்பார். ஒரிஜினல் கதையான இந்திப்படத்தில், ரஞ்சித் கேரக்டரை வில்லனாகவே காட்டுவார்கள். பிரபல இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் எனக்கும் மஞ்சுளாவுக்கும் ஒரு நடனப்பாட்டு அமைந்தது. `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலாவுக்குத்தான் நடனமாடும் வாய்ப்பு அமைந்தது. எனக்கு நடன வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் தீர்ந்தது. "கொள்ளையிட்டவன் நீதானே'' என்ற அந்தப் பாடல் காட்சியை, டிவியில் இப்போது பார்க்க நேர்ந்தாலும் பிரமிப்பு விலகாமல் பார்த்து ரசிப்பேன்.
தொடர்ந்து பட வாய்ப்புகள். இடைவிடாத படப்பிடிப்பு என வளர்ந்து கொண்டிருந்தேன். "எம்.ஜி.ஆர். ஜோடி'' என்ற முறையில், திரையுலகில் ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த நேரத்தில்தான் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது.
முக்கோணக் காதல் கதைகளை சொல்வதில் புகழ் பெற்ற ஸ்ரீதர், அதுவரை எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பதால், இந்த கூட்டணிக்கு அப்போதே ரசிகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்திலும் நான்தான் நாயகி என்றபோது, என் சந்தோஷம் இரட்டிப்பானது.
தொடர்ந்து நடிப்பு நடிப்பு என்று போய்க் கொண்டிருந்ததால், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று அம்மா பிரியப்பட்டார். ஒரு அரை நாள் விடுமுறை கிடைத்தால் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று எண்ணினோம். எனவே டைரக்டர் ஸ்ரீதர் செட்டில் தனியாக இருந்த நேரத்தில், "சார்! நாளைக்கு காலையில் அம்மாவும் நானும் திருப்பதி சென்று வரலாம் என்றிருக்கிறோம். அரை நாள் தேவைப்படும்'' என்றேன்.
"நாளைக்கு முழுக்க உன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. எனவே நாளை முடியாது'' என்றார், ஸ்ரீதர்.
"அரைநாள் தானே கேட்கிறேன். காலையில் போய்விட்டு மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுவேன்'' என்று சொன்னேன்.
அவரோ பிடிவாதமாக `லீவு தரமுடியாது' என்று மறுத்து விட்டார்.
நானும் விடவில்லை. "அரை நாள் தந்தே ஆகவேண்டும்'' என்ற ரீதியில் அவரை வற்புறுத்திக்கொண்டிருந்தேன்.
இந்த நேரத்தில் அங்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். "என்ன பிரச்சினை?'' என்று பொதுவாக கேட்டார்.
டைரக்டர் ஸ்ரீதர் சொல்வதற்குள் நான் முந்திக்கொண்டு, "நாளைக்கு திருப்பதி போய்வர அரை நாள் விடுமுறை கேட்டேன். தர மறுக்கிறார்'' என்றேன்.
உடனே எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை பார்த்தார். "கோவில் தரிசனம் என்றால் போய்த்தான் ஆகவேண்டும். மதியம் 2 மணிக்கு வந்து விடுவதாக இருந்தால் அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்'' என்றார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.
எம்.ஜி.ஆர். தனது "ஏ.சி'' காரையும், டிரைவரையும் அனுப்பி வைத்தார்.
விடியற்காலை 3 மணிக்கு காரில் புறப்பட்டோம். காலை 10 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து, தாமதிக்காமல் சென்னைக்கு பயணம் ஆனோம்.
திரும்பி வரும் வழியில்தான் சோதனை. கார் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் டயர் வெடித்து விட்டது. டிரைவர் சாமர்த்தியமாக காரை நிறுத்தினார். டயரை கழற்றி ஸ்டெப்னி மாட்டி கார் புறப்பட்டபோது, மீண்டும் பிரச்சினை. சித்தூரைத் தாண்டி கார் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த `ஸ்டெப்னி' டயரும் வெடித்து விட்டது.
ஏற்கனவே, ஸ்டெப்னி மாட்டியதில் ஒரு மணி நேர தாமதம். இருந்தாலும் எப்படியும் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்து விடலாம் என்றிருந்த நம்பிக்கையை, மறுபடியும் வெடித்த டயர் கெடுத்துவிட்டது.
10 மைல் தூரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி. பஞ்சர் போடவேண்டுமானால் கூட, 10 மைல் போனால்தான் முடியும். எனக்கு டென்ஷன். டிரைவர் என் டென்ஷனை உணர்ந்தாலும், பஞ்சர் போட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.
ஆனால் அவர் திரும்பி வந்தது மாலை 4 மணிக்கு. அதுவும் பஞ்சர் போடும் கடை விடுமுறை என்ற தகவலுடன் வந்து சேர்ந்தார்.
இனி என்ன செய்வது? எனக்குள் தவிப்பு. இப்போது போல் போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது. சென்னைக்கு போன் போட வேண்டுமானால் `டிரங்க் கால்' புக் செய்து, காத்திருந்துதான் பேசவேண்டும். அதனால் யாருக்கும் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை.
வேறு வழியின்றி சித்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட பஸ்சில் அம்மாவும் நானும் சென்னை வந்தோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் நாங்கள் வந்த பஸ் நின்றபோது இரவு 8 மணி.
அம்மாவுக்கு இன்னொரு கவலையும் இப்போது சேர்ந்து கொண்டு விட்டது. மதியத்துக்குள்தான் வந்துவிடுவோமே என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த 3 தம்பிகளுக்கும் தங்கைக்கும் மதிய சாப்பாடு மட்டுமே தயார் செய்து கொடுத்துவிட்டு வந்திருந்தார். இப்போது பிள்ளைகள் வேறு பசியாக இருப்பார்களே என்ற கவலை அம்மாவை வாட்டியது.
சென்ட்ரலில் இருந்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்தபோது 9 மணி. ஹாலில் தம்பிகளும், தங்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்திருந்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆரேதான்!
அதுமட்டுமா? டிபன் கேரியரில் எனக்கும் அம்மாவுக்குமான சாப்பாட்டையும் கொண்டு வந்திருந்தார்.
அம்மாவுக்கு கண் கலங்கியது. எனக்கும்தான். தாமதத்துக்கான காரணம் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல முயன்றோம். ஆனால், நடந்தது என்ன என்ற தகவல் அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது! "பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். கார் டயர் வெடித்தபோது விபத்து நேராமல் இருந்ததே, அதுவே போதும்'' என்று ஒரே வரியில் எங்கள் டென்ஷனை குறைத்து விட்டார்.
பிள்ளைகளின் பசியறிந்து அமுதூட்டிய எம்.ஜி.ஆரின் அன்பும், அக்கறையும் அம்மாவை ரொம்பவே நெகிழச்செய்து விட்டது. இதன் பின்னர் தனது சொந்த சகோதரர் போல அவரிடம் அன்பு பாராட்டினார் அம்மா.
எம்.ஜி.ஆருக்கு காடை வறுவல் ரொம்ப இஷ்டம். அம்மா `சமையல் ஸ்பெஷலிஸ்ட்' என்பதை தெரிந்து கொண்டவர், உரிமையுடன் "அம்மா! காடை வறுவல் கொடுத்து அனுப்புங்க'' என்று கேட்டு அனுப்புவார். அம்மாவும் தனது கைப்பக்குவம் மிளிர `காடை வறுவல்' செய்து கொடுத்து அனுப்புவார்.
எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான `மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனி'லும் நான்தானே நாயகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் எம்.ஜி.ஆரால் நான் உயிர் தப்பியிருக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் எம்.ஜி.ஆரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.
திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. எம்.ஜி.ஆர். மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''
இவ்வாறு லதா கூறினார்.
"உரிமைக்குரல்'' படத்தில் "விழியே கதை எழுது'' கனவுக்காட்சியில் எம்.ஜி.ஆர்., லதா.
"நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் எம்.ஜி.ஆர்., லதா.