என் மலர்
சினிமா செய்திகள்
கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.

இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், அங்கு திட்டமிட்டபடி மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஜனவரி 5 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார். அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதனால் கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என டுவிட்டரில் விமர்சித்த ரசிகருக்கு, நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் மாதவன் நடித்த மாறா திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக ஷரத்தா ஶ்ரீநாத் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தி நடிகர் அமித் சாத், மாதவனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பலரும் வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
அமித் சாத் புகைப்படத்தின் பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர் மாதவனை விமர்சித்தார். அவர் வெளியிட்ட பதிவில், மாதவன் ஒரு காலத்தில் எனது மனம் கவர்ந்த நடிகர். ஆனால் இப்போது அவர் தனது சினிமா வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழிப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது. இந்தி திரையுலகில் அவர் நுழைந்தபோது புதிதாக மலர்ந்த மலர்போல் இருந்தார். இப்போது கண்களையும், முகத்தையும் பாருங்கள். அவை எல்லாவற்றையும் சொல்லும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை மாதவன் ரசிகர்கள் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். அந்த நபரின் கருத்துக்கு பதிலடியாக மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், ஓ இதையெல்லாம் நீங்கள் கண்டுப்பிடித்து இருக்கிறீர்களா? உங்கள் பெற்றோரை நினைக்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நீங்கள் மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், பிரபல பாலிவுட் நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீ-சர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. ஏற்கனவே கார்த்திக் ஆர்யன் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகானை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகள் பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே, தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டது படக்குழு. வெளிநாடுகளில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால், வெளிநாட்டுப் படப்பிடிப்பே வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே படமாக்கி விடலாம் 'வலிமை' படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் போட்டோ சூட் எடுக்கும் போது கீழே விழுந்து இருக்கிறார்.
தமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ், முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இட்டிமானி, பிக்பிரதர்ஸ் படங்களில் மோகன்லாலுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஹனிரோஸ் கேரளாவில் ஆற்றங்கரையோரம் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார். புதிய பட்டுசேலை ஜாக்கெட் அணிந்து தலை நிறைய பூ வைத்துக்கொண்டு ஆற்றில் இருந்த ஒரு கல்லில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக சென்றார்.

ஒரு கல்லில் இருந்து இன்னொரு கல்லுக்கு காலை தூக்கி வைத்தபோது கால் இடறி தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் கேமராமேன் உள்ளிட்ட படக்குழுவினர் பதறியபடி ஓடினார்கள். மேக்கப் கலைஞர் ஓடிச்சென்று ஹனிரோஸை தூக்கினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்மிருதி வெங்கட் இதற்கு முன் தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார்.
பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65.

1975-ல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்ற படத்தில் அறிமுகமான டான்யா, எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார். 1994-ல் கடைசியாகப் படங்களில் நடித்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
கிறிஸ்துமஸுக்கு முன் தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது மயங்கி விழுந்தார் டான்யா. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும், பின்னர் உயிருடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் டான்யா மரணம் அடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான்யாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக தியேட்டர்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில் தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இளம் நடிகராக இருக்கும் சிலம்பரசன் வீட்டின் முன்பாக அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் சிலம்பரசன் வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தற்போது ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் ரசிகர்கள் நிரந்தர முடிவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவரை மாற்ற கோரியும் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அருண்விஜய்யின் பெயரை வைத்து இளம் பெண்களை ஏமாற்றி வரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம் உள்ள இளம் பெண்கள் தேவை என்ற பொய் விளம்பரம் ஒன்று எப்படியோ அருண்விஜய் கண்ணில் பட்டுவிட்டது.
இதனால் பதறிப்போன அருண் விஜய் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.






