என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  

    இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டு உள்ளனர்.  

    மாநாடு

     சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.
    கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.

    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதை அஜய் பிரதீப் இயக்க உள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். 

    இப்படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குநராகப் பணியாற்றவிருக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்யவிருக்கிறார். விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஓவியங்களை பாகுபலி புகழ் விஸ்வநாதன் ஆனந்த் மேற்கொண்டுள்ளார். 
    லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பூமி படத்தின் விமர்சனம்.
    நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேறு கிரகத்துக்கு சென்று வர மூன்று வருடங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்கிறார்.

    அங்கு விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதற்காக குரல் கொடுக்கிறார். மேலும் நாசாவில் பயன்படுத்தபடும் யுக்தியை சொந்த ஊரில் செயல்படுத்த முயற்சி செய்கிறார். இதையறிந்த நாசா, ஊரைவிட்டு வருமாறு அழைப்பு கொடுக்கிறார்கள். 

    பூமி விமர்சனம்

    நாசாவின் அழைப்பை ஏற்காத ஜெயம் ரவி, உள்ளூரிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே பகையை ஏற்படுத்திக் கொள்கிறார். இறுதியில் ஜெயம் ரவி, மீண்டும் நாசா சென்றாரா? கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே சண்டை போட்டு விவசாய நிலங்களை மீட்டுக் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, படம் முழுவதும் உணர்ச்சிகரமாக வருகிறார். இவர் பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது. இவரின் கோபம் பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. ஜெயம் ரவியின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று என்றே சொல்லலாம்.

    நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் வழக்கமான கதாநாயகி போல் பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார். ஜெயம் ரவியின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு யதார்த்தம். கலெக்டர் ஜான் விஜய், விவசாயி தம்பி ராமையா, அரசியல்வாதி ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    பூமி விமர்சனம்

    படத்தின் வில்லனாக ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர்தான். ஆனால், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். 

    விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கி இயக்குனர் லட்சுமண். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை இப்படம் பேசுகிறது. விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று பேசும் வசனங்கள் சிறப்பு.   

    இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக தமிழன் என்று சொல்லடா பாடல் அதை உருவாக்கிய விதமும் சிறப்பு. பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார். டுட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் பூமி செழிப்பு. 
    சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள சில்லு வண்டுகள் படத்தின் முன்னோட்டம்.
    சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் சில்லு வண்டுகள். சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா, பூர்வேஷ், கிருஷ்ணா, மித்ரா, ரித்கிருத்தி, ஜோஸ்னா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் அறிமுகமாகியுள்ளனர். மற்றும் கமலி, கார்த்திக், நிரஞ்சனி தனசேகரன், சீர்காழி பாலகுரு, டிரம்பட் பிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் மற்றும் மா.குமார் பொன்னுச்சாமி இருவரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - R.S.விக்னேஷ், இசை - தேனிசை தென்றல் தேவா, எடிட்டிங் - காளிதாஸ், கலை இயக்குனர் – ஜெயகுமார், நடனம் – அஜெய் காளிமுத்து, ஸ்டண்ட் - கஜினி குபேரன், இணை தயாரிப்பு – மா.குமார் பொன்னுச்சாமி, தயாரிப்பு - தி.கா.நாராயணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுரேஷ் K.வெங்கிடி.

     இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.
    நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

    திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    மகேந்திரன்

    இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர் மகேந்திரன். விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்பதே பிளாஷ்பேக்காக வரும்.

    இந்நிலையில் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பதிவு செய்து இருக்கிறார்.
    இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
    இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'நாற்காலி'. 'மூன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார். 'இருட்டு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக வி.இசட்.துரை இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.

    இதில் அமீருடன், '555' திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

    'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் 'நாற்காலி' திரைப்படத்தில் மறைந்தும் மறையாத “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் புரட்சித் தலைவரின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற வரிகளில் தொடங்கும் பாடலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை மாண்புமிகு தமிழக முதல்வர் 
    திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெளியிட மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

    அமீர்

    இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி ஆகியோர் செய்துள்ளனர். ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

    திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    விஜய்

    இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள்.

    அப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் சிம்பு, வில்லனிடம் இருந்து பாரதிராஜா குடும்பத்தை காப்பாற்றினாரா? பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன? ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிம்பு நடிப்பை பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு மட்டுமே ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறார்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் நிதி அகர்வாலின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் நந்திதா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார் பாரதிராஜா. இவருடைய அனுபவ நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பால சரவணனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காமெடியில் கலக்கி இருக்கிறார். 

    கிராமத்து பின்னணியில் குறுகிய நாட்களில் படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்திரன். புதுமையான யோசனைகள், ஆனால் பயனற்ற திருப்பங்கள் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது. சிம்புக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதிக நேரம் பாரதிராஜாதான் திரையில் தோன்றுகிறார். சிம்புவின் நடிப்பு திறனை இயக்குனர் சுசீந்திரன் முழுமையாக உபயோகப் படுத்தவில்லை என்று தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    விமர்சனம்

    தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம். திருவின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை அழகாக காண்பித்து இருக்கிறார்.

    மொத்தத்தில் ஈஸ்வரன் சாதாரணமானவன்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
    தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    ஜனவரி 11-ம் தேதி 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.

    ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச் சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.

    இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

    பார்த்திபன்

    "நண்பர் சீமானிடம் நேரடியாக 'துக்ளக் தர்பார்' குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் 'நாம் தமிழர்' தோழர்களின் முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்".

    இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
    தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'மே டே' என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். 

    ரகுல் பிரீத் சிங்

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் கபடி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

    திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

    மாஸ்டர்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் கில்லி படத்தின் பின்னணியில் கபடி விளையாடுவார். இந்த பாடலை தற்போது படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    ×