என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவி குமார் இயக்கத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொற்றவை’ படத்தின் முன்னோட்டம்.
    சி.வி.குமார் எழுதி இயக்கும் படம் ‘கொற்றவை’. மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. கதையின் நாயகனாக ராஜேஷ் கனகசபை, கதைநாயகியாக சந்தனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். டைரக்டர்கள் வேலுபிரபாகரன், கவுரவ் நாராயணன் மற்றும் அபிஷேக், அனுபமா குமார், பவன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதியிருக்கிறார்.  

    கொற்றவை படக்குழு

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “கொற்றவை, உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம். இவ்வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலமானவை. வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்” என கூறினார்.
    கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
    ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதையடுத்து அவர் இயக்கிய ‘நரகாசூரன்’ படம் சில காரணங்களால் ரிலீசாகவில்லை. பின்னர் அருண்விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்தை இயக்கினார். தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக இயக்குனர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “ஒரு படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள் என கேட்டிருந்தார். 

    கார்த்திக் நரேனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

    விஜய்

    சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதல் நாள் ரூ.25 கோடியும் இரண்டாம் நாள் ரூ.18 கோடியும் தொட்டுள்ளது. 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது.

    இந்த வசூல் தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியை தொடும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளனர். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. அடுத்த வாரத்துக்குள் மாஸ்டர் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது.
    நடிகர் விஜய் பாரம்பரிய உடையணிந்து மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்தாண்டு ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. சுமார் 9 மாதங்களுக்கு பின் தற்போது பொங்கலை முன்னிட்டு இப்படம் நேற்று முன்தினம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.

    இந்நிலையில், பொங்கல் வாழ்த்து தெரிவித்து மாஸ்டர் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் விஜய் உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர் விஜய் வேட்டி சட்டை அணிந்தபடி கலந்துகொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம்வருபவர் சுசீந்திரன், இவரது தாயார் ஜெயலட்சுமி இன்று காலை மரணமடைந்தார்.
    ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த 'ஈஸ்வரன்' படத்தை இயக்கி உள்ளார். இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

    இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 62. திடீர் மாரடப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சுமார் 11 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலட்சுமியின் உடல் தகனம் இன்று மாலை நடக்கவிருக்கிறது.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
    சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், அதையெல்லாம் கடந்து பொங்கலுக்கு வெளியானது.

    இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஈஸ்வரன் படம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஈஸ்வரன் பட போஸ்டர்

    ஈஸ்வரன் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.20 லட்சம் வசூல் கிடைத்துள்ளது.
    போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால், பிரபல நடிகையின் படப்பிடிப்பை விவசாயிகள் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ், அங்கிரேஸி மீடியம், குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ‘குட்லக் ஜெர்ரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இது நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்காகும். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் ராய் தயாரிக்கிறார். சித்திக்சென் குப்தா இயக்குகிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பஸ்சி பதானா நகரில் நடந்து வந்தது. இந்தநிலையில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு விவசாயிகள் திரண்டு வந்தார்கள். அவர்கள் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமானோர் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

    படப்பிடிப்பு குழுவினரிடம் பேசிய விவசாயிகள், ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். 40 நாட்களை கடந்து விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தை இந்தி நடிகர்- நடிகைகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவும் இல்லை’ என்று கூறி படப்பிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஜான்விகபூர்

    அவர்களிடம் இயக்குனர் சித்திக்சென் குப்தா பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் தரப்பில் இருந்து நடிகை ஜான்விகபூர் அறிக்கை வெளியிடுவார். விவசாயிகளுக்காக நிச்சயம் குரல் கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்தார்.

    இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக 3 மணிநேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஜான்விகபூர், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை இந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

    லோகேஷ் கனகராஜ், விஜய்

    இந்நிலையில், விஜய்யின் 66-வது படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலீத் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9 மாதங்களாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பிரகாஷ் ராஜ்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், மணிரத்னத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இன்றளவும் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், பிரபல நடிகருடன் நடித்த படம் டிராப் ஆனது குறித்து தெரிவித்துள்ளார்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

    பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம்  தமிழில் அறிமுகமானார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றுள்ளார். 

    இந்நிலையில், பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து நின்றுபோன படம் குறித்த புதிய தகவலை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பஹத் பாசில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் படத்தில் பழங்குடியினப் பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்தார். 

    மாளவிகா மோகனன்

    20 நாட்கள் மட்டுமே அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 30 சதவீத காட்சிகளே படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில், திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாக மாளவிகா மோகனன் வருத்தத்துடன் கூறியுள்ளார் .
    அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களின் இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்துள்ளது.
    ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.

    அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.

    அஜித், ஹெச்.வினோத்

    இந்நிலையில், இயக்குனர்  ஹெச்.வினோத் தந்தை ஆகி உள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்த அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
    நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான ஓவியா, காதலருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    ஆரவ் - ஓவியா பற்றி காதல் வதந்திகள் பரவின. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஆரவ், 'ஜோஷ்வா: இமைபோல் காக்க' படத்தின் ஹீரோயின் ராஹேவை 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். 

    ஓவியா

    இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் 'லவ்'என தலைப்பிட்டு ஆண் ஒருவரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இவர் தான் காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் ஓவியாவின் பதிவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
    ×