என் மலர்
சினிமா செய்திகள்
பிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இது சர்ச்சையானது.
இதற்கு முன்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. அதே போன்ற நடவடிக்கை விஜய்சேதுபதி மீதும் எடுக்கப்படுமா? இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது? என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. அதில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். என்று கூறி இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து இருக்கிறார்.
விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

'மாஸ்டர்’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை தமிழ் திரை உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் பார்த்து தங்களுடைய பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் விஜய், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணிக்கு முதல் நாள் முதல் காட்சியை பார்த்து இருக்கிறார். மேலும் இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் வைரலாகி வருகிறது.
திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.
திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார். லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், "இனி நடிப்பதாக இல்லை'' என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.
ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய "பொன்னு விளையும் பூமி'' படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.
சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-
"குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.
2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.
இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்'' படத்தை கொஞ்சம் மாற்றி "அவசர போலீஸ்'' என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நான் அவரிடம், "நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.
லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ'வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். "நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே'' என்று நினைத்துக் கொள்வேன்.
இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.
தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.
நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த "பொன்னு விளையும் பூமி'' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
அப்போதும், "நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே'' என்றேன்.
ஆனால் அவர் விடவில்லை. "எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?'' என்றார்.
அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.
அன்றைக்கு `முடியாது' என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. "படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்'' என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.
எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், "இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது' என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்'' என்றார்.
ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் "பொன்னு விளையும் பூமி.''
கைதட்டல்
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, "எப்படி நடிக்கப்போகிறேனோ'' என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் "ரெடி... டேக்'' என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. ïனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.
தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.''
இவ்வாறு நடிகை லதா கூறினார்.
சென்னைக்கு வந்ததும் `ஏரோபிக்ஸ்' வகுப்புக்கு போகத்தொடங்கியிருந்தார், லதா. இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது, விபத்தில் சிக்கினார்.
அதுபற்றி லதா கூறியதாவது:-
"காலை 6 மணிக்கே எழுந்து `ஏரோபிக்ஸ்' கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே `டிரைவ்' செய்தேன்.
கார் `டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டலைத் தாண்டும்போது, நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது. ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு, ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி, பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.
அது காலை நேரம் என்பதால், ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.
அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.
ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, "உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்'' என்றேன். அவரோ, "அதெல்லாம் இருக்கட்டும்மா'' என்று சொல்லி விட்டுப்போய்விட்டார்.
5 மணி நேரம் அப்பல்லோவில் ஆபரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங் இடித்ததில் கொஞ்சம் தவறினாலும், கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.
தெய்வம் போல் அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.''
இவ்வாறு லதா கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகரின் தங்கை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் 'அசுரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பவானி ஶ்ரீ இதற்கு முன்பு, க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக பவானி ஶ்ரீ நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார். நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பதாவது:
" 'மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை.
தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்" என்றார்.
நாயை நேசிப்பவர்களுக்காக இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா புதிய பாடலை உருவாக்கி இருக்கிறார்.
தமிழ், மலையாள மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையைமைத்து இருப்பவர் யதீஷ் மகாதேவா. தமிழில் வெளியான சொன்னா புரியாது , 90ml போன்ற படங்களுக்கு கிரியேடிவ் புரோடிசர் ஆக பணியாற்றி உள்ளார். தற்போது இவர் Twisty Tails தயாரிப்பில் Pet Lovers-க்கான இசை கொண்டாட்டமாக “Follow Follow Me”என்கிற ஆங்கில இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

நாய்கள் வீட்டின் ஓர் அங்கமாகிவிட்ட சுழ்நிலையில் மனிதனுக்கும், நாய்களுக்கும் உள்ள பாசப்பினைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் கொண்டாட்டமாக இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

Twisty Tails'ன் உரிமையாளர் ரேகா டேண்டே மற்றும் பதினாறு பப்பிகளுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தில் நடித்து இருக்கிறார். இப்பாடல் ஆங்கிலத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளிவர
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி இருக்கும் இசை ஆல்பத்தில் பிரபல நடிகை பாடி நடித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்த இசை ஆல்பத்தில் ராப்பர் பாட்ஷா, ஜோனிதா காந்தி மற்றும் உச்சனா அமித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த ஆல்பத்தில் நடனமாடியுள்ள ராஷ்மிகா மந்தனா பாடலையும் பாடியுள்ளாராம்.

இது சம்மந்தமாக இருவரும் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'சலார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், 'சலார்' படத்தின் பூஜை இன்று (ஜனவரி 15) ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 'கே.ஜி.எஃப்' நாயகன் யஷ் கலந்து கொண்டார்.

இன்று படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் 'சலார்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் நிலையில்,படத்தின் வெற்றியை மாஸ்டர் படக்குழு கொண்டாடி வருகிறது.

இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்திருந்தார்கள். மேலும் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா வீட்டில் மீண்டும் விசேஷமான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது.

வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் யஷ்சுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்துள்ள .கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் யஷ்சுக்கு, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த 7-ந் தேதி வெளியாகி உள்ளது. அந்த டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பது, புகையிலையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த விதி கே.ஜி.எப்.-2 டீசரில் மீறப்பட்டுள்ளது. அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். நீங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளீர்கள். நீங்கள் செய்வதை அந்த ரசிகர்கள் பின்பற்றுவார்கள். புகைப்பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட சாத்தியம் உள்ளது. சமூக அக்கறை கொண்ட நீங்கள், சமுதாய நலனுக்காக புகைப்பிடிக்கும் காட்சியை படத்தில் இருந்து நீக்கி சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






