என் மலர்
சினிமா செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதை குறித்தும், அதில் வரும் தனது கதாபாத்திரம் குறித்தும் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, அப்படம் குறித்து கூறியதாவது: “மாநாடு படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இதுவரை வந்திராத புதுமையான படம் மாநாடு. அதனால், இப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘உப்பென்னா’ என்கிற தெலுங்கு படம் வருகிற பிப்.12-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது: “விஜய் சேதுபதி சிறந்த மனிதர். என்னோட நண்பன். கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் என்றைக்குமே பிடிவாதம் பிடித்ததில்லை. அண்மையில் மாஸ்டர் படம் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது” என கூறினார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.
இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.
பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
1982-ல், "அக்னி சாட்சி'' என்ற படத்தை பாலசந்தர் தயாரித்தார். கதை -வசனம் -டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். படம் சிறப்பாக அமைந்தும் சரியாக ஓடவில்லை.
பின்னர் "அச்சமில்லை அச்சமில்லை'', "கல்யாண அகதிகள்'' ஆகிய படங்களை தயாரித்தார். அவள் ஒரு தொடர்கதை, இருகோடுகள் ஆகிய படங்களை கன்னடத்திலும், "வறுமையின் நிறம் சிவப்பு'', "அபூர்வ ராகங்கள்'' ஆகிய படங்களை இந்தியிலும் எடுத்தார்.
1985-ல் அவர் கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்த "சிந்து பைரவி'' மகத்தான படமாக அமைந்தது.
இதில் சிவகுமார், சுகாசினி, சுலக்ஷனா ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாவற்றிலும் சிறந்த படமாக "சிந்து பைரவி'' அமைந்தது.
இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.
(1) சிறந்த நடிகை -சுகாசினி.
(2) சிறந்த இசை அமைப்பாளர் -இளையராஜா.
(3) சிறந்த பின்னணி பாடகி -சித்ரா. (பாடறியேன்... படிப்பறியேன்...'' பாட்டுக்காக.)
சிறந்த நடிகை விருது பெற்ற சுகாசினி இதற்கு முன் பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தரின் படத்தில் நடிப்பது அதுவே முதல் படம். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைக்கக்கூடிய அளவுக்கு நடிக்க வைத்த பெருமை, பாலசந்தரையே சாரும்.
சிந்து பைரவியின் வெற்றி பற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"சிந்து பைரவி படத்தை தொடக்கத்தில் பார்த்த யாருமே இது இவ்வளவு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.
விருது வாங்கும் அளவுக்கு இந்தப்படத்தை நான் கணிக்கவில்லை என்றாலும், "சிந்து'' என்ற கேரக்டரை நான் உருவாக்கியபோதே, இந்தப் பாத்திரம் ஏதோ பெரிதாக பண்ணப்போகிறது என்பது, என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.
சில நேரங்களில் எனக்கு கேரக்டர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனைத் தரும். சில நேரங்களில் என் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எதிர்பாராமல் இன்ஸ்பிரேஷன் தருவார்கள். அந்த வகையில் சிந்துவாக நடித்த சுகாசினி, அந்த இன்ஸ்பிரேஷனை ஓரளவு அதிகமாகவே தந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையைத் தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''
இவ்வாறு பாலசந்தர் கூறினார்.
நடிகை சுகாசினி கூறியதாவது:-
"தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினால், என்னையே நான் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும். இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு விருது நிச்சயமாய் கிடைக்கும் என்று என் உள் மனம் கூறிக்கொண்டே இருந்தது.
நான் இந்த விருதைப் பெறுவதற்கு முக்கிய காரணம் பாலசந்தர்தான்.
முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொன்னபோது, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு காட்சியையும் அவரே நடித்துக்காட்டி விளக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருந்ததால், நமக்கு அதிக சிரமம் இருக்காது என்று எண்ணி ஒப்புக்கொண்டேன்.
அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெரிதுமë மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப்பெண்ணான நான், ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இந்த பரிசைப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன்.''
இவ்வாறு சுகாசினி கூறினார்.
"சிந்து பைரவி'' கதாநாயகன் சிவகுமார் கூறியிருப்பதாவது:-
"கிட்டத்தட்ட 200 படங்கள் செய்து விட்ட எனக்கு, அகில உலகிலும் கவுரவத்தைப் பெற்று தந்த படம் "சிந்து பைரவி.''
இசையில் ஒருத்தி மயக்குகிறாள். இல்லறத்தில் ஒருத்தி மயக்குகிறாள். நடுவிலே, "ஜே.கே.பி.'' என்றொரு அற்புதமான பாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், பாலசந்தர்.
இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின.
பாலசந்தர் அவர்களின் படங்களில் நடிப்பது என்பது சுகானுபவம். காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.
கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.''
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

அனு மற்றும் சக்தி சிவன் நடித்து இயக்கி இருக்கும் ஆட்கள் தேவை படத்தின் விமர்சனம்.
புகைப்பட கலைஞராக இருக்கும் நாயகன் சக்தி சிவன், நாயகி அனுவை காதலித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் ஊரில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் 4 பேர், பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். தொலைந்து போகும் பெண்களை பற்றி போலீசில் புகாரும் வருகிறது. பெண்கள் வீடு திரும்பிய பிறகு அவமானம் என்று கருதி புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்நிலையில், நாயகி அனுவை கடத்து கிறார்கள். இதையறிந்த சக்தி சிவன் போலீசாக இருக்கும் லொள்ளுசபா ஜீவாவிடம் சொல்லுகிறார். அவர் இது போன்று புகார்கள் நிறைய வந்து வாபஸ் பெற்றிருக்கிறது என்று கூறுகிறார். இதை கேட்ட சக்தி சிவனிடம் ஜீவாவிடம் அந்த கேஸ் பற்றிய விவரங்களை பெற்றுக் கொண்டு அனுவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இறுதியில் நாயகியை அனுவை நாயகன் சக்தி சிவன் காப்பாற்றினாரா? ஊரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சக்தி சிவன், பெரிய குறை சொல்லாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்யும் படங்கள் இதற்கு முன் வெளியாகி இருந்தாலும் இப்படம் கொஞ்சம் வேறுபட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை திரைக்கதையில் கொடுத்திருக்கிறார். ஆனால், லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக வரும் அனு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். போலீசாக வரும் ஜீவாவிற்கு அதிகம் வேலையில்லை. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் மைம் கோபி.
கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. சுரேஷ் குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ஆட்கள் தேவை’ சுவாரஸ்யம் குறைவு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் பட நடிகர் மிகவும் பரிதாப நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’பரியேறும் பெருமாள்’. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நாயகன் கதிர் தந்தையாக நடித்து இருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ். நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ், சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அவருடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. அவருடைய வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தினமும் சாப்பிடக் கூட கஷ்டப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்த நஸ்ரியாவின் புதிய டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இந்த செய்தியை நஸ்ரியாவே உறுதி செய்தார். பின்னர் அதை மீட்டெடுத்தார்.
இந்நிலையில் தற்போது நஸ்ரியா தனது தோழியுடன் இணைந்து நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவின் இந்த டான்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தெலுங்கில் உச்ச நடிகராக இருப்பவர் பாராட்டி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் விஜய்யுடன் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தின் அனிருத் இசையமைத்திருந்தார்.
’மாஸ்டர்’ படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அவரின் கதாபாத்திரத்தை பிரபலங்களும் ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவியும், விஜய் சேதுபதியும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய சிரஞ்சீவி, விஜய் சேதுபதி சிறந்த மனிதர் எனவும், கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர் எனவும் பாராட்டினார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் என்று பிரபல நடிகை மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி உடன் கூறியுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

பின்பு ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இந்த முதற்கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் (பிப்ரவரி 7) முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து மாளவிகா மோகனன் கூறும்போது, நானும் தனுஷும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து கற்றது, மேகியின் மீது நமக்கிருந்த பரஸ்பர அன்பு, மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் உங்கள் சிரிப்பு ஆகியவை இல்லாத குறையை உணர்வேன்.
முதல் கட்ட படப்பிடிப்பு மிக உற்சாகமாக இருந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்படும் என்று காத்திருக்கிறேன். இந்த அற்புதமான அணியோடு பணியாற்றியது அற்புதமாகவே இருந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனி முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட்டிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' திரைப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் திரையிட்டு காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார்களாக மம்மூட்டியும் மோகன்லாலும் நலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேர இருக்கிறார்கள்.
மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார்களாக மம்மூட்டியும் மோகன்லாலும் உள்ளனர். இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் எழுந்தாலும் இருவரும் நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோகன்லால் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் விதமாக நாங்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் அவர்களின் மகள் திருமணத்தில் பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.
சந்தானம், சிவா நடித்த யா யா மற்றும் விக்ராந்த், வசுந்தரா நடித்த பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ், டாக்டர் ரூபன் எழுமலை அவர்களின் திருமணம் செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.